Monday, March 30, 2009

Dilbert - Do you have a minute?

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது: கலைஞர் கருணாநிதி, ஆனால் காங்கிரஸ் தமிழின அழிவிற்கு நான் வேடிக்கை பார்ப்பது

பற்றி எல்லாம் கேட்ககூடாது.

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற
திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்ப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

Sunday, March 29, 2009

கருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்த தேர்தல்

செய்திகள் ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுவதில் உண்மையில்லை எனவும் அதை யாரும் ஏற்கமாட்டார்கள் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:


1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. செயற்கு ழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கோபமடைந்தார் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது, இந்தியாவின் கட்டுப்பாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு தி.மு.க. ஆட்சி உள்ளது என இந்திரா காந்தி குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுநாள் 1977, ஜனவரி 31-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது

1972-ல் தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தி.மு.க. அமைச்சரவை மீது 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போது இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு நெருக்கடி நிலையை கொண்டு வந்த அதே காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. அக்கூட்டணி தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது கருணாநிதி அளித்த நிர்பந்தம் காரணமாக 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அரசை, மத்திய அரசு கலைத்தது

1983-ம் ஆண்டில்தான் இலங்கை இனப் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார். ஈழத் தமி ழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் கருணாநிதி இராஜிநாமா செய்தார்

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. வி.பி. சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. வி.பி. சிங் பதவி இழந்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமரானார்

வி.பி. சிங்கோடு நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, ராஜீவ்காந்தி ஆசியோடு தி.மு.க. அரசு அப்போது கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் விடுதலைப் புலிகளை அடக்க கருணாநிதி தவறிவிட்டார் என்பதும் ஒன்றாகும்

ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. எனவே ஆட்சி கலைப்புக்கு மத்திய அரசு கூறியது உண்மையான காரணமல்ல.

1980-ம் ஆண்டில் இந்திரா காந்தி உதவியோடு எம்.ஜி.ஆர். ஆட்சியை கருணாநிதி கலைத்தார். அதே காரணத்தால்தான் 1991-ல் ராஜீவ்காந்தியின் உதவியோடு தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்பட்டது எனவே இரண்டு முறை தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் உள்ளூர் அரசியல், தில்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள் மற்றும் அப்போது ஏற்பட்ட கூட்டணி மாற்றங்கள் உள்ளிட்டவையே காரணம்

ஆகவே ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனி மேலும் கருணாநிதி கூறினால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

தெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்கக்கடிதம்


திரு.டக்ளஸ் தேவானந்தா,
திரு.கருணா,
திரு.பிள்ளையான்

ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம்.

உனை நீ அறி

இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள்.


உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இனத்துக்கே துரோகம் செய்தவர்கள் நாளைக்கு எங்களுக்குச் செய்யாமலா விடப் போகிறார்கள் என்று உங்களைப் பற்றி நினைப்பாரகள். அவர்கள் அப்படி நினைப்பது உங்களுக்குத் தெரியுமா?.



இராணுவத்தளபதி தமிழர்களைப்பற்றி பொறுப்பற்ற விதத்தில் பேசியதைப்பற்றி அவரிடம் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அப்படிக் கேட்க என்று கேட்டீர்களா?. கேட்க மாட்டீர்கள் ஏனென்றால் மந்திரிப் பதவி போய்விடும் என்ற பயம்.

முழுத்தமிழர்களையும் இலங்கையிலிருந்து அழித்தொழிப்பதுதான் இலங்கையரசின் நோக்கம். உங்களையும் வைத்துக் கொண்டுதான் இதனை இலங்கையரசு செய்கின்றது. இலங்கையில் அழித்தொழிக்கப்படும் ஒவ்வொரு தமிழனின் இறப்புக்கும் நீங்களுந்தான் பொறுப்பு.

இலங்கையில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் இனத்துவேசம் விசமாகத் ததும்பி வழிகின்றது. அந்தப் பத்திரிகைச் செய்திகளுக்கு தங்கள் கருத்தை எழுதும் சிங்கள வாசகர்கள் முற்றுமுழுதாக தமிழர்களுக்கெதிரான சிங்களவாதிகளாகவே இருக்கிறார்கள். ஒருவரிடமும்கூட நேர்மை நியாயத்தைக் காண முடியவில்லை.

ஆனால் நீங்கள் மனிதர்களாகக்கூட இல்லையே.சிங்களவர்களை மதிக்கிறோம். அமைச்சர்களிலிருந்து சாதாரண அன்றாட உழைப்பாளிச் சிங்களச் சகோதரர்கள் வரை இன மானம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு சிங்களச் சகோதரனும் தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. தன் இனத்தைக் காட்டிக் கொடுக்காத அத்தனை சிங்களச் சகோதரர்களையும் மதிக்றோம். ஆனால் நீங்கள்….? துரோகிகளேதான்.

உலக நாடுகளே! பாருங்கள்! தமிழர்கள் எல்லா உரிமைகளுடனுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையையும் நாங்கள் வைக்கவில்லை. எங்கள் அமைச்சரவையில்கூட தமிழ் மந்திரிகளிருக்கிறார்கள் என்று சொல்லி உங்களை சந்தை மாடாக சுட்டிக்காட்டி உலகின் பார்வையைத் திசைதிருப்பி தமிழருக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்தவர்கள் தமிழர்களையா அழிப்பார்கள் என உலகை நம்ப வைக்கின்ற இலங்கையரசின் இராசதந்திரத்தையாவது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

தமிழர்களுக்கு உரிமை கொடுக்காமலிருப்பதற்கும், தமிழர்களை அழிப்பதற்கும் நீங்கள்தான் பகடைக்காய்களாகியிருக்கிறீர்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? அமைப்பை பலமாக்குவதற்கே பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னதாக ஜனாதிபதியிடம் கருணா சொல்லியிருந்தார். இதைக் கேட்டு ஜனாதிபதி அதிர்ச்சியடையமாட்டார், ஏனென்றால் நாங்களும் அதைத்தான் செய்தோம், எங்களுடைய படைகளைப் பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தோம்’ என்ற உண்மையை மட்டுமல்ல கருணாவின் அறியாமையையும் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார். கருணாவைப் போன்ற ஒரு துரோகியை பார்க்கவே முடியாது. அத்தனை மாவீரர்களின் ஆத்மாவின் உயிர்களும் கருணாவைப் பாரத்துக் கொண்டுதானிருக்கின்றன.

பேசு;சுவார்த்தைக் காலத்தில் அவரவர் பக்கத்தை பலப்படுத்துவது இராணுவ தந்திரோபயங்களில் ஒன்று. உலக நாடுகளில் உள்ள இராணுவ அமைப்புகள் எல்லாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக தங்கள் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள.;

உங்கள் கைகளாலேயே உங்கள் கண்களைக் குத்திக் கொண்டிருக்கிறது இலங்கையரசு. அது தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களும் கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் போதும் பேசும் போதும் நீ எத்தனை சிங்கள இராணுவ வீர்களைக் கொன்றிருப்பாய்; மவனே வசமாக மாட்டியிருக்கிறாய் எங்களிடம், உன்னுடைய பலவீனத்தை எல்லாம் எங்கள் பலமாக்கி எத்தனை தந்திரப் பொறிகள் வைத்து எம்பக்கம் கொண்டு வந்திருக்கிறம் எனக் கறுவிக் கொள்வதாவது கருணாவிற்கு தெரியுமா?

ரோச மானம் உள்ள தமிழர்களாக மந்திரிப்பதவிகளைத் தூக்கியெறிந்து தமிழர்கள் பக்கம் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்துமன்னிப்புக் கேளுங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் தமிழீழ விடுதலை வரலாற்றில் எட்டப்பன், காக்கைவன்னியன், அந்திரேசு என்ற பெயர்களைப் போல் உங்கள் பெயர்களும் இடம்பெறும். கருணா…..என்று ஆரம்பிக்கும் பெயர்களை வைத்திருப்பவர்களை மற்றவர்கள் ‘ கருணா ‘ என்று அழைத்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் சொல்கிறார்கள் ‘தயவுசெய்து கருணா என்று அழைக்காதீர்கள், எங்கள் முழுப்பெயரையும் சொல்லி அழையுங்கள்’ என்று. ஏனென்றால் ஒரு துரோகியின் பெயரில் என்னை அழைக்க வேண்டாம் என்பதற்காகவே.


http://www.nerudal.com/nerudal.2537.html

இலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு

இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் அண்மைக் கால `காய் நகர்த்தல்'களைப் பார்க்கும்போது, ஈழத்தில் இதுவரை நடந்துவந்த கோர நாடகத்தில் திரைவிழும் நேரம் வந்துவிட்டதைப் போலத் தெரிகிறது.

உதாரணமாக, ஒருநாளும் இல்லாத திருநாளாக, தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன்சிங் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இத்தனை காலமும் இல்லாமல் இலங்கைத் தமிழர்களைப் பற்றி திடீர் நினைப்பு வந்து அவர் எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், ``இலங்கைத் தமிழர்களுக்கு இனி எந்தச் சிக்கலும் வராது, அங்கே மரணப்பட்டியல் நீளாது, அமைதி திரும்பும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று ராஜபக்ஷே என்னிடம் உறுதியளித்துள்ளார்'' என கூறியிருக்கிறார். மன்மோகன்சிங்கின் இந்தக் கரிசனக் கடிதத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் காரணமா? என்றால், இல்லை என்கிறார்கள் சிலர்.

இதில் இரண்டாவது அத்தியாயமாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும், ஒருநாளும் இல்லாத திருநாளாக 22 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஓர் அழைப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள். புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி.க்கள் மீது ராஜபக்ஷேவுக்குப் பிறந்த அந்தப் புதிய கரிசனத்தையும் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 23-ம் தேதி, ராஜபக்ஷே அனுப்பிய அந்த அவசரக் கடிதத்தில், ``26-ம்தேதி சமரச முடிவு பற்றி அனைவரும் உட்கார்ந்து பேசலாம்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. போர்நிறுத்தம் பற்றி அதில் ஒருவரி கூட இல்லாததால் அதைப் புறக்கணித்து விட்டனர் தமிழ் எம்.பி.க்கள்.

இந்தத் தகவல்கள் நம்மை தட்டிப்பார்த்த நிலையில், இதுபற்றி வெளிநாட்டுத் தொடர்பாளர் ஒருவரிடம் பேசி, மேற்கொண்டு தகவல்களைத் தெரிந்து கொண்டோம். அவர் தந்த அத்தனை தகவல்களும் நம்மை அதிர்ச்சியில் அமிழ்த்துவதாக இருந்தது.

``இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து ஒரு கூட்டு சதித்திட்டத்தை குறைவின்றி நிறைவேற்ற உள்ளன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில்தான் அந்தச் சதியின் நுனி தெரிந்தது. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஒரு தமிழ் இதழ் அந்தச் சதியை அம்பலப்படுத்தியது'' என்றவர், அந்தச் சதியைப் பற்றி விளக்கினார்.

```ஏப்ரல் மாத இறுதிக்குள் புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என இலங்கையும், இந்தியாவும் நம்புகின்றன. பிரபாகரன் தப்பிவிடுவார் அல்லது வீரமரணத்தைத் தழுவுவார். எஞ்சிய புலிகள் கெரில்லாப் போரைத் தொடர்ந்தாலும் அவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது' என்பது இந்த இருநாடுகளின் கணிப்பு.

அதன்பின் இலங்கைத் தமிழர்களுக்கென்று பெயரளவில் ஒரு `பொம்மைத் தலைவர்' தேவைப்படுவார். அப்படித் தாங்கள் போடும் தாளத்திற்கேற்றபடி ஆடும் ஒரு பொம்மைத் தலைவரை இருநாடுகளும் தேடி வருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவின் முதல் சாய்ஸ் `வரதராஜப் பெருமாள்தான்'. ஏற்கெனவே இந்திய அமைதிப் படை இலங்கை சென்றிருந்தபோது, தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்தியாவின் ஆசியுடன், பொம்மை முதல்வராக, ஆட்சி(!) நடத்தியவர் இவர். அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதும், இவரும் ஓடிவிட்டார். தற்போது ஒரிசாவில் ஒளிந்திருக்கும் அவரைக் கூட்டி வந்து, ஒப்புக்கு தமிழர் பகுதியில் ஒரு தேர்தலை நடத்திவைத்து முதல்வராக உட்கார வைக்க இந்தியா ஆர்வத்துடன் இருக்கிறது. அவரை மீண்டும் முதல்வராக்குவதை புலிகளுக்கு எதிரான ஒரு சவாலாக, பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா கருதுகிறது. ஆனால், மீண்டும் ஒரு பொம்மை விளையாட்டுக்கு வரதராஜப் பெருமாள் தயாரில்லை என்பதுதான் உண்மை.

இதற்கிடையே, இலங்கை அரசின் முதல் சாய்ஸாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் அமைச்சராக இருக்கும் இவர், இந்தியாவில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. சென்னை சூளைமேடு துப்பாக்கிச்சூடு வழக்கில் சிறையிலிருந்து தப்பியோடியவர். இவருக்கு இலங்கைத் தமிழர்களிடம் துளிகூட செல்வாக்கு இல்லை. இதே காரணத்திற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்த சங்கரியையும் முதல்வராக்கும் விருப்பம் இலங்கை அரசுக்கு இல்லை.

இந்தநிலையில், கிழக்கு மாகாண முதல்வராக இருக்கும் பிள்ளையானின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, தற்போது நியமன எம்.பி.யாக உள்ள கருணாவைத் தனது ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் உத்தி, அதிபர் ராஜபக்ஷேவுக்கு இருக்கிறது. இதன்மூலம் கருணாவைத் தமிழர்களின் தலைவராகக் காட்டி, தன் கட்சியையும் தமிழர் பகுதியில் வளர்த்துக் கொள்ளலாம் என ராஜபக்ஷே கருதுகிறார். இந்த முடிவுக்கு இந்தியாவும் தலையாட்டும் ஐடியாவில் இருப்பதாகக் கேள்வி.

முன்பு புலிகளிடமிருந்து கிழக்குப் பகுதி மீட்கப் பட்டபோது, அங்கு வளர்ச்சிப் பணிக்காக கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி வந்து குவிந்தது. இப்போது வடக்குப் பகுதியும் மீட்கப்படும் பட்சத்தில் அதற்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் குவிய வாய்ப்புண்டு. அந்தநிலையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தருகிறோம் என்ற பெயரில் வடக்கு கிழக்கை இணைத்து பேருக்கு ஒரு முதல்வரை நிறுவி, அந்த ஆயிரம் கோடிகளை அள்ளிவிழுங்க இலங்கை அரசு துடிப்புடன் உள்ளது. இதன் எதிரொலிதான் தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய அந்தக் கடிதம்'' என்றவர், அடுத்ததாக ஒரு தகவலை அள்ளிப் போட்டார்.

``இலங்கையில் புலிகள் தனியரசு நடத்திய காலத்தில், எஸ்கேப்பாகி வெளிநாடுகளுக்குப் போன பல ஈழத்தமிழ் இயக்கங்கள் அங்கங்கே பெயரளவில் இயங்கி வருகின்றன. அந்த இயக்கங்களுடன் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் கொஞ்சிக் குலாவி, நல்லுறவு வைத்திருக்கின்றன. இந்தநிலையில், ராஜபக்ஷே அரசு, `புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான ஒரு மூன்று நாள் மாநாட்டை, திடீரென, சிங்கப்பூரில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. `தமிழர் பகுதியில் போருக்குப் பின்புள்ள நிலைமை, தமிழர் பகுதியில் புனரமைப்புப் பணிகள், அதிகாரப் பகிர்வு' பற்றி தமிழர் பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் பேச அந்த மாநாடாம். சாங்க்ரி லா ஹோட்டலில் 27, 28, 29 தேதிகளில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களைத் தனது சொந்த செலவில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று மஞ்சள்குளிக்க வைக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு அமைச்சு அலுவலகச் செயலாளர் பலிந்தா கோகண்ண, இதற்கான அழைப்பிதழ்களை பல்வேறு தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். (அந்த அழைப்பின் நகல் ஒன்று நமக்கும் கிடைத்தது). காலை, பகல், இரவு விருந்துகளுக்கு இடையே அவ்வப்போது தமிழர் பிரச்னை பற்றிப் பேச அரைமணிநேரம், முக்கால் மணி நேரத்தை அந்த மாநாட்டில் ஒதுக்கியிருக்கிறார்கள். அரை நூற்றாண்டு தமிழர் இனப்பிரச்னையை எப்படி அரை மணி, முக்கால் மணியில் பேசி முடிவெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை?

சிங்கப்பூரில் இப்படி ஒரு மாநாட்டு நாடகம் செவ்வனே நடக்க இருக்கும் தறுவாயில், இந்தியாவில் பெங்களூருவிலும் ஒரு மாநாடு நடக்கப் போகிறது. பெங்களூரு, எலகங்கா, யக்கூரில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச பாடசாலையில் நடக்க இருக்கும் அந்த மாநாட்டில் ஈழத்தமிழர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஏப்ரல் 11, 12-ல் நடக்கப் போகும் அந்த மாநாட்டை நடத்தப் போவது யார் தெரியுமா? `ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி' (ஈ.என்.டி.எல்.எஃப்.) என அழைக்கப்படுகிற ஓர் இலங்கைப் போராளிக் குழு.

இந்த இயக்கம், `ரா' உளவுப்படையின் கைப்பிள்ளையாக வளர்க்கப்பட்ட இயக்கம். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் புலிகளுடன் போராடி, அமைதிப்படை வெளியேறிய போது, அவர்களுடன் சேர்ந்து இவர்கள் அந்தர்தியானமாகி விட்டார்கள். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தின் தலைவர் பரந்தன் ராஜா என்கிற ஞா. ஞானசேகரன் இந்தியாவில்தான் இருக்கிறார். இவரும், அந்த அமைப்பின் மற்றொரு நிர்வாகியான வி.ராமராஜ் என்பவரும்தான் அந்த மாநாட்டை நடத்தப் போகிறார்கள். இந்த ராமராஜ், போதைக் கடத்தல் வழக்குக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் சில வருடம் சிறையில் இருந்தவர்.

`போரை முடிவுக்குக் கொண்டு வரவும், (போர் நிறுத்தம் அல்ல), தமிழினத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் இந்த மாநாடாம். மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இதுபோன்ற இயக்கத்தை வைத்துக் கொண்டு, பழைய ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை ஒரு பொம்மை அரசு மூலம் கொண்டுவர இந்தியாவும், இலங்கையும் திட்டமிடுகின்றன. அதற்காகத்தான் இவ்வளவு நாடகமும்'' என்றார் அவர், பெருமூச்சுடன்.

`புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி.க்களைக் கூட ராஜபக்ஷே திடீரென பேச அழைத்திருக்கிறாரே?' என்ற கேள்வியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வைத்தோம்.

``என்னவென்றே தெரியவில்லை? எந்தவித முன் தகவலும் தராமல் திடீரென, `26-ம்தேதி மாலை 6.30 மணிக்குக் கூட்டம் இருக்கிறது, தமிழர் நலன் பற்றி பேச வேண்டும், வாருங்கள்' என்றார்கள். 22 தமிழ் எம்.பி.க்களில் பலர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளில் இருக்கிறார்கள். மற்றவர்களும் கூட, `இது உலகை ஏமாற்ற ராஜபக்ஷே போடும் நாடகம்' என்று தெரிந்து அந்தக் கூட்டத்திற்குப் போகவில்லை.

இதற்குமுன் இனப்பிரச்னையைத் தீர்க்க `அனைத்துக் கட்சி ஆலோசனைக்குழு' ஒன்றை ராஜபக்ஷே அமைத்திருந்தார். அந்தக் குழு இதுவரை 107 முறை கூடியும் ஒருமுறைகூட எங்களுக்கு அழைப்பு விடுத்ததில்லை. அந்தக் குழு எடுத்த அனைத்து அரைகுறை தீர்மானங்களும் குப்பைத் தொட்டிக்குத்தான் இதுவரை போயிருக்கின்றன. இந்த நிலையில், இந்தமுறை எங்களையும் சும்மா ஒப்புக்குக் கூப்பிட்டு, அதன்பின் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள் என்று பழிபோடுவதுதான் ராஜபக்ஷேவின் திட்டம்.

அதோடு `நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று புலிகள் அறிவித்திருந்தும் ராஜபக்ஷே அரசு அதை உதாசீனம் செய்ததை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டித்தன. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்றும் சூழ்நிலையும் இப்போது உள்ளது. அதைத் தடுக்கவும், திசை திருப்பவும்தான் இந்தக் கண்துடைப்புக் கூட்டம்.

அது மட்டுமல்ல, புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை 1.6 பில்லியன் டாலர்கைளை செலவு செய்துவிட்டு வெறுங்கையுடன் நிற்கிறார் ராஜபக்ஷே. இனியும் போர்நீடித்தால் இலங்கை அரசு பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதைச் சமாளிக்க சர்வதேச வங்கியிடம் தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு, நிவாரணம் என்ற பெயரில் 1.9 பில்லியன் கோடிகளைக்‌ கடன் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. அந்த வங்கியோ, `அப்பாவித் தமிழ் மக்களை ஒழுங்காக நடத்து' என்று நிபந்தனை போட்டிருக்கிறது. அதைச் சமாளிக்கத்தான் இந்தமுறை தமிழ் எம்.பி.க்களாகிய எங்களுக்கும் அழைப்பு'' என்று போட்டுடைத்தார் அவர்.

இதற்கிடையே இலங்கை போர்நிலவரம் பற்றி வன்னிப்பகுதி தொடர்பாளர் ஒருவரிடம் பேசினோம். ``போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இலங்கையை விட இந்தியாதான் முனைப்புடன் இருக்கிறது. திரிகோணமலை மாவட்டம், புல்மோடையில் இந்தியா அமைத்துள்ள மருத்துவமனையில், ராணுவ மருத்துவர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம் இடுப்பில் மிகவும் லாகவமாக கைத்துப்பாக்கிகளைச் செருகி வைத்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் இதுவரை ஐநூறு தமிழர்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இந்திய `மருத்துவர்கள்' தவறாமல் இருபது கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். `பிரபாகரன், சூசை, பொட்டு அம்மானை எல்லாம் எப்போதாவது பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? நீங்கள் இருக்கும் பகுதியில் புலிகள் நடமாட்டம் எப்படி? அவர்களது ஆயுத பலம் என்ன?' என்பவை அந்தக் கேள்விகளில் சில. இலங்கை ராணுவம் விசாரித்தால் தமிழர்கள் தகவல் தரமாட்டார்கள் என்பதால் இந்திய மருத்துவர்கள் இப்படி நைச்சியமாகக் கேள்வி கேட்டு தகவல் திரட்டி, அந்தத் தகவலை இலங்கை ராணுவத்துக்குப் பரிமாறுகிறார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது'' என்றார் அவர்.

- பா. ஏகலைவன்
நன்றி குமுதம்

Saturday, March 28, 2009

ஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200 இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.

இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகோதரத்தமிழன்

போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக
அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்...
ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர்.

இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை
தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக இனவெறி சிஙள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் நிதியங்களை கொட்டிகொடுத்தும் தொழினுட்பங்களையும்
ஆளணிகளையும் கோழைத்தனமாக மறைத்துக் கொடுத்தும் வாக்களித்த தமிழர்களின் கழுத்தை அறுத்து ஈழத்து சொந்தங்களை இனப்படுகொலை செய்யச்சொல்லி
ஆனந்தப்படுவதும் ஆற்றாது அழுது புரண்டு போரை நிறுத்தச்சொல்லி மன்றாட்டம் செய்தால்.. ஓடோடிச்சென்று சிங்கவளனை பாராட்டுவதையும் .we are not
concerned about LTTE... I am not fond of LTTE.. என்று ஏகடியம் பேசுவதையும் பார்த்து நாம் நெஞ்சு கொதித்து நின்ற நேரம் ஏதோ துளி ஆறுதல்.

உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் முலாயம் மற்றும் லாலு முறையே தந்த சம்மட்டியடிக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஒரு மரண அடியே
தந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இத்தாலிக்காரி சோனியாவின் தான்தோன்றித்தனத்துக்கு மக்களும் தம் பங்குக்கு நெற்றியடி தர தயாராகி வருகிறார்கள். இதுவே இன்றைய நாட்டு நடப்பு. இவ்வேளையில் இன எதிரி ஜெயலலிதாவோடு கூட்டா? என கேட்கும் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான பதில் இதுதான். இது காலத்துக்கு தேவையான ராஜரீக நகர்வு அவ்வளவே.

இனப்பகைவன் பிரேமதாஸாவோடு கைகோர்த்து சதிகார இந்திய துரோகப்படையை புலிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றியதைப்போல முதலில் கொலை வெறி காங்கிரஸையும் அதன் கைக்கூலிகளையும் தமிழ் மண்ணைவிட்டு வெளியேற்றுவோம். பிறகு மற்றதை பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் அரசியல் வானில் சுழற்கோளாய் வலம் வரும் திருமாவோ கருணாநிதியின் திருதராஷ்டிர ஆலிஙகனத்தில் சிக்கித் தவிக்கிறார். அந்த
சக்கர வியூகத்திலிருந்து வெளியேற தா.பாண்டியன் மற்றும் வை.கோபாலசாமி போன்ற தலைவர்கள் தான் உதவ வேண்டும்

திருமா அவர்களே ஒரு பாரத ரத்னா விருதுக்காக தமிழினப் படுகொலைக்கு துணை போகும் கருணாநிதி தான் வடிக்கும் முதலைக் கண்ணீரை தமிழ் மக்கள் நம்ப
வேண்டும் என்பதற்காக உங்களை அருகில் வைத்துக்கொள்ள துடிக்கிறார். தயவு செய்து அந்த துரோகத்துக்கு துணை போய் வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம்
என்று சகோதரத் தமிழன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

http://www.tamilwin.org/view.php?2a36QV14b34Z9E834dbSWnPeb0217GQc4d2iYpD4e0dpZLu0ce03g2hF2ccdPj0o0e

Tuesday, March 24, 2009

Not the peole who sent me email

Monday, March 23, 2009

கனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்

சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இப்புறக்கணிப்புப் போராட்டமும் நடைபெற்றது.

சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் முக்கிய நுகர்வாளர்களாக இருப்பவர்கள் புலம்பெயர் வாழ் தமிழர்கள்.








தமிழர்களை இன அழிப்புச் செய்யும் சிறிலங்காவின் பொருட்கள், சேவைகளை நுகர்வதன் மூலம் தமிழர்களை அழிப்பதற்கான நிதியினை சிறிலங்கா அரசுக்கு வழங்கிக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே 'சிறிலங்காவைப் புறக்கணிப்போம்' என்னும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

அங்கு நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிறிலங்கா நாட்டின் கொடியின் மேல் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் கொட்டப்பட்டு பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.






அத்துடன் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும்

- சிறிலங்காவைப் புறக்கணிப்போம்

- சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிப்போம்

- சிறிலங்காவின் சேவைகளைப் புறக்கணிப்போம்

எமது மக்களை நாம் பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.

அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன்

இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது.

வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

"இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.



அரசின் இராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்தால் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுப்பார். கண்டனங்கள், கவலையோடு தான் ஐ.நா.வின் காலம் கழிகிறது.



பட்டினிச் சாவென்கிற சுவடு பதியாத தமிழர்களின் வரலாற்றினை இப்பெருமக்கள் தெரிந்து கொள்ளவில்லை.



ஆகவே உலகமே உதவி செய்ய முன்வராத போது, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் உறவுகள், நிவாரணக் கப்பலேறி முல்லைக்கடல் நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாத மனிதாபிமான வரலாற்றுக் கடமையாக மாறுகிறது.



உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோமென வரிந்து கட்டிக் கொண்டு செயற்படும், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மகா சக்திகள், வணங்கா மண்ணின் தாயகப் பயணத்தை தடுத்து நிறுத்த சகல சித்து விளையாடல்களையும் பிரயோகிக்கக்கூடும்.



குறிப்பாக நடைபெறும் போருக்குப் பக்க பலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் புகழாரம் சூடப்பட்ட காந்தி தேசத்திற்கு இக்கப்பல் விவகாரம் நிச்சயம் கசப்பானதொன்றாக இருக்கும்.



வல்லரசுகள் நிகழ்த்தும் ஆதிக்கப் போட்டியில், தான் வெற்றி பெறும் முக்தி நிலைக்கு வந்தடைந்திருப்பதாகக் கற்பனை கொள்ளும் இந்தியா, திருநெல்வேலி இராட்சத ராடர் நிலையத்திலிருந்து வணங்கா மண்ணின் பயணப் பாதையை உன்னிப்பாக அவதானிக்கும். கொச்சின் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் காலாவதி நாட்களை எட்டும் எறிகணைகளின் கையிருப்பு குறைவடைவதாலும் வன்னி மண் விழுங்கும் ஆட்பலத்தை ஈடு செய்ய ஊர்காவல் படை அனுப்பப்படுவதாலும் இந்தியாவிற்கு"வணங்கா மண்ணின்' விஜயம் புதிய அதிர்வுகளை உருவாக்குகிறது.


"நிவாரண உதவி' என்கிற வட்டத்திற்கு வெளியே, இப் பயணத்தின் வேறு பரிமாணங்கள், புதிய செய்திகளை சொல்லத்தான் போகின்றன.
1934 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக யூதர்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதாவது 1947 ஜூலையில் "இடப்பெயர்வு 1947' என்று நாமம் சூட்டப்பட்டு பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் உருவாக்கிய தாக்கமே புதிய நாடொன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.


நாசிகள் ஏறி மிதித்த யூதர்களை நடுக் கடலில் பிரித்தானியர்கள் நசித்தார்கள், யூதர்களை ஏற்றிச் சென்ற சில கப்பல்கள் மொறீசியசிற்கும், சைப்பிரஸிற்கும் திசை திருப்பி விடப்பட்டன.



ஆனாலும் "இடப்பெயர்வு 1947' கப்பல் ஏற்படுத்திய அதிர்வலைகள், ஐ.நா. சபையில் முட்டி மோதி இஸ்ரேல் என்ற யூத நாட்டின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது.
உணவை போராயுதமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அதே உணவைக் கொண்டு சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்கிற விடயத்தை இக்கப்பல் பயணம் உணர்த்தும்.



இதனைத் தடுத்து நிறுத்த முற்படுவோர், அதற்கான தகுந்த அரசியல் காரணிகளையும் வியாக்கியானங்களையும் முன்வைக்க முடியாமல் சீனா கூறுவது போன்று உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுக முற்படுவார்கள்.
அதேவேளை "இடப்பெயர்வு 1947' கப்பல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான திருப்பு முனை நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் "வணங்கா மண்' ணின் தாயகப் பயணமானது ஏற்கனவே பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஓர் இனத்தின் தாயகத்தை, அங்கீகரிக்க வேண்டிய தேவையை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.



ஆனாலும் சில தென்னாசியப் பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசாளர்களின் அழுத்தங்களை மீறி, வன்னி மக்களின் உடனடி வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. சபை இருப்பதாகவே தோன் றுகிறது.



இந்த இறுக்கமான முரண் நிலையை
"வணங்காமண்' உடை த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



இலங்கையின் இறையாண்மையை மறுதலித்து "பூமாலை'' நடவடிக்கை மூலம் உணவுப் பொட்டலங்க ளைப் போட்டு மனிதாபிமானம் பேசியவர்களும் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு விவகாரமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில், பேரினவாத இறைமைக்கு முண்டு கொடுத்தவர்களும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்கிற பொதுவான வரையறைக்குள் வைத்துப் பார்க்க முடியாதெனக் கூறிய அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் இந்த வணங்கா
மண்ணின், வேரிற்கு நீர் ஊற்றச் செல்லும் மனிதாபிமானப் பயணத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள்?



ஏற்கனவே இப்பயணத்திற்கு ஆதரவளிக்க பல மனித உரிமை ஆர்வலர்களும் இன்படுகொலைக்கு எதிரான மனிதாபிமானிகளும் முன் வந்துள்ளார்கள்.
இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு மற்றும் எறிகணைகள் நிகழ்த்தும் படுகொலைகளை தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை என்கிற கவலையோடு மட்டும் வாழ்வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் தன் கையே தனக்கு உதவியென "வணங்காமண்' புறப்படுகிறது.



உலகத் தமிழினத்தின் உணர்வுக் கொந்தளிப்பு, சுவிஸிலும் பெல்ஜியத்திலும் கனடாவிலும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.



தலைமைக்கும் தன்னாட்சிக்குமான அங்கீகாரம் கோரி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாறுதலடைந்து மிகவும் உணர்வு மயப்பட்ட கொதி நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.



சர்வதேச அங்கீகாரத்தை தடுக்கும் அரணாக தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தொழிற்படுவதாகவே புலம்பெயர் தமிழர்களும் தமிழக உறவுகளும் திடமாக நம்புகிறார்கள்.



சீன வியூகத்தை உடைத்தெறிய ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலிக்கடாவாக்கலாமென்கிற இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.



ஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தனது நலன் காக்கப்பட வேண்டுöமன ஒருவர் நினைப்பாராயின் அந்த அழிக்கப்படும் இனம், தன்னை தற்காத்துக் கொள்ள, அழிப்பவரை எதிர்ப்பதே நியாயமானதாகும்.உயிரினங்களின் உயிர் வாழும் தத்துவம் சொல்லும் இயற்கையோடு சார்ந்த செய்தி இதுதான்.



நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Saturday, March 21, 2009

விரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பயணிக்கும் விடுதலைப்போரும் -வேல்சிலிருந்து அருஷ்

தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் என்ற சாயத்தை பூசிய படி தான் எதனை கூறினாலும், எதனை செய்தாலும் சரியானதே என்று சிறீலங்கா அரசு கருதுவதுடன், அனைத்துலகத்தின் எல்லா நாடுகளுடனும் வழுக்கும் போக்கை கைக்கொண்டு அவற்றை தனது பிடியில் வைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றது.

ஆனால் அரசின் இந்த கனவுகள் தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து வருகின்றன. அண்மையில் சிறீலங்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது, ஜேர்மன் அரசு கொடுத்த பதிலடியை போல

தற்போது ஐ. நாவின் மனித உரிமை ஆணைக்குழு தனது பதிலடியை கொடுத்துள்ளது. வலிமையுள்ள தேசம் என்றாலும், வலிமை மிக்க அமைப்புக்கள் என்றாலும் தமது நிலையிலும், நீதியிலும் உறுதியாக நின்றால் தான் அவர்கள் மீதான நம்பக்கைகளை சிறிதளவேனும் மக்களிடம் தக்கவைக்க முடியும்.

சிறீலங்காவின் காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதம் தொடர்பான அனைத்துலகத்தின் கவனம் சிறிய அசைவை தற்போது சந்தித்துள்ளது. இந்த அசைவிற்கு காரணம் அனைத்துலகத்தில் பரந்துவாழும் பல கோடி தமிழ் மக்களினதும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களினதும் அயராத போராட்டங்களும் உழைப்புக்களும் தான்.

அதாவது எமது பிரச்சனைகள், சிறீலங்கா அரசின் பொய்பிரச்சாரம் இவை இரண்டையும் அனைத்துலகத்தின் கவனத்தில் கொண்டுவருவதில் இந்த போராட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பொய்யான பிரச்சாரங்களின் ஊடாக தனது அடக்குமுறைகளை மறைப்பதற்கு அரசு பெருமளவான நிதிகளை ஒதுக்கி அனைத்துலக ரீதியில் செயற்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் தற்போது சுதந்திரமான ஊடகங்கள் என்ற நிலை முற்றாக இல்லது செய்யப்பட்டுள்ளதுடன், முழுக்க முழுக்க அரச சார்பு ஊடகங்களே அங்கு இயங்கி வருகின்றன.

இந்த அணுகுழுறைகள் அரசுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திவருகின்றது. படையினாரின் நடவடிக்கை தொடர்பான வெற்றி செய்திகளை மட்டும் தென்னிலங்கை மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் உளவுரனை உயர்வாக பேணுவதுடன், படையினருக்கு தேவையான வளங்களையும் குறைவின்றி பெற்றுக் கொள்ளலாம். அனைத்துலகத்தின் கண்களில் அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை மறைத்து கொள்ளலாம் என்பவை அவற்றில் முக்கியமானவை. அரசியல் அடித்தளத்தை மேலும் சில காலங்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள இவை இரண்டும் அரசுக்கு உதவும்.

மறுவளமாக இதனை பார்த்தால் தமிழ் மக்களின் பல தசாப்த வரலாற்றை கொண்ட போராட்டம் வலிமை குன்றியது. அதனை இலகுவில் படைத்துறை ரீதியாக தோற்கடித்து விடலாம் என்ற தோற்றப்பாட்டை அனைத்துலகத்தில் ஏற்படுத்தி விடலாம் என்பது அரசின் முக்கிய நோக்கம். மேற்குலகம் என்றாலும், அனைத்துலகம் என்றாலும் அவர்களின் நகர்வுகளை தீர்மானிக்கும் ஒரு காரணியாக பலம் - பலவீனம் தொடர்பான கணிப்பீடுகள் உண்டு.

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடம் வன்னியில் வாழும் மக்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளின் பின்னனியும் அதுவே. அதாவது விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட போகின்றனர் என்ற அரசின் பிரச்சாரத்தை அவர்கள் முழுமையாக நம்பிவிட்டனர். மேலும் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தின் இந்த நகர்வை கூட அரசு தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கே பயன்படுத்தியிருந்தது.

அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிறீலங்கா அரசுடன் இணைந்து ஒரு தலைப்பட்சமாக வன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற போவதாக கருத்துக்களை வெளியிடவில்லை. மக்களை வெளியேற்றுவதற்கு முன்னர் உண்மையான களநிலமைகள் ஆராயப்படும் எனவும், விடுதலைப்புலிகளுடன் இது தொடர்பில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் உலகம் தன்னுடன் சேர்ந்து நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் தனது பிரதான எதிரியான தமிழ் மக்களின் உளவுரனை சிதறடித்து விடலாம் என்ற நோக்த்துடன் அரசு அதனை திரித்து கூறியிருந்தது. ஆனால் மறுவளமாக பார்த்தால் தமிழ் மக்களின் விருப்பதிற்கு மாறாக இந்திய மத்திய அரசு வன்னியில் உள்ள தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சியினை அமெரிக்காவின் தலையீடு தடுத்து நிறுத்தியுள்ளது என நாம் கருதினாலும் அதில் தவறில்லை.

இருந்த போதும் விடுதலைப்புலிகள் இன்னும் சில நாட்களில் தோற்கடிக்கப்பட்டு வடுவார்கள் என்ற அரசின் பிரச்சாரங்கள் தற்போது அந்தரத்தில் தொங்கி நிற்பதாகவே களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு களமுனையில் தொடர்ந்து மோதல்கள் நிகழ்கின்றன. அதன் ஒவ்வொரு எல்லை புள்ளிகளும் பல தடவை இரு தரப்பினரிடமும் கைமாறிய வண்ணம் உள்ளது.

ஓவ்வொரு வாரமும் படைத்தரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள எஞ்சிய நிலப்பரப்புக்களை அங்குலம் அங்குலமாகவாவது கைப்பற்றிவிட முயன்று வருகின்றது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சாலை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணி மற்றும் புதுக்குடியிருப்பின் தென்பகுதி ஊடாக நகர்வில் ஈடுபட்டுவரும் 53 ஆவது படையணி மற்றும் நடவடிக்கை படையணி எட்டு என்பன கடுமையான சேதங்களை சந்தித்த நிலையில் இந்த வாரம் 58 ஆவது படையணி இரணைப்பாலை பகுதியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் கடந்த திங்கள்கிழமை (16) மற்றும் செவ்வாய்கிழமைகளில் (17) அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை சேர்ந்த 6 பற்றலியன் படையினர் மேற்கொண்ட இந்த முயற்சியை எதிர்த்து விடுதலைப்புலிகளின் படையணிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 600 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 800 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

படையினருக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்களை அரசு வெளியில் தெரிவிக்காத போதும் வழமைக்கு மாறாக இந்த இரு தினங்களிலும் கொழும்பில் ஓடிய அதிக எண்ணிக்கையான நோயாளர் காவு வண்டிகளும், தென்னிலங்கை மருத்துவமனை வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை மட்டும் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் உள்ள 71 மற்றும் 72 ஆவது விடுதிகளில் 100 படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மோதல்களில் படைத்தரப்பு தலைநகரத்து மருத்துவமனைகளை அதிகளவில் படையினரின் தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. ஊடகங்களின் கண்களில் இருந்து தகவல்களை மறைக்கும் உத்தி இதுவாகும். அதற்கு மாற்றீடாக அனுராதபுரம், வவுனியா, திருமலை, பலாலி, மன்னார் மருத்துவமனைகளையும், பெரதேனியா மருத்துவமனையையும் பயன்படுத்தி வருகின்றது. எனினும் படையினாரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிக அளவில் படையினர் இழப்புக்களை சந்திக்கும் போது கொழும்பு மருத்துவமனைகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு படைத்தரப்பு தள்ளப்படுகின்றது.

இதனிடையே புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கான படை பலத்தை தற்போது அரசு அதிகரித்துள்ளது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசு வன்னியின் பின்னனி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த படைபலம் எங்கிருந்து திரட்டப்பட்டது? வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் இருந்து பெருமளவான படையினர் மீண்டும் வன்னி களமுனைக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த 52 ஆவது டிவிசன் படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களும், வவுனியாவில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் சில பற்றலியன்களும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளன.

இராணுவத்திற்கு மேலும் இளைஞர்களை சேர்க்கும் முயற்சிகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருவதுடன் படையினருக்கான ஓய்வூதிய தொகையையும் 85 விகிதமாக அதிகரிக்கும் திட்டங்களையும், தொண்டர் படையினருக்கான அதிக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. களமுனைகளில் ஏற்படும் இழப்புக்களை ஈடுசெய்யவும், களமுனைகளை தக்கவைப்பதற்கும் இரணுவம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

தற்போதைய மோதல்களை பொறுத்தவரையில் இராணுவத்திற்கு ஏற்படும் ஆளணி இழப்புக்கள் அதிகம். இந்த இழப்புக்கள் வெளியில் தெரியாது இருக்கும் பொருட்டு ஏறத்தாள 100 இராணுவ மருத்துவக்குழுக்களை களமுனைகளில் இராணுவம் அமைத்துள்ளதுடன், அனுராதபுரம் இராணுவமருத்துவமனையையும் நவீனமயப்படுத்தி பேணி வருகின்றது.

இவை தவிர மன்னார், வவுனியா, பலாலி, திருமலை போன்ற பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளை இராணுவத்தின் தேவைகளுக்காக பயன்படுத்துவதுடன், அங்கு அனுமதிக்கப்படும் படையினருக்கான சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு தென்னிலங்கையில் உள்ள மருத்துவர்களும், தாதிகளும் அடிக்கடி அரச செலவில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

முன்னர் ஒரு பற்றலியன் படையினருக்கு ஒரு மருத்துவக்குழு என களமுனை மருத்துவ மனைகளை அமைத்திருந்த படைத்தரப்பு தற்போது ஒரு கொம்பனி இராணுவத்தினருக்கு ஒரு மருத்துவ குழு என்ற நிலையை எட்டியுள்ளது. அதற்கான காரணம் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்களின் தொகை அதிகரித்து செல்வதே என இந்த மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவ பொறுப்பதிகாரி மேஜர் சஞ்சீவ தொடங்கொட தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் நாள் அக்கராயன் பகுதியில் நடைபெற்ற சமரில் 24 மணிநேரத்தில் 215 காயமடைந்த படையினர் தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தாம் காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் படைத்தரப்பு சந்தித்து வரும் இந்த இழப்புக்கள் தென்னிலங்கையின் கிராமப்புறங்களை தற்போது அதிகளவில் பாதித்து வருகின்றது. அதிகளவான தென்னிலங்கை கிரமாப்புறத்து இளைஞர்கள் களமுனைகளில் காணாமல் போயுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்து வருவதாக தென்னிலங்கையின் ஆழமான பிரதேசங்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊடகத்துறை மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை, பொது கூட்டங்களையோ அல்லது ஊhவலங்களையோ நடத்துவதற்கு முன் அனுமதி கோரவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் இந்த மக்களின் தகவல்கள் எவையும் வெளியில் கசியாத படி முடக்கிப் போட்டுள்ளது.

இருந்தாலும் சிலர் தமது தகவல்களை ஊடகங்களுக்கு மறைவாக தெரிவித்தும் வருகின்றனர். எனது மகன் இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்தார். ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் காணாமல் போய்விட்டதாக படையினர் தெரிவித்துள்ளதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத இராணுவ சிப்பாய் ஒருவரின் தாய் கூறியுள்ளார்.

தனது மகன் மீண்டும் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுவதுடன், ஆலயங்களுக்கு பசுக்களை தானம் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதே கிரமத்தை சேர்ந்த மற்றுமொரு படை சிப்பாயின் தாயார் கூறுகையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்த எனது மகன் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு களமுனையில் இறந்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.

எனது மகனின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட அவருடைய உற்ற நண்பனான மற்றுமொரு சிப்பாய் பிள்ளையை இழந்த எமது குடும்பத்தை தான் அடிக்கடி வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் சில நாட்களில் அவர் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் எம்மை வந்து சேர்ந்தது என அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கடந்த வாரம் தொன்னிலங்கையில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மக்களிடம் பேசிய ஊடகம் ஒன்று தெரிவித்த தகவல்கள்.

புதுக்குடியிருப்பு களமுனையில் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக்கப்பட்டுள்ள படைத்தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதும் மறுபுறம் பரந்த வன்னி நிலப்பரப்பை தக்கவைப்பதிலும் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய இராணுவம் வன்னி பகுதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்த போது வன்னி பகுதியை தக்கவைப்பதற்கு ஏறத்தாள ஐந்து இலட்சம் படையினர் தேவை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அது தான் தற்போதைய நிலையும் கூட, ஆனால் இவ்வளவு தொகையான படையினரை சிறீலங்கா தரப்பு திரட்டுவது என்பது முயல்கொம்பான கதை என்பதுடன், தற்போதுள்ள பெருமளவான படை வளங்களை கூட குறுகிய காலத்திற்கே அவர்களால் தக்கவைக்க முடியும்.

விடுதலைப்போராட்டத்திற்கும், அரசியலுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. விடுதலைப்போராட்டம் தனது உயர்ந்த நோக்கத்தை அடைவதற்காக பல இடர்களை தாண்டி பல பரிமாணங்களின் ஊடாக நீண்ட காலம் பயணிக்கும் தன்மை கொண்டது. ஆனால் அரசியல் ஆட்சி என்பது அவ்வாறனது அல்ல அவர்களின் ஆயட்காலம் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் மட்டுமே. அதற்குள் அவர்கள் தமது நோக்கங்களை அடைய முயற்சிப்பதுண்டு ஏனெனில் அதன் பின்னர் தேர்தல், கூட்டணி, பொருளாதார சிக்கல்கள் என்ற பல சவால்களை முகங்கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்குண்டு.



எனவே தான் தனது வளங்களை ஒன்று திரட்டி விரைவாக ஒரு வெற்றியை அடைந்துவிட சிறீலங்கா அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. தனது பலத்திற்கு அப்பால்பட்ட களமுனை என தெரிந்தும் கூட தனது படை வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி அது போரிட்டு வருகின்றது. இவ்வாறான ஒரு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கை ஒன்றை அரசு மேற்கொள்வதற்கு அதனை தூண்டிய காரணிகள் என்ன?

இந்த நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஒன்று, இரண்டாவது இந்த படைத்துறை வெற்றியினால் தென்னிலங்கையில் அறுவடை செய்யப்படும் அரசியல் ஆதாயங்கள் ஏராளம் என்ற பேராசை. ஆனால் இந்த களமுனை மேலும் சில காலம் இழுபட்டு சென்றால் தற்போதுள்ள அரசியல் பலம் கூட இல்லாது போவதுடன், படையினாரின் போரிடும் வலுவும் மழுங்கிப் போகலாம் என்ற கருத்துக்களையும் நாம் மறுக்க முடியாது.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ் -

நன்றி : ஈழமுரசு (21.03.2009),தமிழ்கதிர்



http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2772:2009-03-21-14-52-49&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

Thursday, March 19, 2009

ஜெ என்ன செய்ய வேண்டும்


Tuesday, March 17, 2009

தமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது

இப்போது என்னையும் செய்தி பிரிவில் போட்டு விட்டார்கள். தமிழின அழிவினை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

தமிழன் ஒவ்வொரு நாளும் நூற்று கணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது, தமிழ்மணத்தின் இந்த போக்கு போக்கு பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. யாரும் எந்த பதிவரும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நூற்றுக்கணக்கான அனைத்து தமிழின கொலைகளும் உட்கார்ந்து எழுதப்போவதில்லை. இதை உலக மக்களிடம் சென்றடையும் வேகத்தினை தமிழ்மணம் தடை போடுகிறது. இதன் பிண்ணனி என்னவென்று சரியாக ஊகிக்க முடியாவிடினும் இது தமிழின விரோத போக்கின் ஆரம்பம் என்பது உறுதி.

தமிழ்மணத்தை இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனடா

இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கனடா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

கனடாவின் டொரன்டோ நகரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும், அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வன்னி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் நடைபெற்ற மாநாட்டில், தனிஈழம் வேண்டும் என்று பலரும் உரையாற்றினர். பேரணியின்போது, தமிழீழ கொடியை அனைவரும் தாங்கிச் சென்றனர். இதனிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. கெம்பின்ஸ்கி ஹோட்டலில் இருந்து புறப்பட்ட பேரணி, ஐநா சபை கட்டிடத்தை நோக்கி சென்றது. பின்னர் மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இறுதியில், ஐநா சபை அதிகாரிகளிடம் மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்நாட்டின் துணை பிரதமர், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பின்னர், மனு அளிப்பதற்காக அங்குள்ள இந்திய தூதரகம் நோக்கிச் சென்றனர். ஆனால், மனுவை வாங்க தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த தமிழர்கள், மனுவை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன ‐ பிரித்தானியாவின் Presstv நடத்திய கலந்துரையாடலின் ஒளிவடிவம்:

இலங்கையில் தொடரும் மோதல்கள் குறித்து பிரித்தானியாவின் Presstv அண்மையில் நட்த்திய கலந்துரையாடலில் தற்போதைய நிலைகுறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நால்வர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் தமிழ் போருமைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றொபேட்ஈவன்ஸ் ஆகியோர் ஒருதரப்பாகவும், எதிர்த் தரப்பில் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரின் பிரதிநிதி டக்ளஸ் விக்கிரமரட்ண, மற்றும் கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நஸ்பி ஆகியோரும்; கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த போருமில் பார்வையாளர்களும் கருத்துரைத்தோரிடம் கேள்விகளை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய கலந்துரையாடலை ஒளிவடிவில் பார்க்கலாம்.

http://www.globaltamilnews.net/includes/news_player.php?ptype=v&nid=7241

Monday, March 16, 2009

தமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோள்

தமிழ்மணமே நேற்று ஒரு நண்பர் அவர்களின் google-adsense கட்டுரையை படித்த போது இந்த யோசனை தோன்றியது.

நீங்கள் ஏன் google-adsense விளம்பரத்தை எடுத்து ஈழத்தமிழர்களுக்கு உதவகூடாது. உங்களுடைய google-adsense கோடினை எந்தெந்த பதிவர் விரும்புகிறார்களோ அவர்கள் அவர்களின் வலைதளங்களில் போட்டு கொள்ளட்டும். அதில் வரும் பணத்தை அப்படியே ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைக்கலாமே. எங்களுக்கும் தமிழர்களுக்கு உதவின சந்தோசம் இருக்கும், உங்களுக்க்கும் இருக்கும். நாமும் பதிவினை போடும் சந்தோசமும் இருக்கும்.

ஆயிரம் பதிவர்கள் தன்னுடைய தளங்களில் இதனை போட்டு வைத்தால், சராசரியாக 50 ஹிட்டு கிடைத்தாலும் ஒரு நாளுக்கு 50,000 ஹிட்ஸ், மாதத்திற்கு 150,000 ஹிட்ஸ். வருவது 100 டாலரோ, 1000 டாலரோ கண்டிப்பாக தமிழீழத்தில் ஒரு குடும்பத்தையாவது வாழ வைக்கலாமே. நம்மால் முடிந்த சிறு உதவியாக இருந்து விட்டு போகட்டுமே.

தமிழ்மணமே என் அன்பு வேண்டுகோளை ஏற்று உடனே எந்த தாமதம் இன்றி உடனே செய்ல்படுத்தவும்.

(அப்படியே என்னோட பழைய கோரிக்கையும் முடிஞ்சா கொஞ்சம் கவனியுங்கள், நீங்களே இங்கு வாக்குப்பதிவில் கவனியுங்கள்)

இப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்

இப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில், எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் முன்னர் வெளிவந்திருந்த தமிழர் கடத்தல்களின் தொகுப்பு

http://www.sbs.com.au/dateline/story/watch...amil-Abductions

ஊடகங்கள் மீது பாயும் "கோத்தபாய", - அவுஸ்ரேலிய தொலைக்காட்சி�

மிரட்டறான், எல்லாரையும். அய்.நா வைக்கும்டி உனக்கு ஆப்பு வெகு விரைவில். what is free media தலைவரோட விளக்கத்தை பாருங்கள், எவ்வளவு பயமே இல்லாமல் இப்படி பேசறதுக்கு இந்தியாவின் செல்லமே காரணம்

http://www.nettamil.tv/musicvideo.php?vid=b111eb205

தமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவருகிறது. தமிழக தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தை வகிக்கப்போகிறது. இந்திய அரசின் சாதனை அது விட்ட தவறுகள், பொருளாதார முன்னேற்றம், வீழ்ச்சி என்பவற்றுடன் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற பிரசாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்டியல் மூலம் நிதிசேகரித்ததும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. 24வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதாவின் உண்ணா விரதத்தின் பின்னணியில் பொதுத் தேர்தல் இருப்பது உண்மை என்றாலும் வைகோவும் தா.பாண்டியனும் தாம் எதிர்பார்த்ததை நிறைவேற்றிவிட்டனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் சகல உதவிகளும் புலிகளுக்கு செய்யும் உதவியாகவே கணித்து வந்த ஜெயலலிதா மனம் மாறி உண்ணாவிரதம் இருந்தமை தமிழக முதல்வருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் மிக முக்கிய ஆலோசகர்களாக இருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் இவர்கள் இருவரும் முன்னணியில் உள்ளனர். சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமை வைகோ, தா. பாண்டியன் ஆகிய இருவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்த முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு பல தடவை எச்சரிக் கைவிடுத்தார். அவர் விடுத்த எச்சரிக்கை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகியதால் அதனைச் சமாளிப்பதற்காக பல அறிக்கைகளை வெளியிட்டு தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு தமிழ் மக்களுக்குரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிகளின் தொண்டர்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட தொண்டர்களின் வாக்குகள் தேர்தலில் இடம்மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட தொண்டர்கள் நிச்சயமாக அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். இவர்களின் வாக்குகளால் பாரதீய ஜனதாக் கட்சி பயனடையும் வாய்ப்பு உள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் அல்லல்பட்டிருக்கமாட்டார்கள��
� என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரசாரம் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுடன் மாற்றுக்கருத்துள்ள வைகோவும், தா.பாண்டியனும் கூட்டணி சேர்ந்ததை விமர்சித்தவர்கள் இப்போது அடங்கிப்போயுள்ளனர்.

பொதுத் தேர்தலில் வெல்லப் போகும் கூட்டணி எது எனத் தெரியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் முடிவெடுக்க முடியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினுள் இரண்டு கருத்து இருப்பதால்தான் டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார் என்று சில செய்திகள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவுடன் இணைய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் விரும்புவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி விரும்புவதாகவும் தெரிகிறது. மாற்றுக் கருத்துடைய குழுவுக்கு மகன் தலைமை தாங்குவதால் டாக்டர் ராமதாஸ் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது.

திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். காங்கிரஸை எதிர்ப்பவர்களுக்கும், காங்கிரஸ் கொடியை எரிப்பவர்களுக்கும் கூட்டணியில் இடம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார். இதன் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் எஞ்சியுள்ள திருமாவளவனும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர்.அவர்களின் பின்னால் உள்ளவர்களும் தம்மை வெளிப்படுத்தி உள்ளனர். டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.பேச்சுவார்த்தை
வெற்றி பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக தமது முடிவை அறிவிப்பார்கள்.

Sunday, March 15, 2009

சோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவருகிறது. தமிழக தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தை வகிக்கப்போகிறது. இந்திய அரசின் சாதனை அது விட்ட தவறுகள், பொருளாதார முன்னேற்றம், வீழ்ச்சி என்பவற்றுடன் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற பிரசாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்டியல் மூலம் நிதிசேகரித்ததும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.

24வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார்.





ஜெயலலிதாவின் உண்ணா விரதத்தின் பின்னணியில் பொதுத் தேர்தல் இருப்பது உண்மை என்றாலும் வைகோவும் தா.பாண்டியனும் தாம் எதிர்பார்த்ததை நிறைவேற்றிவிட்டனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் சகல உதவிகளும் புலிகளுக்கு செய்யும் உதவியாகவே கணித்து வந்த ஜெயலலிதா மனம் மாறி உண்ணாவிரதம் இருந்தமை தமிழக முதல்வருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் மிக முக்கிய ஆலோசகர்களாக இருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் இவர்கள் இருவரும் முன்னணியில் உள்ளனர். சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமை வைகோ, தா. பாண்டியன் ஆகிய இருவருக் கும் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டி யுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்த முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு பல தடவை எச்சரிக் கைவிடுத்தார். அவர் விடுத்த எச்சரிக்கை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகியதால் அதனைச் சமாளிப்பதற்காக பல அறிக்கைகளை வெளியிட்டு தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கி ரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு தமிழ் மக்களுக்குரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிகளின் தொண்டர்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட தொண்டர்களின் வாக்குகள் தேர்தலில் இடம்மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இப்படிப்பட்ட தொண்டர்கள் நிச்சயமாக அண்ணாதிரவிட முன்னேற்றக்கழகத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். இவர்களின் வாக்குகளால் பாரதீய ஜனதாக் கட்சி பயனடையும் வாய்ப்பு உள்ளது.



பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் அல்லல்பட்டிருக்கமாட்டார்கள் என பார தீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரசாரம் தமிழகமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுடன் மாற்றுக்கருத்துள்ள வைகோவும், தா.பாண்டியனும் கூட்டணி சேர்ந்ததை விமர்சித்தவர்கள் இப்போது அடங்கிப்போயுள்ளனர்.

பொதுத் தேர்தலில் வெல்லப் போகும் கூட்டணி எது எனத் தெ?யாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் முடிவெடுக்க முடியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியினுள் இரண்டு கருத்து இருப்பதால்தான் டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார் என்று சில செய்திகள் கசிந்துள்ளன.

ஜெயலலிதாவுடன் இணைய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் விரும்புவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி யில் தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி விரும்புவதாகவும் தெரிகிறது. மாற்றுக் கருத்துடைய குழுவுக்கு மகன் தலைமை தாங்குவதால் டாக்டர் ராமதாஸ் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது.

திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். காங்கிரஸை எதிர்ப்பவர்களுக்கும், காங்கிரஸ் கொடியை எரிப்பவர்களுக்கும் கூட்டணியில் இடம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலை வர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதன் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் எஞ்சியுள்ள திருமாவளவனும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர்.

அவர்களின் பின்னால் உள்ளவர்களும் தம்மை வெளிப்படுத்தி உள்ளனர். டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக தமது முடிவை அறிவிப்பார்கள்.

விடுதலை புலிகளின் விஸ்வரூபத்தாக்குதல்

விஸ்வமடு சம்பவத்துக்கு வருவோம். கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவத்திடம் விடுதலைப்புலிகள் மரண அடி வாங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை ஊடகங்கள் கெக்கெலி கொட்டிக் கொண்டுள்ளன. முக்கியமாக, இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான இணையதளத்தில் விடுதலைப்புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றையெல்லாம் அடியோடு அழிக்கும் வகையில் விஸ்வரூபத் தாக்குதலை நிகழ்த்தி இலங்கை அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளனர் விடுதலைப்புலிகள்.

விஸ்வமடு என்ற பகுதியில் இருக்கும் தேராவில் பிராந்தியம் தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை ராணுவத்துக்கு மிக முக்கியமான நிலப்பரப்பு. சமீபத்தில்தான் அந்த இடத்தில் தங்களுக்கென்று பிரத்யேகமாகப் பீரங்கித் தளம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். இலங்கை ராணுவத்தினர் வீரியம் குறையாமல் இயங்க வேண்டும் என்றால், அந்த பீரங்கித்தளம் அத்தியாவசியமானது. இதுதான் விடுதலைப்புலிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தொடர்ந்து தற்காப்புத் தாக்குதலே நடத்திவரும் விடுதலைப்புலிகள், அதிரடி தாக்குதல் ஒன்றை நிகழ்த்த முடிவெடுத்தனர். உடனடியாக நாள் குறித்தனர். மார்ச் 9, 2009. இரவு நேரத்தில் தாக்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால், அதற்குத் தயாராகினர் கரும்புலிகள். ஆம். இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை அவர்களால் மட்டுமே நிகழ்த்தமுடியும் என்பதால், பொறுப்பு அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கூடவே, கிட்டுவின் பெயரால் செயல்பட்டுவரும் பீரங்கிப் படையினரும் இணைந்து கொண்டனர்.

திட்டம் இதுதான். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குள் ஓசையில்லாமல் ஊடுருவுவது. யாரும் எதிர்பாராத சமயத்தில் அதிரடி தாக்குதல் நடத்துவது. எதிரிகள் சுதாரித்து எதிர்த்தாக்குதல் செய்யும் சமயத்தில், காற்றோடு காற்றாகக் கரைந்துவிடுவது. கெரில்லாத் தாக்குதல் என்று இரட்டை வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.

இந்தத் திட்டத்தின்படி விசுவமடு பீரங்கித்தளத்தை அதிரடியாகத் தாக்குவது என்று முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அங்கு ஊடுருவிய கரும்புலிகள், அங்கிருந்த ஆறு பீரங்கிகளைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். வெறுமனே கைப்பற்றியதோடு நின்றுவிடாமல் அந்த பீரங்கிகளைக் கொண்டே இலங்கை ராணுவத்தினர் மீது மின்னல்வேகத் தாக்குதலையும் நடத்தினர்.

வியூகம் வகுத்து நடத்திய இந்தத் தாக்குதல் மூலம் இலங்கை அரசை வெலவெலக்கச் செய்துள்ளனர் விடுதலைப்புலிகள். புலிகள் நடத்திய இந்த அதிரடி கெரில்லாத் தாக்குதலில் கிட்டத்தட்ட ஐம்பது ராணுவ வீரர்கள் பலியாகினர். தாக்குதல் முடிந்ததும் விஸ்வமடு பீரங்கித் தளத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு மறைந்துவிட்டனர் கரும்புலிகள்.

கிட்டத்தட்ட இதே பாணியில் கிளிநொச்சிக்கு அருகில் உள்ள பீரங்கித் தளத்தைக் கைப்பற்றிய புலிகள், தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவும் காரியத்தில் கவனம் கலையாமல் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இன்னும் நிறையப் பகுதிகளுக்குள் ஊடுருவி, முன்னே சென்று கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்தைப் பின்னால் இருந்து சுற்றிவளைத்துத் தாக்கும் முயற்சியில் புலிகள் இறங்கியுள்ளனர். தாக்குதல் தொடரும் என்றே தெரிகிறது!

Saturday, March 14, 2009

புலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி

இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கைப் படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.


விசுவமடு, யாழ்ப்பாணம், கிலாலி உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.


குறிப்பாக, விசுவமடு பகுதியில் ராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலைப்புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.


புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ராணுவ தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


மேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு-ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹிலாரி, போரின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்றம், பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை உலக நாடுகள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுதொடர்பாக இலங்கை அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிலாரியுடன் பேசிய ராஜபக்ஷே, புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒரிரு நாட்களில் பிடித்துவிடுவோம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரச்னைகளுக்கு அரசியல்தீர்வு காணப்படும் என்று ராஜபக்ஷே கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்குப் பகுதியில் நிவராணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ஷே, ஹிலாரியிடம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண்டதா

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?






சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு, திரட்டி மற்றும் வலைபதிவுகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இவர்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.

உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

அப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் இருந்து நேற்று வெள்கிக்கிழமை கலாநிதி நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றது. பொதுமக்கள் தங்கியுள்ள இதர இடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றது.

அப்பாவி தமிழர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயற்சிப்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய செயல்கள், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை. இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.

இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.

7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இதே ரீதியில் போர் நீடித்தால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகின்றோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும், மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும்.

எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக, சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் இதர சுயாதீன அமைப்புக்களும் நிலைமையை துல்லியமாக கண்டறிய சிறிலங்கா அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, March 13, 2009

இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரிக்கை

இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுப்பது கண்டனத்திற்குரியது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் தரக்குறைவாகவும் இடவசதிகள் அற்றும் காணப்படுவது கவலைக்குரியது.

இரு தரப்பும் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடத்தல் வேண்டும். போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதுடன் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

போர் நடைபெறும் பகுதிகளுக்கும் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் அனைத்துலக மற்றும் தேசிய மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு தடைகள் அற்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஏனைய நாடுகளுடனும் உதவி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது: மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.


அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இலங்கையில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார்.


தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.


இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார்.


தமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம் இனப் படுகொலை மனிதப் பேரழிவு ஆபத்து

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கும், மனிதப் பேரழிவுக்கும் உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலறி கிளின்டனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இதே போல ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைசுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டு வரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், ரொம் லான்டொஸ் மனித உரிமைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணியில் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அந்தக் கூட்டு கடிதத்தில் எழுதியிருப்பதாவது:

2 ஆயிரம் பேர் சாவு

இலங்கையின் வட பகுதியில் கொடிய மனிதப் பேரழிவு ஆபத்து ஏற்பட்டிருப்பது குறித்து பெருங் கவலையுடன் இந்த மடலை நாங்கள் எழுதுகிறோம். வன்னிப் பகுதியில் சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் சண்டையில், 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பகுதியினர் வெளியில் இருந்து உணவு, மருந்துகள் கிடைக்காமல் வாரக் கணக்கில் துண்டிக்கப்பட்டுள்ளனர். போரினால் அவர்களின் மனிதத் தேவைகளுக்கும், உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து 2 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

நிலைமையின் கடுமையைக் கருத்தில் கொண்டு, அப்பாவி மக்கள் அனைவருக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மனிதநேய உதவிகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், தேசிய ஆட்சி நிர்வாகத்தில் அர்த்தமுள்ள வகையில் தமிழர்கள் பங்கேற்பதற்கு வழிகோலும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதை நோக்கி முன்னேற வேண்டும் என்றும், தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அழைத்து நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

இனப்படுகொலை ஆபத்து: எச்சரிக்கைப் பட்டியலில் இலங்கை

இனப்படுகொலை தடுப்புத் திட்ட அமைப்பானது, இனப்படுகொலை ஆபத்து எச்சரிக்கைக்கு உரிய 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையைக் கருதுகிறது. இனப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கிற அல்லது உடனடியாக நிகழும் ஆபத்து உள்ள நாடுகளை இந்தப் பட்டியலை குறிக்கிறது. இந்த வேளையில் இனப்படுகொலை குறித்த சட்ட விளக்கங்கள் குறித்து சிலர் சர்ச்சை எழுப்பலாம்.

எனினும், இலங்கையில் பரவலாக இன அடிப்படையில் வன்முறை நடக்கிறது என்பதிலும், சிறிலங்கா அரசின் கொள்கைகளால் சண்டையில் ஈடுபடாத தமிழ் மக்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் என்பதிலும் ஐயம் இல்லை.

அப்பாவி மக்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் தொடர்ந்து நீங்கள் கண்டிக்க வேண்டும். சண்டையில் ஈடுபடாத அப்பாவி மக்கள் சுதந்திரமாக வெளியறி மனிதநேய உதவிகளைப் பெறுவதற்கு இரு தரப்பினரும் மனிதநேய பாதுகாப்புப் பாதைகளை ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள், உதவிப் பணியாளர்கள், செய்தியாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல இசைவளிக்கப்பட வேண்டும். இதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று நம்புகிறோம்.

முகாம்களில் மோசமான நிலைமை

மோதல் பகுதியில் இருந்து வெளியேறி வரும் தமிழ் மக்களுக்காக சிறிலங்கா அரசு அமைத்துள்ள பாதுகாப்பு முகாம்களில் உள்ள நிலைமைகளும் எங்களுக்குப் பெரிதும் கவலை அளிக்கின்றன. வன்முறைக்கு அஞ்சி வெளியேறி வரும் சண்டையில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்குப் புகலிடம் அளிக்க வேண்டியது முன்னுரிமைக்கு உரியது என்பது தெளிவானது. ஆனால், அங்குள்ள அப்பாவி மக்களின் மனிதநேயத் தேவைகளுக்கு இந்த முகாம்கள் போதுமானவையாக இல்லை.

நல்வாழ்வுச் சிறார்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்கள் காவல் முகாம்கள் என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் அதனுடைய பெப்ரவரி 20 ஆம் நாள் அறிக்கையில் கூறியுள்ளது. முட்கம்பி வேலி போடப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம்களில் முழுக் குடும்பங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சுதந்திரமும், சுதந்திரமான நடமாட்டமும் மறுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது துணைப் படையினர் அந்த முகாம்களுக்குள் செயற்படுகின்றனர். எண்ணற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுகின்றனர், உடைமைகள் பறிக்கப்படுகின்றன. சிலர் காணாமல் போகின்றனர் என்று மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்களின் நிர்வாகத்தை ஐ.நா. அமைப்புக்களிடம் ஒப்படைக்க வேண்டும்

முகாம்களில் உள்ள அனைத்து அப்பாவி மக்களுக்கும், முகாம்களில் தங்கியிருப்பதற்கு அல்லது எப்போது விரும்புகிறார்களோ அப்போது வீடு திரும்புவதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களின் நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும் உதவி செய்யும் பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஏற்க வேண்டும். இந்தப் பணியை ஏற்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பையும், இதை ஐக்கிய நாடுகள் சபை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு சிறிலங்கா அரசையும் அரசையும் நீங்கள் தூண்ட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்க வேண்டும்

இலங்கை இனப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முன்வருமாறு பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.

இறுதியாக, தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கேற்பும் அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஐம்பதாண்டுக் கால வன்முறைக்குக் காரணமான இனப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கத் தலைமை முன்வர வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத வரையில், மோதலுக்கு நிலையான முடிவு ஏற்படாது. வரும் மாதங்களில் சிறிலங்காவுக்கு அமெரிக்க நிதியுதவியும், அனைத்துலக மறுசீரமைப்பு நிதியுதவியும் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், அரசில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பங்கேற்பு அளித்தால்தான் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்பதை நிபந்தனையாக விதிப்பதற்கு பிற அனைத்துலக நன்கொடையாளர்களுடன் அமெரிக்க நிர்வாகம் இணைந்து செயற்பட வேண்டும் என ஹிலறி கிளிண்டனுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிபிட்டுள்ளனர்.

Thursday, March 12, 2009

தமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,

தமிழ்மணமே உனக்கு எங்களது தமிழ் உணர்வாளர்கள் சார்பாக இந்த புகார் கடிதம் அளிப்பதில் மிகுந்த கவலையடைகிறேன். தமிழனை காப்பாற்றுவதற்கு இன்று தமிழனிடமே போராட வேண்டியிருக்கிறது, மன்றாட வேண்டியிருக்கிறது. உரிமை கிடைக்கும் வரை அமைதியான முறையில் போராடுவது ஒன்றே வழி.

இங்கு நமது நண்பர் RB அவர்கள் அழகாக எடுத்துரைத்த இதையே உனக்கு புகாராக அனுப்பலாம் என்று இருக்கிறேன். போதுமான அளவுக்கு முந்தைய பதிவுகளில் எடுத்து சொல்லியாகி விட்டது, எதற்கு தமிழின உணர்வாளர்கள் முகப்பில் வேண்டும் என்று. இதற்கு மேலும் விளக்கம் கூறத்தேவையில்லை.

இங்கு எந்த எதிர்மறையான கருத்துகளும் பின்னூட்டங்களில் அனுமதிக்க போவதில்லை.

உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் கையெழுத்து போட்டு செல்லுங்கள், மீண்டும் தமிழின உணர்வாளர்களை தமிழ் மணத்தில் முன்பு போல் முகப்பில் காட்ட வேண்டும் என்று.

மறக்காமல் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். இனி நண்பர் RB அவர்களின் கருத்தினை பகிர்ந்து கொள்வோம்.

I'm a regular visitor of Tamilmanam and I highly appreciate the service provided by the Tamilmanam.

We are getting very limited time to browse internet due to our busy work schedule. During this short period, we try to get all the news about Sri Lankan Tamil struggle and its reflection in Tamil nadu. Mike did a wonderful job by spending valuable time to collect all relevance news and posting it in a single place which we could not do it from here.

There are hundreds of people, like me, who don’t have much time to visit each and every web site like Kumudam, Vikatan, Puthinam, Pathivu, Nitharsanam, sangathi etc…..and read the articles relevant to Tamil struggle.

I understand the Tamilmanam’s intention to improve their website but it (improvement) should not tarnish the real purpose of the website. What is the purpose of the Tamilmanam? It would be improve the writing skills of the Tamil speking people and provide a platform to shear their thoughts. If you want to improve the writing skills of the Tamil people, first of all you need Tamil people. That mean you need ‘Wall’ to draw a painting. If there is a danger to the ‘wall’ you have to try your best to save the ‘wall’ not the painting. If you can save the wall, any time you can draw a painting on it.

That is happening to Tamils today in Sri Lanka. Tamils are in danger and we need to save them at any cost and any mean. If you can save them now, then you can save their Tamil writing skills later or it will be saved automatically.
I humbly request the Tamilmanam administrator to allow the people, like Mike, who are sincerely and affectionately doing something to the Tamil or Tamil people.
Improvement is very very important but existent is important than that. Do your website improvement later not now.

-RB from Dubai

Wednesday, March 11, 2009

மைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா?

அவருடைய பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு: தமிழ்மணத்தில் தமிழர்களுக்கு ஆதரவில்லை எனில் இனி நான் இங்கு எழுத போவதில்லை. நான் எழுத ஆரம்பித்தற்கு காரணம் தமிழ்மணமே, எழுதாமல் இருக்க போவதற்கும் காரணம் தமிழ் மணமே.

இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு இல்லாவிடினும், இது தமிழ் மக்களுக்கு ஒரு இழப்பாகவே கருதுகிறேன். நானே என்னை பத்தி சொல்லிக்க கூடாது. ஆனால் வேறு வழியில்லை இன்று. என்னால் தமிழ்மணத்திற்கு வருகை தரும் ஒரு குழப்ப நிலையி உள்ள மக்களை தமிழர் பக்கம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அது நடக்கவும் செய்தது. ஆனால் இன்று மீண்டும் துரோகிகள் எல்லாம் முன் பக்கத்தில் ஆனால் தமிழ் உணர்வாளர்களோ பின் பக்கத்தில். எங்களுக்கு கொடுக்கும் மரியாதை எந்த விதத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஆதரவாக இல்லாட்டியிம் உங்களிட ஒரு நடுநிலையை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுவும் கிடைக்காத போது, அழையா விருந்தாளியாக வர என் மனம் இடம் கொடுக்க மாட்டேங்குது.

தமிழ் மணம் பாலுவின் இன்றைய பதில்கள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

Sent: Wednesday, March 11, 2009 6:11 PM
Subject: Re: my blog not showing


Hi:

We are always trying to improve the way we present the blog posts. I am sure, news section will see still better improvement in the coming days.

Thanks for your continued support.

Balu


மேலுள்ள செய்திக்கு என்னுடைய பதில்



Sent: Wednesday, March 11, 2009 6:19 PM
Subject: Re: my blog not showing


Thanks for your information Balu,

why don't you treat same as other rather than showing our posts in the cornet . You dont think we are helping to improve tamil people in all ways.
if you ignore us, then there are many people against tamil, they will be like a king in the main section.

Please again and again i'm telling we are not running our blogs to get money, we run for tamil people only. if you ignore us, it means you ignore the entire tamil people.


Thanks

Tuesday, March 10, 2009

புதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்

தமிழ் மணமே நீ ஏன் இப்படி தமிழ் உணர்வாளர்களை போட்டு பாடாக படுத்துகிறாய். இவர்கள் யாருக்காக எழுதுகிறார்கள். தன்னுடைய சுய நல்ன்களுக்காகவா எழுதுகிறார்கள், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

தோழா நிலவு பாட்டு வணக்கம்

தமிழ்மணத்தின் இந்த சிறிய மாற்றம் மன வருத்தமே அளிக்கிறது.
1.செய்தி பிரிவில் பதிவுகள் அதிக நேரம் இருப்பதில்லை.

2.புதிய பதிவின் முந்தைய பதிவு இந்த மாற்றதால் தெரிவதில்லை.

3.செய்தி பிரிவில் அளிக்கப்படும் பதிவுகள் சொற்ப நேரமே இருப்பதினால் இதனால் வாசகர் பரிந்தரையிலோ அல்லது சூடான இடுகையாகவோ மாற வழி இல்லை. இது மிக பெரிய குறை.

இருந்த போதிலும் இன்று நான் இட்ட பதிவில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறியே பதிவு தொடங்கினேன். பொறுத்து பார்போம் இன்னும் பழைய மாறுதல் வரும் வரை.

பட்டினத்தார் பாடல் ஒன்று நாபகம் வருகிறது.

":தன்வினை தன்னை சுடும்
ஒட்டப்பம் வீட்டைச்சுடும்"

குள்ள நரி கூட்டத்திற்க்கு காலம் பதில் சொல்லும்.

நண்பா ஆடுகள் நிறைந்த உலகம் பாதைகளை பின்பற்றுமே தவிர அவற்றிக்கு பாதை அமைக்க தெரியாது.

இதை கண்ணதாசன் பாடலில் காணலாம்.

"யாரை எங்கே வைப்பது என்று யாருகும் தெரியல...
அட அண்டகாக்கைக்கும் குயிலுக்குக் பேதம் புரியல."

அன்புடன்
புதுவை சிவா

தமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு

தமிழ் மக்கள் மத்திய அரசிடம் போர் நிறுத்தத்துக்கு கேட்கிற மாதிரிதான் எங்களுடைய கோரிக்கைகளுமா. எத்தனையோ மக்கள் வன்னியில் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருக்க, அந்த செய்தியை உலகுக்கு சென்றடையாமால் தடுக்க நினைப்பதேன்.

உனக்கு புரியிம் விதத்தில் எத்தனையோ கருத்துக்கள் நமது நண்பர்கள் கூறி விட்ட்டார்கள், இன்னும் ஏன் இந்த மவுனம்.

இந்த நண்பரின கருத்துகளை பாருங்கள், மனம் மாறுங்கள்

/*செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?
*/

சரியாக சொன்னிர்கள்

எந்த உணவாக இருந்தாலும் வாய் வழியாகத்தான் சாப்பிட வேண்டும் உணவுகுழல் வழியாகத்தான் வயிற்றினை அடைய வேண்டும். இல்லை இது எனக்கு பிடிக்காது அதனாலே நான் பின்னாடி வழியாதான் இதை அனுப்புவேன் சொன்னால் அவனை பார்த்து சிரிக்கறதா இல்லை அழறதா.


சொந்தமாக எழுதறது கூட ஒரு வகையில் வலைகளில் மேய்ந்து அதை மென்று கொத்தி, கொதறி கொடுப்பதும் அடங்கும்.

இந்த நம் தமிழின உணர்வாளர்கள்(மைக்,.....) உண்மையாக நன்றியுடன் எடுத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அதுதான் பிரச்சனையே. உண்மைக்கு இப்போது காலம் கிடையாது.

ஒரு தமிழின துரோகி பல காலமாக போட்டதையே இரு மாதத்துக்கு திருப்பி, திருப்பி போடறான் அவனெல்லாம் ராஜா. மொத்தம் 30 இடுகை வச்சிட்டு இவன் பண்ற அட்டூழியம் இருக்கே அப்பா.

எவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை

தமிழ் மணத்திற்கு நன்றி, ஆனால் இது யானை பசிக்கு சோள்ப்பொறிங்கற மாதிரி இருக்குது, முகப்பில் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் இப்படி மாற்றுகிறார்களே.

கருணாநிதி போர்நிறுத்ததக்கு பிராணாப்பை அனிப்பின கதைதான்.

மைக் நீங்க வேற, இவனுங்க சீமான் கைதையும் சரின்னுதான் சொல்லுவானுங்க, சீமானின் கதியே இன்று உங்களுக்கும். உண்மை பேச கூடாது, ஏதாவது ஒரு கட்சிக்கு ஜால்ரா அடிக்கனும் இதெல்லாம் இல்லாட்டி கொஞ்சம் தாக்கு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் இருக்குது பாருங்க. முட்டா தமிழன், உங்க பொழப்ப பாருங்க மைக். நிம்மதியா குடும்பத்தோட இருங்க. எதுக்காக ராப்பகலா உழைக்கிறிர்கள். அலுவலகம் விட்டு வந்தோமா, டிவி ல ஒரு 2 மணி நேரம் செலவழிச்சோமான்னு ஜாலியா இருங்க.

எவன் செத்தா உங்களுக்கென்ன, மரியாதை குடுக்க தெரியாத மடையர்கள் இவர்கள். தானும் பேச மாட்டான், அடுத்தவனையிம் பேச விடமாட்டான். மலையாளத்தான் சரியாத்தான் சொல்லி இருக்கான். பாண்டி, பாண்டின்னு. நீங்களும் பாண்டியாவே இருந்திடுங்க, உங்களை தூக்கி வைப்பானுங்க இவனுங்க.

அன்புடன், கோபமுடன்
தோழன் தேவா

Monday, March 9, 2009

தமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்

சமீபத்திய தமிழ்மண மாற்றங்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், இதில் எனக்கும் எந்தவித உடன்பாடும் இல்லை. நாம் தமிழின உணர்வாளர்களை இழந்துள்ளோம், அவர்களின் செய்தி மக்களிடம் அதிக அளவில் சென்றடைவது தடுக்கப்படுகிறது அதுவும் இத்தகைய ஒரு சூழ்நிலையில் வன்னி படுகொலை, பாராளுமன்ற தேர்தல் வரும் நேரம் இத்தகையதொரு முடிவினை தமிழ்மணம் ஏன் எடுத்தது, இதன் பிண்ணனி என்ன எதுவும் தெரியாது. கண்டிப்பாக இது துரோகத்தனம் எதுவும் இருக்காது என நம்புகிறேன்.

ஆனால் இது ஒரு தவறான முடிவு. தவறு செய்வது மனிதனின் இயல்பு. அனைவரும் தவறு செய்கிறோம்.

ஆனால் தவறு என்று உணர்ந்து அதை திருத்தி கொள்பவன் ஞானி, அதில் தவறேதும் இல்லை. அது அவனுக்கு நல்ல ஒரு பழக்க வழக்கத்தை கற்று கொடுக்கிறது.

தமிழ் மணமும் தன் தவறை உணர்ந்து ஞானியாக வர வேண்டும் என்பது என் கருத்து. அது மேலும் உங்களின் மகுடத்தில் ஒரு கல் பதிப்பது போன்றதே. நீங்கள் நினைப்பது போல் அது கோழைத்தனம் அல்ல, பின் வாங்குவது அல்ல. என்னுடைய தந்தை எனக்கு கற்று கொடுத்த பாடம், பின்வாங்குவதும், தவறினை திருத்தி கொள்வதுமே ஒரு மனிதனை உண்மையான மனிதானாக்குகிறது.

நான் எடுத்த முடிவுதான் சரி எவனும் என்னை கேட்கமுடியாது, புயலுக்கு எதிராக புல்லாகதான் வளைய வேண்டும்.

அதற்க்காக தடைசெய்யப்பட்டவர்கள் புயலாகவும், நீங்கள் புல்லாகவும் நினைக்கவில்லை. உங்களுக்கு ஆயிரக்கணக்கில் பதிவர்கள் இருக்கலாம், இவர்கள் ஒரு துரும்பே இல்லை உங்களுக்கு. ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியினை நினைத்து பாருங்கள். ஒரு ரூபாயாக பிரிக்கப்பட்ட பணங்களும் இன்று ஈழத்தமிழர்களின் வயிற்று பசியினை போக்குகின்றன. இவர்களின் ஒரு செய்தி ஒரு நல்லவனிடன்(ஓபாமா, ஹிலாரி கிளிண்டன், மெக்ஸிகோ, சீமான் போன்றவர்களிடம்) போய் சேர்ந்தால் அதனால் விடுதலை கிடைக்காதா என்ன.

நாம் அனைவரும் தமிழரே, தமிழ் இனத்துக்காக போராடுபவர்கள் நமக்குள் ஏன் இந்த கருத்து வேறுபாடு.

மன்னிக்கவும் குளிர் காய்பவர்கள் என்று தலைப்பு வைத்து விட்டு வேறு என்னமோ பேசறேனுங்க. எதுக்கு அநாவசியமாக துரோகிகளை பத்தி பேசணும் தமிழ் மணம் மாறிவிட்டால். தேவையென்றால் மற்றுமொரு பதிவில் காணாலாம்.

நண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்

நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.

இதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.

எப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது.

நீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன்.

நோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.

தமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்...

இப்படிக்கு
நங்கூரம்

எல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்

இவருடைய பதிவுகள் இன்னும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவருக்காக.

வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து வெளியிடும் உங்கள் சேவைகளுக்கு முதற்கண் நன்றிகள் சுயமான எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனாலும்

ஈழத்தமிழர்களின் அவலங்களை ,செய்திகளை ,நியாங்களை சகல சர்வதேச ஊடகங்களும் சிறிலங்கா அரச பயங்கரவாதமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அருவருடிகளும் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் நேரத்தில்

ஒரு சில வலைப்பதிவாளர்களால் தான் அவை வெளிக் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தது அதற்கும் இப்போது தமிழ்மணம் தனது திரட்டியில் ஆப்பு வைத்திருக்கிறது


தமிழ ஆளும் வர்க்கத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பேச்சாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பேச்சுரிமை சாகடிப்பட்டுக் கொண்டிருக்க வலைப்பூவிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதன் தொடர்ச்சியே இப்படியான நடவடிக்கை என்று எண்ணத்தோன்றுகின்றது


தமிழ்மணத்தில் அண்மைக்காலமாக தமிழக மக்களின் எழுச்சியின் பதிவுகளே ஆக்கிரமித்திருந்தன ஆனால் முகப்பில் அவை எதுவும் காணப்படுவதில்லை நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்

தற்போதைய தேர்தல் காலத்தில் இவை சந்தேகத்தை எழுப்புகின்றது ?????


முகப்பில் உள்ளவற்றை மட்டுமே பலராலும் பார்க்கப்படுகின்றன இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தவிர செய்திகள் என்று முகப்பில் நாலும் வரி மட்டும் காண்பிக்கப்படுகின்றது நானே எனது பதிவினைக் காணவில்லை என்று நிர்வாகத்திடம் முறையிட்ட பின்னர் தான் எனது பதிவு எங்கிருக்கும் என்று அறிந்து கொண்டேன்

எனது வலைப்பதிவு தற்போது 80 % குறைவடைந்து விட்டது

ஏன் நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு வருகையை கவனித்தீர்களா ??


ஈழத்து செய்திகள், அரசியல் தமிழகம் ,ஆய்வுகள் , கட்டுரைகள் , அறிவிப்புக்கள் , பரப்புரைகள் போன்ற பல வகைகளை செய்திகள் என்ற ஒன்றினுள் வகைப்படுத்தி ஒரு சிறிய விடயமாக்கி விட்டீர்கள்


இங்கு வலைப்பதிவுகளின் மூலம் தான் எமக்கு எதிரான இருட்டடிப்புக்களை ,அவதூறுகளை அம்பலப்படுத்தி வந்தோம் அதில் வெட்டி ஒட்டுவது தவிர்க்க முடியாதது


எமது நோக்கம் இவை பலருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே ஒழிய விளம்பரப்படுத்தல் அல்ல


இதை நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்


தவிர புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள அருவருடிகளால் புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுகள் மிகக் குறுகிய கால நேரத்தில் அறிவிக்கப்படுகின்றன அவற்றினை பரப்புவதற்கு எமக்கு இந்த வலைப்பதிவு திரட்டிகள் பெரிய அளவில் உதவி புரிகின்றன


அவை முகப்பில் இருந்தாலொழிய பலரை சென்றடையமாட்டாது

ஆகவே இதற்கு மாற்றீடு செய்யும் வரையில் பழைய முறையை தற்காலிமாக அனுமதிப்பது தற்போதைய இந்திய தேர்தல் ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் மாற்றம் இந்திய அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என்ற பின்னனியில்


இருட்டடிப்பு செய்வது தகுமா ?????


இது குறித்து தமிழ்மணம் நிர்வாகமும் உறுப்பினர்களும் ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்


உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்


நன்றி
எல்லாளன்

http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_08.html

ஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது

/* ஒரு விசயம் ஏற்கனவே கிடைக்கும் போது அதை மீண்டும் அதை எந்த விதத்தில் தனக்கு தகுந்த மாதிரி மனிதன் பயன்படுத்தி கொள்கிறான் என்பதே முக்கியம். கிரிக்கெட்டில் பேட் அவனேதான் பண்ணி விளையாடனும் அப்பதான் அவனுக்கு ரன் கொடுக்கப்படும் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல் உள்ளது உங்களின் வாதம் அவன் வேறு எங்கிருந்தோ பேட் வாங்கிருந்தால் இரண்டு ரன் எடுத்தாலும் ஒரு ரன் கொடுப்போம் என்பது எப்படி ஒரு முட்டாள் தனமோ, அது மாதிரி உங்களின் சிந்தனை உள்ளது. */

வளன் சரியாக சொன்னீர்கள், ஏன் மதுபாலாவும், தமிழ்மணமும் இணைந்து ஒரு internet கண்டுபிடிக்கட்டும், browsing software கண்டுபிடிக்கட்டும், ஒரு operating system கண்டுபிடிக்கட்டும், ஒரு server கண்டுபிடிக்கட்டும், ஏன் மற்றொருவரின் technology பயன் படுத்துகிறார்கள். வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்துமே மற்றவர்களின் முந்தைய கண்டுபிடிப்பே. ஏன் நம் எழுத்துக்களும் ஒரு வகையில் மற்றவர்களின் தாக்கமே.

தமிழின விடுதலை தன்னால் மட்டுமே எடுத்து செல்லப்பட வேண்டும், ஆனால் என்னால் என் வரம்புக்கு மீறி எதுவும் பேசவும் முடியாது, அப்படி எவனும் பேசினால் அதுவும் கூடாது என்று சொல்லும் கருணாநிதியை போல் உள்ளது உங்களின் கருத்து.

Sunday, March 8, 2009

தம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…

முதலில் தமிழ்மண முகப்பில் தடை செய்யப்பட்டவர்களுக்காக எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். தமிழ் மணத்தின் இந்த செய்கை பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி இங்கு நான் என் பதிவுகளை தொடர்கிறேன். தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற என்னால் முடிந்தது அவன் விரோதியோ/நண்பனோ யாராயிருந்தால் எனக்கென்ன. என்னை தமிழ் மணத்திலிருந்து நீக்கினாலும் என் குரல் ஓயாது உழைக்கும். உண்மைகளை தட்டி கேட்கும்.

Saturday, March 7, 2009

தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்மணமே ஏன் இந்த மாற்றம், நாங்கள் விரும்பி படித்து வந்த எல்லாளன், தெய்வமகன், புதுகை சிவா, மைக் இவர்களை எல்லாம் தனியாக ஒதுக்கி செய்திகள் என்ற பிரிவில் எந்த அறிவுப்பும் இன்றி சேர்த்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கண்டிப்பாக இதுவும் ஒரு தமிழீழ போராட்டத்திற்கு போடப்படும் தடையே. அதுவும் இவர்களின் பதிவுகளில் இருந்த ஒரு சுவராசியம், விறுவிறுப்பு, இனவெறி சிங்கள அரசினை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் இனி யாருக்கு வரும்.

இவர்களின் பதிவுகள் முன்முகப்பில் காண்பிப்பது இல்லை என்பது, உப்பு சப்பில்லாத உணவு பொல் உள்ளது.

இவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கின்றன.

மீண்டும் அவர்களின் பதிவுகளை முகப்பில் இணைக்க வேண்டும் எனகேட்டு கொள்கிறேன்.

மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்கவும்

சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கடந்தவார அழிப்புகள்
திகதி: 07.03.2009 // தமிழீழம் // [வன்னியன்]
சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலையில் சிக்கியுள்ள மக்களின் அவலக் காட்சிகள் இவை. கடந்த சில தினங்களுக்குள் நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தகின்றன இந்தச் சாட்சிகள். சிறிலங்காவின் இன அழிப்பில் தமிழ் குழந்தைகள் கொûமாக படகொலையாகும், படுகாயங்களுக்கு உள்ளாகும் அவலங்களை இந்த சாட்சிகள் அம்பலப்படுத்தகின்றன. மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தவதற்கு இவ்வாறான கொடூரமான சாட்சிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.


1 to 6 Mar 2009 Genocide of tamils by srilankan Govt-video


Thursday, March 5, 2009

இலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குறித்து கவலைப்பட மாட்டேன்: திருமாவளவன்

ஒரு உண்மை தமிழன், திருமா வாழ்க. வை.கோ, ராமதாஸ் உங்களின் கைகளிலும் தமிழனை காக்கும் சக்தி உள்ளது. கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையே முக்கியம், நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தமிழக மக்களை தட்டி எழுப்பும் வகையில் நாம் தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயண நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடக்கின்றது.

மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் த.பார்வேந்தன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன், சோகன்பிரபு, கராத்தே பாண்டியன், முன்னிலை வகித்தனர்.

மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு, பாமக எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கே.ஆறுமுகம், ஒன்றியக் குழுத் தலைவர் பரந்தூர் சங்கர், பாசறை செல்வராஜ், மக்கள் மன்றம் மகேசு, இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன் வாழ்த்திப் பேசினர்.

திருமாவளவன் பங்கேற்று பேசியது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மேலும் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையின் தீவிரத்தை சாதாரண பொதுமக்கள், பாமர மக்களை உணரச் செய்யும் வகையில் நாம்தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 800 குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 8 நகரங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை தான் எனக்கு முக்கியமே தவிர, நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன்.

மத்தியில் காபந்து அரசு இருந்தாலும், அதிகாரிகள் மனது வைத்தால் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும் என்றார் திருமாவளவன்.

வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயணத்தை பாவலர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். 20 கி.மீ. தூரம் வெங்குடி, ராஜாம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஐயம்பேட்டை வழியாக காஞ்சிபுரத்தில் நடைப்பயணம் முடிவடைகிறது.

மாலையில் வணிகர் வீதியில் பொதுக் கூட்டம் நடக்கிறது.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காஞ்சிபுரத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைப்பயணம் நிறைவடைகிறது.