Tuesday, March 17, 2009

தமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது

இப்போது என்னையும் செய்தி பிரிவில் போட்டு விட்டார்கள். தமிழின அழிவினை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

தமிழன் ஒவ்வொரு நாளும் நூற்று கணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது, தமிழ்மணத்தின் இந்த போக்கு போக்கு பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. யாரும் எந்த பதிவரும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நூற்றுக்கணக்கான அனைத்து தமிழின கொலைகளும் உட்கார்ந்து எழுதப்போவதில்லை. இதை உலக மக்களிடம் சென்றடையும் வேகத்தினை தமிழ்மணம் தடை போடுகிறது. இதன் பிண்ணனி என்னவென்று சரியாக ஊகிக்க முடியாவிடினும் இது தமிழின விரோத போக்கின் ஆரம்பம் என்பது உறுதி.

தமிழ்மணத்தை இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

20 Comments:

Unknown said...

இது நிச்சயம் சதிதான். அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது முகப்பில் தெரியும் நிறைய பதிவுகள்
தட்ஸ் தமிழில் வெளிவந்த செய்திகளின் காப்பிதான். இவர்கள் அனைவருக்குமே நியாயமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும், தட்ஸ்தமிழ் நிர்வாகிகள்.

தமிழ்மணத்துக்கு இந்த காப்பிகேட்ஸ் ஏனோ கண்ணுக்கே தெரியவில்லை போலும்...

உதாரணம் 'வல்லிபுரத்து ஆழ்வார் கோயில்' எனும் பெயரில் எழுதும் பதிவரின் செய்திகள் அனைத்தும் தட்ஸ்தமிழிலிருந்து திருடப்பட்டவையே.

இன்னும் பலரது முகப்புப் பதிவுகள் புதினம், தமிழ்வின் மற்றும் பதிவிலிருந்து திருடப்பட்டவை.

குறைந்தபட்சம் அந்த தளங்களின் பெயர்களைக் கூட தர இந்த காப்பிகேட்களுக்கு மனம் வரவில்லை.

இந்த லட்சணத்தில் இந்த துடைப்பக் கட்டைகளுக்கு தமிழ்மண முகப்பு எனும் பட்டுக் குஞ்சம் வேறு.

முகப்புப் பக்கத்தில் உருப்படியாக ஒரு செய்தியாவது, பதிவாவது இடம் பெற்றுள்ளதா பாருங்கள்...

முரளிக் கண்ணன் போன்ற சிலரது பதிவுகளைத் தவிர மீதி எல்லாமே பைத்தியக்காரன் வாந்தி எடுத்த மாதிரி கேனத்தனமான பதிவுகள். முழுக்க முழுக்க காப்பி... அல்லது லூஸ்தனமான எழுத்து.

என்ன கொடுமய்யா இது...

ஒழுங்கான செய்திகளைத் தந்து கொண்டிருந்த எல்லாளன், மைக், என்வழி என எல்லாரையும் ஒழித்துக் கட்டிவிட்டு, இந்த கேனப் பயல்களோடு கும்மியடித்துக் கொண்டிருக்கட்டும் தமிழ்மணம்...

முதல்ல தளத்தின் பெயரை மாற்றுங்கள், தமிழ்த்துரோகிமணம் என்று!

Anonymous said...

ஏன் இவர்களுக்கு தமிழ் உணர்வாளர்கள் மேல் ஓர வஞ்சனை. ஹம்சாட்ட ஆட்டைய போட்டுட்டானுங்களா போல தெரியுது.

Anonymous said...

தமிழ்மணத்தின் நயவஞ்சக குள்ளநரி தந்திரம், வாசகர் பரிந்துரையில் எதிர் வாக்கு யாரும் அளித்தால் இவர்கள வாக்குகளையும் ஒன்று குறைப்பார்களாம். இதன் மூலம் மேலும் தமிழீழ சம்பந்தமான இடுகைகளுக்கு ஆப்பு வைக்கும் வேலையும் சத்தமே இல்லாமல் தமிழ்மணம் ஆரம்பித்திருக்கிறார்கள்.


தமிழீழ இடுகைகளுக்கு எதிர் வாக்கு அளிப்பது துரோகிகளும், ஹம்சாவோட ஆளுங்களுமே.

அவங்களுக்கு சாதகமான முடிவினை தமிழ்மணம் எடுத்துள்ளது.

Anonymous said...

mahindavin uudaga suthanthiram = thamilmanathin seithy pirivu

i also notice this change in tamilmanam, they are taking decison which is favour to mahinda.

Anonymous said...

test

எல்லாளன் said...

நான் எப்போதே தமிழ்மணத்தை புறக்கணித்து விட்டேன்

நீங்கள் இன்னுமா ? ???

இரந்து கேட்பதற்கு பெயர் சுதந்திரம் இல்லை

அது பிச்சை

அது கூட கொடுப்பவர்களிடம் தான் கேட்கலாம்

Anonymous said...

Hi Guys,

What's the use in making so much noise over Tamilmanam's attitude. So much of importance to one brand always gives a kind of monopoly to the promoters. Better concentrate on other thiratti too like http://newspaanai.com, http://www.tamilveli.com and http://www.valaipookkal.com and start adding your links on those thiratigal. Sites like Tamilmanam depends on active bloggers like us and it's not the other way round. If we all boycott the site by promoting other such sites, we can have the upperhand. Think over and stop giving too much importance too arrogant web aggregators.

Anonymous said...

தமிழ்மணத்தினை மூடிக்கட்டினால், உங்களுக்கும் நிம்மதி, இந்தியத்தேசியவியாதிகளுக்கும் நிம்மதி, தமிழ்மணத்தினை நடத்துகின்றவர்களுக்கும் நிம்மதியாக இருக்கும். உங்களுக்கெல்லாம் தினமலர், இந்து, துக்ளக்தான் சரி. உங்களின் இஷ்டப்படி ஆடாவிட்டால், துரோகம் மயிர் எல்லாம் பேசத்தொடங்கிவிடுவீர்கள். கொஞ்சமேனும் மூளையை விட்டு யோசியுங்களேன்.

தமிழ்மணத்தினை நடத்துகின்றவர்கள் உங்களிலே ஒவ்வொரு காக்காயையும் விட ஈழத்தமிழர்களுக்கு உருப்படியாக எத்தனையோ செய்கிறார்கள். கொஞ்சம் அறிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். சும்மா வெட்டி ஒட்டுவதிலேயே வாய் பிளந்துபோகிறது உங்களுக்கு.

இப்படியே நடத்தினால், தமிழ்மணத்தினைவிட்டு உங்களை அவர்கள் நீக்காததற்கு எங்களைப் போன்றவர்கள் குரலை எழுப்பவேண்டும். சும்மா எதற்கய்யா ஈழத்தமிழர் பெயரிலே உங்கள் வெறுப்புகளையும் ஈகோகளையும் வைத்து சுயமைதுனம் செய்கிறீர்கள்?

நிலவு பாட்டு said...

/* மூளையை விட்டு யோசியுங்களேன். */ அப்படி யோசிக்கறதுனாலதான் இந்த பதிவு நண்பரே.

/* தமிழ்மணத்தினை நடத்துகின்றவர்கள் உங்களிலே ஒவ்வொரு காக்காயையும் விட ஈழத்தமிழர்களுக்கு உருப்படியாக எத்தனையோ செய்கிறார்கள். இப்படியே நடத்தினால், தமிழ்மணத்தினைவிட்டு உங்களை அவர்கள் நீக்காததற்கு எங்களைப் போன்றவர்கள் குரலை எழுப்பவேண்டும். சும்மா எதற்கய்யா ஈழத்தமிழர் பெயரிலே உங்கள் வெறுப்புகளையும் ஈகோகளையும் வைத்து சுயமைதுனம் செய்கிறீர்கள்?
*/

ரொம்ப சந்தோசம் நண்பரே, நாங்கள் குரல் கொடுப்பது அதற்க்காகவே. இதுல உங்க சிண்டு முடியற வேலையை நல்ல அழகாக குடுமியை ஒதுக்கி விட்டுட்டு, மீண்டும் குடுமியின் துரோகத்தை நன்றாகவே பண்றிர். ஆனால் ஆள் பார்த்து பண்ணும். குடுமிகளின் சகல பித்தலாட்டங்களையும் பார்த்தவன் நண்பரே

Anonymous said...

பதிவர்களே படிக்கற எங்களோட நிலைமையை கொஞ்சம் பாருங்கள், உங்களின் அறுவை பதிவினை படிப்பதற்கு இடையில் இந்த தமிழின உணர்வாளர்களின் பதிவினையிம் படிப்பது சுகமே. சும்ம ஹிட் கிடைக்கலனு புலம்பாதிங்க. சுவரிருந்தால் சித்திரம், தமிழின படுகொலையை எந்த பதிவனாவது எழுதிருங்களா, வந்துட்டானுங்க...

Anonymous said...

சுயநலமே முக்கியம், தமிழின கொலையாவது மண்ணாவது என்று பேசும் பதிவர்களை யார் திருத்துவது.

நம்ம கருணாநிதி போர் நிறுத்தத்துகு ஆதரவு கொடுக்கறா மாதிரிதான்.

இலவசமாக தமிழ்மணம் பதிவுகளை திரட்டுவதற்காக அவர்கள் சொல்றதுதான் சரி என்பது கவுண்டமணி செந்திலை ஒரு படத்துல பிரியா கொடுத்தாலும் பினாயிலையும் குடிப்பான் என்பது போல் உள்ளது.

வலைபதிவர்களே திருந்துங்கள்.

Anonymous said...

Hi Guys,

What's the use in making so much noise over Tamilmanam's attitude. So much of importance to one brand always gives a kind of monopoly to the promoters. Better concentrate on other thiratti too like http://newspaanai.com, http://www.tamilveli.com and http://www.valaipookkal.com and start adding your links on those thiratigal. Sites like Tamilmanam depends on active bloggers like us and it's not the other way round. If we all boycott the site by promoting other such sites, we can have the upperhand. Think over and stop giving too much importance too arrogant web aggregators.

தமிழ்நதி said...

எனக்கு உங்கள் பதிவு அல்லது நோக்கம் உண்மையிலேயே புரியவில்லை. நான் ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். என்னை அவர்கள் இருட்டடிப்புச் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை. அற்புதன் எழுதுகிறார். வசந்தன், சயந்தன், சந்திரவதனா போன்றோரும் அவ்வாறே எழுதுகிறார்கள். உங்களை மட்டும்... புரியவில்லை.

மணிஜி said...

தமிழ் மணம் சன் டிவி கலைஞர் டிவி டாப் டென் போல் ஆகிக் கொண்டிருக்கிறது

மணிஜி said...

தமிழ் மணம் சன் டிவி கலைஞர் டிவி டாப் டென் போல் ஆகிக் கொண்டிருக்கிறது

Anonymous said...

சும்மா பேசிக்கினு .....

நிறுத்துங்கயா.

நிலவு பாட்டு said...

/* எனக்கு உங்கள் பதிவு அல்லது நோக்கம் உண்மையிலேயே புரியவில்லை. நான் ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். என்னை அவர்கள் இருட்டடிப்புச் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை. அற்புதன் எழுதுகிறார். வசந்தன், சயந்தன், சந்திரவதனா போன்றோரும் அவ்வாறே எழுதுகிறார்கள். உங்களை மட்டும்... புரியவில்லை. */

இருட்டடிப்பு என்பது வெறும் 4 பேரை எழுத அனுமதிப்பது மட்டுமன்று. அதுவும் நீங்கள் என்ன தினமும் உட்கார்ந்து அவ்வளவு தமிழின கொலைகளையும் எழுதறிங்களா என்ன, அப்படியே எழதினாலும் அது 30 நிமிசன் முதல் 1 மணி நேரம் அதுய் முடிஞ்சு போயிடறது. புரிஞசா சரிதான்.

Anonymous said...

Hi,

Watch an interview with the artistes of a short film on Tamil Eelam here.

Thanks

Valaipookkal Team

Anonymous said...

சரியாக சொன்னீர்கள். நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தடைக் கல்லாக இருப்பவர்களில் தமிழ்மண நிர்வாகிகள் தான் முதலில் இருப்பார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் தமிழீழ விடுதலை தள்ளிப்போகுது.

திரட்டிக்கு வெளியே ஒரு வாசகன்

Chittoor Murugesan said...

தமிழ்மணம் தடை

என் எழுத்துக்களை ஆபாசம் என்று குற்றம் சாட்டி என் வலைப்பூவை தமிழ் மணம் தடை செய்துள்ளது. இதுவரை தமிழ் மணம் திரட்டிய என் பதிவுகளில் இல்லாத ஆபாசமா? உண்மைகாரணம் பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று ஜோதிடரீதியாக நான் எழுதிய பதிவுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்