Sunday, March 8, 2009

தம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…

முதலில் தமிழ்மண முகப்பில் தடை செய்யப்பட்டவர்களுக்காக எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். தமிழ் மணத்தின் இந்த செய்கை பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி இங்கு நான் என் பதிவுகளை தொடர்கிறேன். தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற என்னால் முடிந்தது அவன் விரோதியோ/நண்பனோ யாராயிருந்தால் எனக்கென்ன. என்னை தமிழ் மணத்திலிருந்து நீக்கினாலும் என் குரல் ஓயாது உழைக்கும். உண்மைகளை தட்டி கேட்கும்.

2 Comments:

Anonymous said...

நிலவு பாட்டு:
தமிழ்மணம் தடை என்று அலட்டுவதை நிறுத்துங்கள். தமிழ்மணம் உங்களுக்கு எதிராக ஏதும் வேலை செய்யவுமில்லை. தமிழ்மணத்திலிருப்பவர்கள் ஈழத்துக்கு எதிரானவர்களுமில்லை. ஒருவேளை தமிழ்மணத்திலிருப்பவர்கள் உங்களிலும்விட ஈழத்துக்காக அதிகளவிலே குரல் கொடுப்பவர்களாகவுமிருக்கலாம். எதற்கும் கொஞ்சம் விசாரித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எவருக்கு என்ன தடை என்றேனும் சொல்லமுடியுமா? செய்திகள் பிரிவிலே அத்தனை பதிவுகளுமிருக்கின்றனதானே? எதற்காக, கொஞ்சமேனும் யோசனையின்றி திட்ட ஆட்களின்றி நட்புச்சக்திகளிலேயே உதைத்துக்கொண்டு திரிகின்றீர்கள்?

பதிவர்களின் சொந்தக்கருத்துகளுடனான பதிவுகளும் செய்திகளைப் பெருமளவிலே ஒத்தி-ஒட்டித்தரும் பதிவுகளும் வித்தியாசமானவை. அதற்காக, செய்திகளின் அழுத்தத்தினைத் தமிழ்மணம் குறைத்து மதிப்பிடுகிறது என்பதாக அர்த்தமில்லையே?

தமிழ்மணத்திலிருந்து எவரையும் எவரும் நீக்கியதாகத் தெரியவில்லை

Thamizhan said...

முகப்பிலே மாற்றியுள்ளதை கொட்டை எழுத்தில் போடுங்கள்.
உடனே தெரியும் எங்கே அந்தப் பதிவுகள் உள்ளன என்று.
தமிழ்மணம் மாற்றியுள்ளது தெரிந்தால் படிப்பவர்கள் நேரே அங்கே சென்று படிக்கலாம்.