Thursday, March 12, 2009

தமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,

தமிழ்மணமே உனக்கு எங்களது தமிழ் உணர்வாளர்கள் சார்பாக இந்த புகார் கடிதம் அளிப்பதில் மிகுந்த கவலையடைகிறேன். தமிழனை காப்பாற்றுவதற்கு இன்று தமிழனிடமே போராட வேண்டியிருக்கிறது, மன்றாட வேண்டியிருக்கிறது. உரிமை கிடைக்கும் வரை அமைதியான முறையில் போராடுவது ஒன்றே வழி.

இங்கு நமது நண்பர் RB அவர்கள் அழகாக எடுத்துரைத்த இதையே உனக்கு புகாராக அனுப்பலாம் என்று இருக்கிறேன். போதுமான அளவுக்கு முந்தைய பதிவுகளில் எடுத்து சொல்லியாகி விட்டது, எதற்கு தமிழின உணர்வாளர்கள் முகப்பில் வேண்டும் என்று. இதற்கு மேலும் விளக்கம் கூறத்தேவையில்லை.

இங்கு எந்த எதிர்மறையான கருத்துகளும் பின்னூட்டங்களில் அனுமதிக்க போவதில்லை.

உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் கையெழுத்து போட்டு செல்லுங்கள், மீண்டும் தமிழின உணர்வாளர்களை தமிழ் மணத்தில் முன்பு போல் முகப்பில் காட்ட வேண்டும் என்று.

மறக்காமல் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். இனி நண்பர் RB அவர்களின் கருத்தினை பகிர்ந்து கொள்வோம்.

I'm a regular visitor of Tamilmanam and I highly appreciate the service provided by the Tamilmanam.

We are getting very limited time to browse internet due to our busy work schedule. During this short period, we try to get all the news about Sri Lankan Tamil struggle and its reflection in Tamil nadu. Mike did a wonderful job by spending valuable time to collect all relevance news and posting it in a single place which we could not do it from here.

There are hundreds of people, like me, who don’t have much time to visit each and every web site like Kumudam, Vikatan, Puthinam, Pathivu, Nitharsanam, sangathi etc…..and read the articles relevant to Tamil struggle.

I understand the Tamilmanam’s intention to improve their website but it (improvement) should not tarnish the real purpose of the website. What is the purpose of the Tamilmanam? It would be improve the writing skills of the Tamil speking people and provide a platform to shear their thoughts. If you want to improve the writing skills of the Tamil people, first of all you need Tamil people. That mean you need ‘Wall’ to draw a painting. If there is a danger to the ‘wall’ you have to try your best to save the ‘wall’ not the painting. If you can save the wall, any time you can draw a painting on it.

That is happening to Tamils today in Sri Lanka. Tamils are in danger and we need to save them at any cost and any mean. If you can save them now, then you can save their Tamil writing skills later or it will be saved automatically.
I humbly request the Tamilmanam administrator to allow the people, like Mike, who are sincerely and affectionately doing something to the Tamil or Tamil people.
Improvement is very very important but existent is important than that. Do your website improvement later not now.

-RB from Dubai

8 Comments:

Mike said...

RB அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாம் ஈழத்தமிழர்களை காக்கவிட்டால் இனி தமிழினம் ஒன்று இலங்கையில் இருந்தது வரலாறாக மட்டுமே இருக்கும். மீண்டும் தமிழ்மணம் முன்புபோல் இருக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். அனைத்து தமிழின உணர்வாளர்களையும் முகப்பில் இணைத்து, தமிழ் நிகழ்வுகள், படுகொலைகள் இன்னும் அதிக உலக மக்களை சென்றடைய வேண்டும் என்ற பார்வையில் மீண்டும் தமிழன உணர்வாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

எல்லாளன் said...

தமிழ்மணம் முன்பு போல் முகப்பில் எங்களது பதிவுகளை இடவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

எல்லாளன் said...

நிலவுப்பாட்டு இதை ஒரு போல் ஆகவும் மாற்றுங்களேன்

இதை பதிலாக இடவேண்டாம்

நிலவு பாட்டு said...

நன்றி எல்லாளன் அவர்களே, இப்பொழுது வாக்க்குபதிவு சேர்க்கப்பட்டுள்ளது.

தேவன் said...

தேவன்;
நிலவுப்பாட்டு, மைக்கின் கருத்துகளோடு உடன் படுகின்றேன். தமிழ்மணம் முன்பிருந்த நடைமுறைக்கு திரும்ப வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்!

Anonymous said...

ஆங்கில பதிவின் தமிழாக்கம்

நான் தமிழ்மணத்திற்கு அடிக்கடி வருகை தருபவன், உங்களினது சேவையினை பெரிதும் மதிக்கின்றேன்.

எங்களுக்கு இருக்கும் வேலை பளுவுக்கு இடையில் கிடைக்கும் குறைந்த நேர இண்டர்நெட் நேரத்தில், இலங்கை சம்பந்தமான அனைத்து செய்திகளும், தமிழர்கள் அதைபற்றி என்ன நினக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளவிரும்புகிறோம்.

மைக் இந்த வேலைகளை ரொம்ப அருமையாக செய்து வந்தார். அனைத்து பதிவுகளையிம் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வசதியாக இருந்தது.

என்னை போன்று நூற்றுகணக்கானவர்கள் நேரமின்மையின் காரணமாக புதினம், விகடன், பதிவு, நிதர்சனம், சங்கதி போவதற்கு மிககடினம்

தொடரும் நாளை ...

ARASIAL said...

நிலவுப் பாட்டு நண்பரே...
உண்மையில் உங்களை நினைத்து மகிழ்கிறோம். தமிழ்மணம் தந்த ஏமாற்றத்தைவிட தங்கள் விடாத முயற்சிக்கு எமது நன்றிகள்.

எமது பதிவுகள் முகப்பில் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தை விட, குரல் கொடுக்க நல்ல உள்ளம் ஒன்று உள்ளதே என்ற சந்தோஷம்தான்.

இங்கே பலர் தங்கள் சனாதன தர்மத்தை விடாமல் கட்டிக் காப்பதை உணர்ந்து கொள்ள இந்த தருணமும் பயன்பட்டது.

தமிழ்மணத்தின் இந்த வரட்டுப் பிடிவாதம் எம்மைப் போன்றவர்களுக்கு பெரிய அவமானம், அதிர்ச்சிதான். காரணம் நாம் இதை எதிர்பார்க்கவில்லை.

நாம் எழுதிய ஒரிஜினல் கட்டுரை 'செய்தி மூலை'யில்... அதையே காப்பியடித்திருக்கும் ஒரு நண்பரின் பதிவு முகப்புப் பக்கத்தில்...!!

நல்ல நேர்மை தமிழ்மணத்தில்.

ஆனால் நம் தமிழுணர்வில் எப்போதும் நேர்மையுண்டு. நமக்குப் பிடித்தவற்றை எப்போதும் போல எழுதுவோம்.

திறக்கும் வரை தட்டிக்கொண்டே இருப்போம்.

எஸ்.சங்கர்
என்வழி

Anonymous said...

அய்யோ நிங்க செஞ்ச தப்பு எல்லாம் என்ன தெரியுமா? கலைஞரை மைக் போன்றவர்கள் வயது வித்யாசம் பார்காம திட்டியது தான். என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க!இனி தமிழகத்தில் இருந்து உங்களுக்கு நோ ஆதரவு! தமிழ்மணத்துக்கும் இது தெரியும்!

இந்த நிலை நீடிச்சா அதாவது உங்க லங்கா ஆதரவு கலைஞரை தீவிரமா எதிர்த்தா சன் டிவி, கலைஞர் டிவி எல்லாம் திரட்டி ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்தாச்சு. பின்னே அதன் விளம்பரம் எல்லாம் அதன் அச்சு ஊடகத்தில் வரும். அதன் பின் டிவியில் வரும். நல்லா எழுதினாலும் எழுதாட்டியும் தினகரன், குங்குமம்ல வரும்
பின்ன தமிழ்மணம் உங்களை மாத்திரம் வச்சிகிட்டு ஈ ஓட்டனும். அதலாம் தமிழ்மணத்துக்கு நல்லா தெரியும்!

நீங்க இனிமே புலம்புவதை விட்டுடுங்க.