Wednesday, October 7, 2009

நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம்

வாய்க்கொழுப்பெடுத்து பேசித்திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்றக்கோரி நாளை 08-10 -2009 வியாழன் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.


இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும்நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளான்.இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவ்ர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளான்.மேலும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசித்திரிகின்றான்.

ஆகவே சிங்கள துணைத்தூதரைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.நாளை08-10-2009 வியாழன் காலை 10 மணிக்கு ஆழ்வார்பேடடை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.தமிழர்கள் அனைவரும் முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வாய்க் கொழுப்பில் திரியும் சிங்கள துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நாட்டை விட்டு வெளியேறும் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்




http://www.naamtamilar.org/eventsview.php?Id=33



--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

2 Comments:

சிறுத்தை said...

தோழர் நிலவுபாட்டு! என்னுடைய இந்த புது இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்தால் நன்றியுடையவன் ஆவேன்..

////தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும் இயந்திரங்கள் எதாவது செய்யமுடியுமா?///

http://siruthai.wordpress.com/2009/10/07/தெற்காசிய-பேட்டை-ரௌடியின/

நன்றி!
தோழர் சிறுத்தை

நிலவு பாட்டு said...

தகவலுக்கு நன்றி நண்பரே, உங்களது இடுகை பிரசுரிக்கப்பட்டுள்ளது இப்போது.