Monday, March 30, 2009

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது: கலைஞர் கருணாநிதி, ஆனால் காங்கிரஸ் தமிழின அழிவிற்கு நான் வேடிக்கை பார்ப்பது

பற்றி எல்லாம் கேட்ககூடாது.

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற
திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்ப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

0 Comments: