Monday, March 9, 2009

எல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்

இவருடைய பதிவுகள் இன்னும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவருக்காக.

வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து வெளியிடும் உங்கள் சேவைகளுக்கு முதற்கண் நன்றிகள் சுயமான எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனாலும்

ஈழத்தமிழர்களின் அவலங்களை ,செய்திகளை ,நியாங்களை சகல சர்வதேச ஊடகங்களும் சிறிலங்கா அரச பயங்கரவாதமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அருவருடிகளும் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் நேரத்தில்

ஒரு சில வலைப்பதிவாளர்களால் தான் அவை வெளிக் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தது அதற்கும் இப்போது தமிழ்மணம் தனது திரட்டியில் ஆப்பு வைத்திருக்கிறது


தமிழ ஆளும் வர்க்கத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பேச்சாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பேச்சுரிமை சாகடிப்பட்டுக் கொண்டிருக்க வலைப்பூவிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதன் தொடர்ச்சியே இப்படியான நடவடிக்கை என்று எண்ணத்தோன்றுகின்றது


தமிழ்மணத்தில் அண்மைக்காலமாக தமிழக மக்களின் எழுச்சியின் பதிவுகளே ஆக்கிரமித்திருந்தன ஆனால் முகப்பில் அவை எதுவும் காணப்படுவதில்லை நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்

தற்போதைய தேர்தல் காலத்தில் இவை சந்தேகத்தை எழுப்புகின்றது ?????


முகப்பில் உள்ளவற்றை மட்டுமே பலராலும் பார்க்கப்படுகின்றன இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தவிர செய்திகள் என்று முகப்பில் நாலும் வரி மட்டும் காண்பிக்கப்படுகின்றது நானே எனது பதிவினைக் காணவில்லை என்று நிர்வாகத்திடம் முறையிட்ட பின்னர் தான் எனது பதிவு எங்கிருக்கும் என்று அறிந்து கொண்டேன்

எனது வலைப்பதிவு தற்போது 80 % குறைவடைந்து விட்டது

ஏன் நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு வருகையை கவனித்தீர்களா ??


ஈழத்து செய்திகள், அரசியல் தமிழகம் ,ஆய்வுகள் , கட்டுரைகள் , அறிவிப்புக்கள் , பரப்புரைகள் போன்ற பல வகைகளை செய்திகள் என்ற ஒன்றினுள் வகைப்படுத்தி ஒரு சிறிய விடயமாக்கி விட்டீர்கள்


இங்கு வலைப்பதிவுகளின் மூலம் தான் எமக்கு எதிரான இருட்டடிப்புக்களை ,அவதூறுகளை அம்பலப்படுத்தி வந்தோம் அதில் வெட்டி ஒட்டுவது தவிர்க்க முடியாதது


எமது நோக்கம் இவை பலருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே ஒழிய விளம்பரப்படுத்தல் அல்ல


இதை நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்


தவிர புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள அருவருடிகளால் புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுகள் மிகக் குறுகிய கால நேரத்தில் அறிவிக்கப்படுகின்றன அவற்றினை பரப்புவதற்கு எமக்கு இந்த வலைப்பதிவு திரட்டிகள் பெரிய அளவில் உதவி புரிகின்றன


அவை முகப்பில் இருந்தாலொழிய பலரை சென்றடையமாட்டாது

ஆகவே இதற்கு மாற்றீடு செய்யும் வரையில் பழைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது தற்போதைய இந்திய தேர்தல் ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் மாற்றம் இந்திய அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற பின்னனியில்


இருட்டடிப்பு செய்வது தகுமா ?????


இது குறித்து தமிழ்மணம் நிர்வாகமும் உறுப்பினர்களும் ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்


உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்


நன்றி
எல்லாளன்

http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_08.html

16 Comments:

puduvaisiva said...

வணக்கம் நிலவுபாட்டு
ஒரு பழமொழி சொல்லுவாங்க
தூங்கரவனை எழுப்பிடலாம் ஆன தூங்கார போல நடிப்பவனை எழுப்ப முடியாது
அது போல்தான் தமிழ்மணம் நடவடிக்கை உள்ளது.
எங்களுக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுப்பதற்கு நன்றி.

Anonymous said...

உங்கள் கருத்துகளை நானும் ஆதரிக்கின்றேன்.
நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.

இதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.

எப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது.

நீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன்.

நோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.

தமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்...

இப்படிக்கு
நங்கூரம்

Anonymous said...

//தமிழ ஆளும் வர்க்கத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பேச்சாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பேச்சுரிமை சாகடிப்பட்டுக் கொண்டிருக்க வலைப்பூவிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதன் தொடர்ச்சியே இப்படியான நடவடிக்கை என்று எண்ணத்தோன்றுகின்றது //



சுந்தரவடிவேல், தமிழ் சசி, சுடலைமாடன், கார்த்திக்ராமாஸ் இவர்கள் எல்லாம் இப்போது ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கின்றவர்களா?

தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணித்ததாலேதான் stop the vanni genocide இணைப்பினை முகப்பிலே வலப்புறம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறதா? முத்துக்குமாரனுக்கு அஞ்சலிப்பதிவு தமிழ்மணம் சார்பிலே போட்டதா?

கொஞ்சமேனும் நிதானமாக யோசித்துப் பார்க்கக்கூடாதா? கொஞ்சம் ஈழத்தமிழர்களிலே கரிசனை கொண்டவர்களென்றால், செய்திகள் பக்கத்திலே ஓரு சொடுக்குச் சொடுக்கி வாசிக்க முடியாதா?

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியிலே பேசுவது உங்களுக்கே நியாயமாகப்பட்டால் சரிதான்.

இஃது என் சொந்தக்கருத்தானாலுங்கூட
வருத்தத்துடனும் வெறுப்புடனும் ஆத்திரத்துடனும்,
-/பெயரிலி.
இன்னொரு தமிழ்மணத்திலேயிருக்கும் "ஈழப்புறக்கணிப்பாளன்"
:-(

நிலவு பாட்டு said...

/* வணக்கம் நிலவுபாட்டு
ஒரு பழமொழி சொல்லுவாங்க
தூங்கரவனை எழுப்பிடலாம் ஆன தூங்கார போல நடிப்பவனை எழுப்ப முடியாது
அது போல்தான் தமிழ்மணம் நடவடிக்கை உள்ளது.
எங்களுக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுப்பதற்கு நன்றி. */

நன்றி நண்பரே, தமிழனுக்கு தமிழனே உதவா விட்டால் வேறு யாரு உதவுவது நண்பரே. நாம் தமிழர், நம் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். உமக்காக நான் குரல் கொடுக்காவிடில் வேறு யார் கொடுப்பது.

நீங்கள் எல்லாம் சென்ற பிறகு என் 5 விரல்களில் 4-கினை இழந்தது போல் உள்ளது. தனியொருவனாக தமிமிழீழத்து போராடுவதை விட பல கை சேர்ந்தால் நாம் தமிழீழ போராட்டத்தை விரைவாக முன்னெடுத்து செல்ல முடியும்.

எங்குமே நமக்கு போராட்டந்தான், போராடுவோம், போராடுவோம் இறுதி வரை தமிழனுக்காக குரல் கொடுப்போம். தமிழின பற்றாளர்களே இதை புரிந்து கொள்ள மாட்டேங்குது பெரிய வருத்தத்தை அளிக்கிறது. இன்னும் யாரும் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பத்ய் மேலும் வருந்த வைக்கிறது.

நாமக்கல் சிபி said...

பெயரிலி அவர்கள் சொல்லியிருப்பது சரியாகவே இருக்கிறது!

தமிழ்மண முகப்பிலே ஸ்டாப் ஜெனோசைட் தளத்திற்கும், மற்றும் சுந்தரவடிவேல் அவர்களின் பதிவிற்கும் நிரந்த தொடுப்பு கொடுத்துள்ளார்களே!

Mike said...

I have also requested to tamilmanam

Hi Balu,

Thanks for your reply, but i'm not happy about the decision made by you, since you changed me to news section i lost my interest to write and tell message to people.

If you look at my posts, few posts are from other site, i posted only for the purpose of people to read and know what is true/not true.

Some posts are my own and it was attracted to many people. i used to get visitor 500 to 2000 each day.

there is a thread going on here please have a look at this http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_5269.html தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

please change your mind to support us to bring the truth to the world and put us in the main section not for me it's for our tamil people.

Thank you very much for your support.



Many Thanks

Mike said...

/* தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணித்ததாலேதான் stop the vanni genocide இணைப்பினை முகப்பிலே வலப்புறம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறதா? முத்துக்குமாரனுக்கு அஞ்சலிப்பதிவு தமிழ்மணம் சார்பிலே போட்டதா?
*/

இது மட்டுமே போதுமா என்ன, ஈழ விடுதலை முன்னெடுத்து செல்ல. இதுவும் தேவை, இதற்கு மேலும் தேவை. மக்களின் அறியாமையை விரட்டி அவர்களுக்குள் ஒரு விழிப்பை கொண்டு வரவேண்டுமானால் ஒவ்வொரு நொடியும் நாம் உழைக்க வேண்டும்.

எல்லாளன் said...

நன்றிகள் அனைவருக்கும் குறிப்பாக நிலவுப்பாட்டு, மைக்,சிவா

எனக்கு தமிழ்மணம் பாலு அவர்களால் பதில் தரப்பட்டது அதில் அவர்களுடைய முடிவில் மாற்றம் இல்லை எனவும்

செய்திகள் தொடர்பாக மாற்று ஒழுங்கு ஆராய்வதாகவும் சொல்லப்பட்டது

முகப்பில் இரண்டு வரிகளை இட்டு விட்டு இரண்டாயிரம் பதிவுகளுக்கு ஆப்பு அடிக்கப்பட்டிருக்கிறது

நாங்கள் தமிழ்மணத்தை ஈழ ஆதரவு அற்றவர்கள் என்று வாதிடவில்லை

ஆனால் தவறு நிகழ்ந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றோம்

நிலவு பாட்டு said...

/* நன்றிகள் அனைவருக்கும் குறிப்பாக நிலவுப்பாட்டு, மைக்,சிவா */

நன்றி நண்பரே, நம் கடமை வேறு ஏதோ இன்று நாம் எதையோ எதிர்த்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். எல்லாம் அவன் செயல். விடிவு பிறக்கும் தமிழர்களுக்கு.

Anonymous said...

மைக், எல்லாளன்
தனிப்பட்ட முறையிலே வாதாடவிரும்பினால், ஈழத்தவன் என்றளவிலே எனக்கு(ம்) நிறையச் சொல்லமுடியும். "தவறு நிகழ்ந்திருக்கின்றது" என்றால், தவறினை எப்படி நிர்ணயிக்கின்றீர்கள்? குறைந்தபட்சம், புரிந்துகொள்ளவேனும் முயலுங்களேன்.

மைக், இணைப்பினைக் கொடுப்பதுமட்டும் எதையும் சாதிக்கமுடியாதென்று நான் அறிவேன் - அதாவது, தமிழ்மணத்தின் முகப்பிலே வன்னி இனப்பேரழிப்பினைப் பற்றிய இணைப்பினைக் கொடுப்பது மட்டும்; உங்கள், எல்லாளனின் பதிவுகளைப் பற்றிச் சொல்லவில்லை. வன்னி இனப்படுகொலைக்கு எதிரான கூட்டுப்பதிவுகூட தமிழ்மணத்திலே வந்து கொண்டுதான் இருக்கின்றது - வரும்; வரவேண்டும்.

செய்திகளைத் தரும்போது, செய்திகளைச் செய்திகளாகவே தனியே தரும் ஒரு பகுதியாகத் தரும் முறை ஏற்கனவே இருப்பதுதானே? அவ்வகையிலேதானே ஒழுங்குமுறை செய்யப்பட்டிருக்கின்றது. உங்களுக்கு இதையே புரிந்துகொள்ளமுடியவில்லை? திரட்டி என்பது விதியோடுதானே இயங்கமுடியும்? நாளைக்கே, ஐம்பது காங்கிரஸ் தறுதலைகள் காங்கிரஸ்சம்பந்தப்பட்ட செய்திகளை ஆளுக்கொரு பதிவாகப் போட்டு வைத்தாலும்,இதே விதிதானே செயற்படமுடியும்?

ஈழச்செய்திகளை வாசிக்கின்றவர்களுக்கு செய்திகளுக்காகவே வரும் பக்கத்திலே போய் வாசிப்பது இலகுவானதொழிய, மேலும் கஷ்டம் தருவதல்லவே? நான் கடவுள், வடிவேலு காமெடியினை உச்சத்திலே சூடாக்கி ஏற்றிவைக்கும் தமிழ்ச்சமுதாயமா நம்மைக் காப்பாற்றப்போகிறதென்ற கேள்வி என்னிடமிருந்தாலுங்கூட, அதை இப்போதைக்கு வாதத்துக்குத் தொடாமலே விட்டுவிடுகிறேன். சூடாகும் சில பதிவுகளை நான் மாதக்கணக்கிலே படிப்பதுகூடவில்லை. இவர்களுக்குப் பக்கத்து வீட்டிலே நெருப்பெரிந்தாலுங்கூட, இலக்கியமயிர்ப்பீலி விசுக்கும் பொய்வேலை காட்டவேணும்; "இளையராஜா மொட்டை பெரிதா? ரஹ்மான் முடி பெரிதா?" என்று அடிமுடி தேடவேணும். அங்கே எரியும்போது, இதை இவர்கள் என் முன்னே பேசினால், மூஞ்சியைப் பொத்தி இரண்டு இழுக்கலாமென்றுதான் தோன்றுகிறது. ஆனால், அதற்காக, சூடான இடுகையிலே தோன்றும்போது, விட்டுவிடமுடியுமா? அதைவிடுங்கள்? அங்கே சனம் சாகும்போது, அது பற்றி வேறேதும் கரிசனையின்றி கூகுல் விளம்பரத்திலே உங்கள் ஜிமெயில் மேட்டிலே சூட்டோடு சூட்டாக பிரபாகரன் புத்தகம் விற்பவர்களையும் கடந்துகொண்டுதான் போகவேண்டும். என்ன செய்யமுடியும்? நியதி ஒன்றை வகுத்துக்கொண்டால், அதற்கேற்ப ஒழுகினால், மட்டுமே வாய்ப்புண்டு. அவ்வகையிலேயே செய்திப்பிரிவுகளிலே செய்திப்பதிவுகளைச் சேர்ப்பதுமாகும். நான் ஈழத்தவன் என்ற வேரினாலோ, தமிழ்மணத்திலேயிருப்பவர்களிலே குறிப்பிடத்தக்கவர்கள் ஈழத்தமிழாதரவாளர்கள் என்பதாலோ, விதிக்கு மாற்றாக ஏதும் செய்தால், இதையே வைத்துப் பிழை(சுட்டி)க்கும் எத்தனையோ கும்பலிருக்கும். இவையெல்லாம் எதற்காக உங்களுக்குப் புரியவில்லை? :-(

ஒரு காலகட்டத்திலே தமிழ்மணத்தினை இந்திய எதிரிகள், ஈழத்தமிழர் ஆதரவு என்று ஒரு கும்பல் ஈ-கல்லெடுத்து அடித்தது. அஃது அத்துணை தமிழ்மணத்துக்கு வலித்திருக்காதென்றே தனிப்பட எனக்குப் படுகிறது :-(

நிற்க; தமிழ்மணத்தினை ஈழ ஆதரவு அற்றவர்கள் என்று நீங்கள் ஒரு பேச்சுக்கு வாதாடினாலுங்கூட, அதிலே அர்த்தமில்லையென்று ஈழத்தமிழர்களை வெறுக்கும் அந்தக்கும்பலுக்கே தெரியும்.
:-(

Mike said...

இந்த பெயரிலி என்பவன் பலமுறை தமிழின துரோக வேலைகளை என் பதிவுகளில் காட்டியவன்.

இவனுக்கு நாங்கள் இல்லாதது கொண்டாட்டமே. எல்லாம் எங்க நேரம்டா. பேசு நல்லா பேசுடா. உண்மை ஒரு நாள் வெல்லும். ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு வராமல் போகுமா என்ன. ரொம்பதான் கூவாதா, அங்கே ஹம்சாதான் நல்ல போட்டு கொடுக்கறான் இல்ல. அவனுக்கு தமிழ் தெரியாது. சும்மா போயி கதை விடு அவண்ட்ட.

Anonymous said...

மைக்,
/இந்த பெயரிலி என்பவன் பலமுறை தமிழின துரோக வேலைகளை என் பதிவுகளில் காட்டியவன்./

அப்படியா? சரி.

/இவனுக்கு நாங்கள் இல்லாதது கொண்டாட்டமே./

அப்படியுமா? அதுவும் சரியே.

மேற்கொண்டு சொல்ல ஏதுமில்லை.

நீங்களே பேசுங்கள்.

Mike said...

/*அப்படியுமா? அதுவும் சரியே.

மேற்கொண்டு சொல்ல ஏதுமில்லை.

நீங்களே பேசுங்கள்.
*/

நாங்க என்னத்த பேசறது, அதான் ஹம்சா வழியா நல்லாதான் சொல்றீங்களே. தமிழினம் இன்னும் அடையாளம் தெரியாமல் இருக்குது துரோகி யாரு, நண்பன் யாரு தெரிய மாட்டேங்குது.

நல்லவர்களுக்கு என்றும் எங்கும் சோதனை உண்டு, கடைசியில் அவர்கள் வெல்வார்கள். தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மம் வெல்லும் நண்பா.

Mike said...

மன்னிக்கவும் பெயரிலி, நான் தவறாக புரிந்து கொண்டேன் பெயர் குழப்பம், நீங்கள்தான் வெத்துவேட்டு என்று.

ஆனாலும் உங்கள் கருத்திலிருத்து மாறுபடுகிறேன். ஆனாலும் துரோகிகள் ஒரு பக்கம், தமிழின ஆதரவாக இருந்தும் புரியாத நீங்கள் ஒரு பக்கம். எப்படி விளங்க வைப்பது என்றே தெரியவில்லை.

கொஞ்சம் இங்கு சென்று பாருங்கள்.
http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_5269.html

Anonymous said...

மைக் நீங்க வேற, இவனுங்க சீமான் கைதையும் சரின்னுதான் சொல்லுவானுங்க, சீமானின் கதியே இன்று உங்களுக்கும். உண்மை பேச கூடாது, ஏதாவது ஒரு கட்சிக்கு ஜால்ரா அடிக்கனும் இதெல்லாம் இல்லாட்டி கொஞ்சம் தாக்கு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் இருக்குது பாருங்க. முட்டா தமிழன், உங்க பொழப்ப பாருங்க மைக். நிம்மதியா குடும்பத்தோட இருங்க. எதுக்காக ராப்பகலா உழைக்கிறிர்கள். அலுவலகம் விட்டு வந்தோமா, டிவி ல ஒரு 2 மணி நேரம் செலவழிச்சோமான்னு ஜாலியா இருங்க.

எவன் செத்தா உங்களுக்கென்ன, மரியாதை குடுக்க தெரியாத மடையர்கள் இவர்கள். தானும் பேச மாட்டான், அடுத்தவனையிம் பேச விடமாட்டான். மலையாளத்தான் சரியாத்தான் சொல்லி இருக்கான். பாண்டி, பாண்டின்னு. நீங்களும் பாண்டியாவே இருந்திடுங்க, உங்களை தூக்கி வைப்பானுங்க இவனுங்க.

அன்புடன், கோபமுடன்
தோழன் தேவா

Anonymous said...

So even here, there is politics. Even I was wondering, what, people are thinking beyond films...

It does look like Eelam issue will need to be taken to the international front at greater impact. Frankly, I feel that they are sure to have a bigger impact. It would be better if blogs were written in English and publicized more. Especially, for English speakers to become familiar with the issue from a root, and to know the feelings of millions of Tamils within Tamilnadu and outside. As I said, I believe it's high time blogs were done in English, maybe a blogfeed for English blogs by Tamil bloggers can be made?
- Kajan

-Kajan