Monday, October 5, 2009

சந்துல சிந்து பாடுறது இதுதானா, கருணாநிதியின் புத்தி குறுக்கு புத்தி

நம்ப தமிழ் எம்.பி.ங்க எல்லாம் டெல்லிக்கு போனாங்க இல்ல. பிரதமரை சந்திக்குற அந்த நிகழ்ச்சியில திருமாவளவன் கலந்துக்க முடியல. தாமதமா போயிருக்காரு. அதுக்கு பிறகு சோனியாவை சந்திச்சப்போதான் திருமா கலந்துகிட்டாரு. அந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கிற இலங்கை அகதிகள் எல்லாம் பல வருஷமா இங்கன இருக்காங்க. அவிங்களுக்கு இந்திய குடியுரிமை வேணும்னு கேட்டதோட, தமிழ்நாட்டுல இருக்கிற அகதிகள் முகாம் நிலையை பற்றியும் எடுத்துச் சொன்னாராம். கவனமா கேட்ட சோனியா அப்படியான்னு ஆச்சர்யப்பட்டு இந்த விஷயத்தை பிரதமர்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டிருக்காரு.

"இல்லீங்கம்மா. நான் லேட்டா வந்தேன்னாரு திருமா. போய் பிரதமர்கிட்ட சொல்லுங்கன்னு முடிவா சொன்னாரு. அந்த நேரத்துல கூட இருந்த டி.ஆர். பாலுகிட்ட திருமா பேசியிருக்காரு. அப்புறம் கூட்டா சேர்ந்து பிரதமர்கிட்ட பேசியிருக்காங்க. அந்த சம்பவம் பத்தின தகவல் அப்படியே தமிழின தலைவருக்கு வந்தது. ஆகா நடந்துடும் போலிருக்கே. அந்த அம்மா சோனியா இம்புட்டு விவரமா காதுகொடுத்து கேட்டிருக்கே. விடக்கூடாதுன்னு ப்ளான் பண்ணாரு. உடனே நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் போட்டு அவரு கையில எடுத்கிட்டாரு.

இந்த விஷயத்தை ஒரு காங்கிரஸ் கட்சி வி.ஐ.பி.தான் எதார்த்தமா சொன்னாருப்பா" என்றார், சுவருமுட்டி ங்கொய்யால.. இம்புட்டு விஷயம் இருக்கா. அதான பார்த்தேன். ஏன்னா இத்தனை வருஷமா கலைஞர் தமிழ் நாட்டுலதான இருக்காரு. முதல்வராகி மூன்று வருஷமாகுது. இம்புட்டு நாளும் தோணாத இந்த உணர்வு திடீர்னு எப்படி வந்துடிச்சின்னு அப்பவே சந்தேகப்பட்டேன்

நன்றி குமுதம்

0 Comments: