Saturday, March 28, 2009

காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகோதரத்தமிழன்

போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக
அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்...
ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர்.

இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை
தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக இனவெறி சிஙள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் நிதியங்களை கொட்டிகொடுத்தும் தொழினுட்பங்களையும்
ஆளணிகளையும் கோழைத்தனமாக மறைத்துக் கொடுத்தும் வாக்களித்த தமிழர்களின் கழுத்தை அறுத்து ஈழத்து சொந்தங்களை இனப்படுகொலை செய்யச்சொல்லி
ஆனந்தப்படுவதும் ஆற்றாது அழுது புரண்டு போரை நிறுத்தச்சொல்லி மன்றாட்டம் செய்தால்.. ஓடோடிச்சென்று சிங்கவளனை பாராட்டுவதையும் .we are not
concerned about LTTE... I am not fond of LTTE.. என்று ஏகடியம் பேசுவதையும் பார்த்து நாம் நெஞ்சு கொதித்து நின்ற நேரம் ஏதோ துளி ஆறுதல்.

உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் முலாயம் மற்றும் லாலு முறையே தந்த சம்மட்டியடிக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஒரு மரண அடியே
தந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இத்தாலிக்காரி சோனியாவின் தான்தோன்றித்தனத்துக்கு மக்களும் தம் பங்குக்கு நெற்றியடி தர தயாராகி வருகிறார்கள். இதுவே இன்றைய நாட்டு நடப்பு. இவ்வேளையில் இன எதிரி ஜெயலலிதாவோடு கூட்டா? என கேட்கும் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான பதில் இதுதான். இது காலத்துக்கு தேவையான ராஜரீக நகர்வு அவ்வளவே.

இனப்பகைவன் பிரேமதாஸாவோடு கைகோர்த்து சதிகார இந்திய துரோகப்படையை புலிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றியதைப்போல முதலில் கொலை வெறி காங்கிரஸையும் அதன் கைக்கூலிகளையும் தமிழ் மண்ணைவிட்டு வெளியேற்றுவோம். பிறகு மற்றதை பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் அரசியல் வானில் சுழற்கோளாய் வலம் வரும் திருமாவோ கருணாநிதியின் திருதராஷ்டிர ஆலிஙகனத்தில் சிக்கித் தவிக்கிறார். அந்த
சக்கர வியூகத்திலிருந்து வெளியேற தா.பாண்டியன் மற்றும் வை.கோபாலசாமி போன்ற தலைவர்கள் தான் உதவ வேண்டும்

திருமா அவர்களே ஒரு பாரத ரத்னா விருதுக்காக தமிழினப் படுகொலைக்கு துணை போகும் கருணாநிதி தான் வடிக்கும் முதலைக் கண்ணீரை தமிழ் மக்கள் நம்ப
வேண்டும் என்பதற்காக உங்களை அருகில் வைத்துக்கொள்ள துடிக்கிறார். தயவு செய்து அந்த துரோகத்துக்கு துணை போய் வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம்
என்று சகோதரத் தமிழன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

http://www.tamilwin.org/view.php?2a36QV14b34Z9E834dbSWnPeb0217GQc4d2iYpD4e0dpZLu0ce03g2hF2ccdPj0o0e

4 Comments:

Anonymous said...

தமிழ்மணம் இப்போது குடுமிகளின் மணமாகி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களின் ஆணவம், அராஜகம், திமிறுதனம் அனைத்தும் குடுமிகளுக்கே உள்ள சிறு புத்தி. தமிழனின் அழிவினை வேடிக்கை பார்க்க துடிக்கும் இந்த குடுமிகளின் மணத்தினை ஒழிப்போம்.

Anonymous said...

உண்மைதான், இவர்களின் அராஜகம் எல்லை மீறி போகிறது. கருணாநிதியை விட மோசமானவனுங்களா இருப்பார்கள் போலுள்ளது. எந்த தமிழின அழிவு செய்தியினையிம் இப்போது காணமுடியவில்லை. குடுமி மணமே உன் குடுமி வேலையை காட்ட ஆரம்பித்து விட்டாய்.

Anonymous said...

thamilmanathinai poonul manam enru alaipmom

சந்துரு said...

என்னைப் பொருத்தவரை தமிழக்த்தில் யார் திமுக வா அல்லது அதிமுகவா என்பதில் பிரச்சினை இல்லை இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
ஆனால் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
திருமா சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவு