Saturday, March 14, 2009

இலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு-ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தல்

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹிலாரி, போரின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்றம், பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை உலக நாடுகள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுதொடர்பாக இலங்கை அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிலாரியுடன் பேசிய ராஜபக்ஷே, புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒரிரு நாட்களில் பிடித்துவிடுவோம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரச்னைகளுக்கு அரசியல்தீர்வு காணப்படும் என்று ராஜபக்ஷே கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்குப் பகுதியில் நிவராணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ஷே, ஹிலாரியிடம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments: