Wednesday, July 29, 2009

வீரமணியின் மூக்கு உடைப்பு, கருணாநிதியால் பிழைத்தார் தற்காலிகமாக

பெ‌ரியா‌ர் கரு‌த்து‌க்களை வெ‌ளி‌யிடு‌ம் ‌விவகார‌ம்: பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌‌ர் கழக‌த்‌து‌க்கு ‌உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

பெரியார் கருத்துக்களை பெரியார் திராவிட‌ர் கழகம் வெளியிடலாம் என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து திராவிடர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி மேல் முறையீடு மனுவை ‌விசா‌ரி‌த்த சென்னை உயர் நீதிமன்ற‌ம், இப்பிரச்சனையில் தற்போதுள்ள ‌நிலை நீடிக்க வேண்டும் என்று‌ உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது. மேலு‌ம் இது தொட‌ர்பாக ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம்படி பெரியார் திராவிட‌‌ர் கழகத்துக்கு தா‌க்‌கீது அனுப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

குடியரசு பத்திரிகையில் வெளிவந்த பெரியாரின் படைப்புக்களை தொகுத்து குறுந்தகடாக வெளியிட பெரியார் திராவிட‌ர் கழகம் முடிவு செய்து அறிவித்தது. இதை எதிர்த்து திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையின் தலைவருமான ‌கி.‌வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அ‌தி‌ல், ''பெரியாரின் படைப்புகளை வெளியிடும் முழு உரிமையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளைக்குத்தான் உண்டு. பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் வீரமணி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, திராவிடர் கழக பொதுச் செயலர் ‌கி.வீரமணியின் மனுவை ‌நிராக‌ரி‌த்தா‌ர். ''பெரியார் தனது படைப்புகள் குறித்து யாருக்கும் உரிமையை பதிவு செய்து கொடுக்கவில்லை. எனவே அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை'' என்று நீதிபதி தீர்ப்ப‌‌ளி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌‌தீ‌ர்‌ப்பை எதிர்த்து ‌கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இ‌ன்று மேல்முறையீடு செய்தார். அ‌ந்த மனு‌வி‌ல், ''குடியரசு பத்திரிகையில் வெளிவந்த பெரியார் கருத்துக்கள், படைப்புகள் ஆகியவற்றை தொகுத்து குறுந்தகடாக வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த குறுந்தகட்டை குறுக்கு வழியில் கைப்பற்றி பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முயற்சி செய்கிறது.

இதை தனி நீதிபதி தமது கருத்தில் சொல்லவில்லை. பெரியார் திராவிடர் கழகத்துக்கு அனுமதி அளித்தால் எங்களுக்கு பேரிழப்பு ஏற்படும். எனவே அவர்கள் வெளியிட இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனு நீதிபதிகள் கே.ரவிராஜபாண்டியன், பி.எஸ். ஜனார்த்தன ராஜா ஆகியோரைக் கொண்ட அம‌ர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது ‌‌கி.வீரமணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் தியாகராஜன், வீரசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அவர்களின் வாதங்களை கே‌ட்டு‌க் கொ‌ண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பாக ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம்படி பெரியார் திராவிடர் கழகத்துக்கு தா‌க்‌கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 Comment:

வெண்தாடி said...

ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்கள் காலை நக்கி நாய் பிழைப்பு நடத்தும் வாய் சவடால் வீரன் கோழைமனிக்கு ? சரியான செருப்படி.