Thursday, October 15, 2009

இப்படியும் கூட நடந்திருக்கலாம்...!!!

இடம்: மெனிக் பாம் முகாம்
பங்கேற்ப்போர்: இந்திய எம்.பிக்கள் குழு, முகாம் மக்கள்
டி.ஆர்.வாலு: என்ன எல்லோரும் சௌக்கியம் தானே? இந்த வருசம் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகிகிட்டு இருந்துருபீங்க..தொந்தரவுக்கு மன்னிக்கனும்...நீங்க எதோ இங்க கஷ்டப்படுற மாதிரி அங்க தமிழ்நாட்டுல எல்லாரும் தெருத் தெருவா கத்திகிட்டு இருக்காங்க...தீ குளிக்கிறாங்க. சரி, எதாவது சொல்றதா இருந்தா சொல்லுங்க...எங்களுக்கு நேரம் ஆச்சு...மானாட, மயிலாட தீபாவளி ஸ்பேஷல் போட்டிருப்பாங்க...!! டாக்ளஸ், ஒரு கோக் சொல்லு...
முகாம் நபர்: அய்யா, என் பேரு 'தமிழன்'. உங்ககிட்ட மூனு கேள்விகள் கேக்கனும்...முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், சிங்களனால நாளக்கு இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
டி.ஆர்.வாலு: (தொண்டையை செருமுகிறார்...) இந்த கேள்வி கொஞசம் கஷடமா இருக்கு,பதில் தெரியல..அதனால, சாய்ஸ்'ல விட்டுடறேன்... அடுத்த கேள்வி
முகாம் நபர்:இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
டி.ஆர்.வாலு: ஒரு தமிழனா இந்த கேள்வி என்னை கொல்லுது...யோவ் டக்கு, இன்னுமா கோக் வரலை.... ம்ம்..அப்புறம்...மேல சொல்லு தம்பி...
முகாம் நபர்:மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
( டி.ஆர்.வாலு,இந்த கேள்வியை எதிகொள்ள முடியாமல், டாக்ளஸுக்கு கண் ஜாடை காட்டுகிறார்... உணவு எடுத்துவரும் ஆர்மி வான் வருகிறது..உணவு வேளை)
டி.ஆர்.வாலு:உணவு வேளை முடிந்தவுடன், பேட்டி தொடரும்...
தொல்.குருமா: அண்ணே, அவங்ககிட்ட ஒரு வார்த்தயாவது பேசட்டுமா ?
டி.ஆர்.வாலு: ஒரு எழுத்து கூட பேச கூடாது...சிக்கன கடி..சிக்கன கடி..
(உணவு இடை வேளை முடிந்த பிறகு..)
டி.ஆர்.வாலு: ம்ம்..அப்புறம்..வேர எதாவது கேள்வி இருக்கா ?
மற்றொரு முகாம் நபர்:"அய்யா...என் பேரு வன்னியன். நான் உங்ககிட்ட ஐந்து கேள்வி கேக்கனும் ?
டி.ஆர்.வாலு: ம்ம்...கேளு
மற்றொரு முகாம் நபர்:
முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
நான்காவது கேள்வி: என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு மட்டும் எப்படி உணவு வண்டி அரை மணி நேரம் சீக்கிரம் வந்தது ?
ஐந்தாவது கேள்வி: இதுக்கு முன்னாடி மூனு கேள்வி கேட்ட 'தமிழன்' எங்கே?
--
பழைய மொந்தையில் புதிய கள்ளை கொடுத்த
ம.பொன்ராஜ்

0 Comments: