Monday, August 31, 2009

சிங்கள வெறியாட்டம்:நார்வே முயற்சி

சிங்கள ரத்தவெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் குறித்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை நார்வே ஈர்க்கவுள்ளது என்று நார்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் கொல்லப்படும் இந்த கொடூர காட்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுவரும் நிலையில், பான் கீ மூனின் கவனத்தை இது தொடர்பாக ஈர்க்க நார்வே முன்வந்திருக்கின்றது.

இக்கொடூர கொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது அலுவலகம் தொடர்ந்தும் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘தினமலரும்’ - ‘விடுதலை’யும் ஓரணியில்!

கருணா, வீரமணி, தினமலர் எந்த வித்தியாசமுமில்லை. அனைவரும் ஒன்றே. ஒருவன் நேராகவே தமிழனை எதிர்க்கிறான், மற்றொருவன் மறைமுகமாக தமிழின எதிர்ப்பு சக்கிதிகளுக்கு துணை போகிறான். எதிரியினை விட துரோகியிடம் கவனமாக இருக்க வேண்டும்.

‘தினமணி, தினமலர், தீக்கதிர் வெளியேற்றப்பட்டவர்கள் பி.ஜே.பி. எல்லாம் ஓரணியில்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’யில் ‘மின்சாரம்’ கட்டுரை ஒன்று (3.8.2009) வெளிவந்திருக்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை முன் வைத்து ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு வெளியிட்ட கடிதம் ஒன்றுக்கு பதிலளிப்பதாகக் கருதி மின்சாரம் இவ்வாறு எழுதியுள்ளார்.

“நாளையே கூட, மீண்டும் பிள்ளையார் பொம்மைகளை வீதிக்கு வந்து உடைக்க நாங்கள் தயார்! ‘தினமலர்’ அதை முதல் பக்கத்தில் வெளியிடத் தயாரா?

இராமன் படத்தை செருப்பால் அடிக்க எங்கள் இளைஞர்கள் தயார்! தயார்! அதை அப்படியே ‘தினமலர்’ செய்தி வெளியிட்டு மகிழுமா?

சீதையை விபச்சாரி என்று சிறப்புக் கூட்டம் போட்டு பேசத் தயார்! அந்தப் பேச்சை அப்படியே திரிக்காமல், குறுக்காமல் தலைப்புச் செய்தியாக வெளியிட முன் வருமா?”

இப்படி எல்லாம் பார்ப்பன ‘தினமலரு’க்கு, ‘விடுதலை’யில் மின்சாரம் எழுதிய (3.8.2009) கட்டுரை ஒன்று சவால் விடுகிறது!

மேலே பட்டியலிட்ட போராட்டங்களை யெல்லாம் தி.க. நடத்தப் போவதும் இல்லை. அதனால் ‘பார்ப்பன மலர்’ வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனால், பார்ப்பன ‘தினமலர்’ நோக்கி ‘கொள்கைப் போராளிகளாக’ காகிதத்துக்குள் களம் அமைக்கப் புறப்பட்டிருக்கும் ‘மின்சாரங்களை’ கேட்கிறோம்!

திருவரங்கத்தில் தி.க.வினரே அமைத்த பெரியார் சிலை தகர்க்கப்பட்டபோது, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பார்ப்பன நிறுவனங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி, அதற்காக தி.மு.க. ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்களே, அப்போது பார்ப்பன ‘தின மலர்’, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பாய்ந்து பிராண்டியதே! அப்போது ‘விடுதலை’, பெரியார் திராவிடர் கழகத்தின் செய்தியை முதல் பக்கத்தில் கூட வேண்டாம் - கடைசி பக்கத்திலாவது போட்டதா?

பார்ப்பனர் பூணூலை அறுத்ததே ‘தேச விரோதம்’ என்று தி.மு.க. ஆட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தை பெரியார் தி.க. தோழர்கள் மீது ஏவியபோது, ‘தினமலர்’ பார்ப்பன ஏடுகள், அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தூபம் போட்டனவே, ‘விடுதலை’ தி.மு.க.வையோ, ‘தினமலரை’யோ கண்டித்ததா?

மாறாக, பெரியார் திராவிடர் கழகத்தைத் தானே தி.க. தலைமை கண்டித்தது?

ஈழத் தமிழர் படுகொலைக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கிய இந்தியப் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக கோவை நீலாம்பூரில் ராணுவ வாகனங்களுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியபோது, ‘வன்முறையாளர்கள் தேச விரோதிகள்’ என்று, கழகத்தினர் மீது பார்ப்பன ‘தினமலரும்’ பாய்ந்தது. ‘சூத்திர’ ‘விடுதலை’யும், பார்ப்பன ‘தினமலரோடு’ சேர்ந்து கொண்டு கழகத்தினரை வன்முறையாளராகவே சித்தரித்து இந்த பார்ப்பன எதிர்ப்பு போராட்ட சிங்கங்கள் செய்தி வெளியிட்டதே, மறந்து விட்டதா?

பெரியார் கொள்கைகளுக்காக களத்தில் இறங்கி போராடும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை எதிர்ப்பதில் பார்ப்பன ‘தினமல’ரோடு கைகோர்த்த ‘விடுதலை’ குழுமம் தான், இப்போது ஏதோ பார்ப்பன எதிர்ப்பில் ‘புடம் போட்ட வீரர்களாக’ பேனா பிடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள்! வெட்கக் கேடு!

நன்றி கீற்று

Sunday, August 30, 2009

கருணாநிதி:போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர்

தமிழர்களை அழித்ததில் முக்கிய துரோகிகளாக கருணாநிதியும், வீரமணியும் உண்டு என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும் அகதி முகாம்களில் இருப்பவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் மத்திய அரசினை கொஞ்சி குலாவும் இவரது நடவடிக்கைகள் நீண்ட கால திமுக வாழ்விற்கு ஒரு சரிவே.

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார்.

இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவுக்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும்-மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன். உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் போய் சேர்ந்துவிட்டதா?

போய் சேர்ந்துவிட்டது.

டில்லியிலே ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் போர் நடைபெற்றபோது, இந்திய அரசு மறைமுகமாக உலங்குவானூர்தி உட்பட பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அனுப்பியதாக எழுதியிருக்கிறதே?

ஆயுதங்களோ, போருக்கு தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பலமுறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.நன்றி புதினம்

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்! பதற வைக்கும் படங்கள்!

போர் முடிவுக்கு வந்து விட்ட பிறகும், ஈழத்தமிழர்களை ரகசியமாக கொன்று குவித்து வருகிறது சிங்கள ராணுவம். சிங்கள ராணுவத்தின் அத்தகைய கொலைபாதகச் செயல்களை அம்பலப் படுத்துகிறது சில வீடியோ பதிவுகள்.தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ காட்சிகளைக் கண்டு உலகத் தமிழர்கள் பதறித் துடிக்கின்றனர். இளகிய மனம் படைத்தவர்கள் அந்த வீடியோ பதிவுகளை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது. அந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது வீடியோ காட்சிகள்.

பரந்து விரிந்து கிடக்கும் ஒரு புல்வெளி பிரதேசம். ஆடைகள் முழுவதும் களையப்பட்டு முழு நிர்வாணமாக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்கள் கறுப்புத் துணியால் இறுகக் கட்டப் பட்டிருக்கிறது. இளைஞனின் இரு கைகளும் முதுகுக்குப் பின்புறம் முறுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. நீண்டிருக்கும் அந்த சங்கிலியின் ஒரு முனையை துப்பாக்கி ஏந்திய சிங்கள ராணுவ சிப்பாய் ஒருவன் பிடித்துக்கொண்டிருக் கிறான். இவனுக்கு அருகில் மற்றொருவன்.

நிர்வாணக் கோலத்தில் கண்கள் கட்டப் பட்டுள்ள அந்த இளைஞனை நெட்டித் தள்ளு கின்றனர். அந்த இளைஞன் கீழே விழுகின்றான். இளைஞனை தூக்கி உட்கார வைக்க சிங்களவன் முயற்சிக்க, பலகீனமான அந்த இளைஞனின் உடல் அதற்கு ஒத்துழைக்காமல் மீண்டும் சரிகிறது. அப்போது இளைஞனின் தலையில் எட்டி உதைக்கிறான் ஒரு சிங்களவன். அதன்பிறகு கஷ்டப்பட்டு அந்த இளைஞன் உட்கார வைக்கப்பட... துப்பாக்கி ஏந்திய சிங்களவன், இளைஞனின் தலை யை குறிவைத்துச் சுட... மெல்லிய சத்தத்துடன் அந்த இளைஞன் கீழே சரிகிறான்.

அந்த இளைஞனிடமிருந்து அப்படியே காட்சிகள் விரிய... அந்த பிரதேசத்தில் ஆங்காங்கே 9 இளைஞர்கள் இதேபோல் சுடப்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களது தலைப்பகுதியில் ரத்தம் சிதறியிருக்கிறது. எல்லோரும் முழு நிர்வாணமாக கொல்லப் பட்டுக் கிடக்கின்றனர்.இந்தக் காட்சிப் பதிவு களைக் கண்டுதான் உலக தமிழர்கள் அதிர்ச்சியில் விக் கித்து நிற்கின்றனர்.

இதுபற்றி நாம் விசா ரித்தபோது... ""வன்னி வதை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர் களை போர்க்கைதிகளைப்போல முடக்கி வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். முள் கம்பிகளுக்கிடையே விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் தமிழர்கள்.

இந்த முகாம்களிலிருந்து கடந்த 3 மாதங்களாக இளைஞர்களையும் இளம் பெண்களையும் இரவு நேரங்களில் ரகசியமாக கடத்திச் செல்கிறது சிங்கள ராணுவம். இதற்காக, வாரத்திற்கு 2 முறை முகாம்களுக்குள் "வெள்ளை வேன்' வந்து போகிறது. ராஜபக்சேவின் ராணுவத்தினருக்கு உதவியாக இந்த வெள்ளை வேனை கருணா மற்றும் டக்ளஸின் ஆட்கள் இயக்கி வரு கின்றனர்.

இப்படி வெள்ளை வேனில் கடத்தப்படுபவர்கள் முகாம்களுக்கு மீண்டும் திரும்புவதில்லை. ராணுவ முகாம்களில் அடைத்துவைத்து கொடூர சித்ரவதைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள் தமிழ் இளைஞர்கள். இளம்பெண்களோ ராணுவத்தினரின் கூட்டு கற்பழிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தொடர் சித்ரவதைகளுக்குப் பிறகு இளம்பெண்களும் இளைஞர்களும் கொல்லப் படுகின்றனர்.

இவர்கள் எப்படி கொடூரமாக கொல்லப்படுகின்றனர் என்பதுதான் இந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. இந்தக் கொடூரக் காட்சிகளை சிங்கள ராணுவத்தினரே தங்களது செல்ஃபோன் கேமராவில் பதிவு செய்துள்ளனர். ராணுவனத்தினரிடமிருந்தே அந்தப் பதிவுகள் கைப்பற்றப்பட்டு அம்பலமாகியுள்ளது'' என்று அதிர்ச்சியுடன் விவரிக்கின்றனர் சிங்கள ராணுவத்துடன் தொடர்புடைய கொழும்பு பத்திரிகையாளர்கள்.

மேலும் இவர்கள், ""விடுதலைப்புலிகளிடமிருந்து இலங்கையை மீட்டுவிட்டோம் என்கிறார் ராஜபக்சே. இனி ஒரு தமிழின விடுதலைப் போராட்டம் இலங்கைக்குள் உருவாகக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராஜபக்சே. இதற்காக ராணுவத்தினருக்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு செயல் திட்டம்தான் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள், மக்களோடு இணைந்துள்ள புலிப்போராளிகள் என அனைவரையும் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்கிற பாதகச் செயல்'' என்கின்றனர்.

சிங்கள ராணுவத்தின் மனித நேயமற்ற இந்த இன அழித்தல் கொடூரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடு மையாக கண்டித்திருப்பதுடன்...

""ஜெனீவா பிரகடன ஒப்பந்தங்களை ராஜபக்சே அரசாங்கம் மீறி வருவதற்கு இந்த வீடியோ காட்சிகளே ஆதாரங்கள். இதனைக் கொண்டே ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் சிங்கள ராணுவ உயரதிகாரிகளை போர்க்கைதிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்'' என்று குரல் கொடுக்கின்றனர். இதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ராஜபக்சே அரசு, வழக்கம்போல் ""இது ஜோடிக்கப்பட்ட வீடியோ'' என்கிறது.

-கொழும்பிலிருந்து எழில்

நன்றி நக்கீரன்

http://kudikaarann.blogspot.com/2009/08/blog-post_30.html

முதலாளி கொள்ளையர்களின் சொர்க்கம் சுவிஸ்

சுவிஸ் வங்கியில் ரூ.7 லட்சம் கோடி இந்திய கருப்புபணம் முடக்கம்

இந்திய தொழில் அதிபர்கள் பலர் சுவிஸ் வங்கிகளில் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசிய கணக்குகள் மூலம் இந்த கருப்பு பணம் முடங்கிக் கிடக்கிறது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்தது. ஆனால் சுவிஸ் வங்கி கூட்டமைப்பு இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டது.

மேலும் ரகசிய கணக்குகளில் உள்ள பணத்தை திருப்பிதர இயலாது என்றும் சுவிஸ்வங்கிகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் வரும் டிசம்பர் மாதம் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே சுவிஸ் வங்கிகளில் இந்திய தொழில் அதிபர்கள் பணம் எவ்வளவு உள்ளது என்று தகவல்கள் திரட்டப்பட்டன. அப்போது சுவிஸ் வங்கிகளில் ரூ.7 லட்சம் கோடி கருப்புப்பணம் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

எந்தெந்த தொழில் அதிபர்களுக்கு சுவிசில் எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என்ற ஆய்வும் ரகசியமாக நடந்து வருகிறது

Saturday, August 29, 2009

மானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்

இத்தனை தமிழின மக்கள் அழிவிற்கும் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியினை விஜய் சேர்வது என்பது எந்த உப்பு போட்டு சாப்பிடும் தமிழனாலும் இப்படி துரோகம் பண்ணனும் அப்படின்னு நினைச்சுகூட பார்க்க முடியாது. ஆனால இந்த தலை தமிழனாலே எல்லாம் வளந்து இப்ப தமிழனுக்கே ஆப்பு வைக்க கிளம்பிடிச்சுது.

விஜயின் இந்த் செய்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இன்னும் இருக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களை எல்லாம் கொல்வதற்கு துடித்து கொண்டிருக்கும் ராசபக்சேக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ், காங்கிரஸ் தலைவராக துடிக்கும் விஜயும் ஒரு சிறந்த தமிழின துரோகியோ. இவனை எல்லாம் நாம் தூக்கி வச்சி ஆடினதுக்கு தமிழனுக்கு எல்லாம் வேணும்டா. சூடு, சொரணையற்ற ஒரு இனம் தமிழினம்.


"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.


தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.


இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண் டும்' என வேண்டுகோள் விடுத்தார். "காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது.


"கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள் ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.

Friday, August 28, 2009

தமிழ்மணத்தில் பார்க்காத, கண்டுக்காத ஒரு பகுதி

தமிழ்மணத்தினை திறந்தவுடன் முதலில் பார்க்க மறப்பது இந்த ' இந்த வார நட்சத்திரம் - ஒரு அறிமுகம்' இதுதான், வேண்டுமென்று இல்லை இதுவரை இதில் வந்த பதிவுகளை நான் பார்த்தது ஒரு முறையோ, இரு முறையோதான் இருக்கும், ஏன் என்று தெரியவில்லை எப்படியோ அது விடுபட்டு போகிறது, அந்த நட்சத்திர வார பதிவரையோ அவர் பதிவினையோ பெரிசா பார்க்கனும்னு ஆர்வம் இல்ல.

இதே மாதிரிதான் நீங்களுமா.

தற்போது ஈழம் என்ற பகுதியினை மேலே கொண்டுவந்துள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, அதற்கு தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றிகள். ஆனால் இன்னும் எத்தனை நாட்களில் இதனை தூக்கி விடுவார்களோ என்று நினைத்தால் பயமாகவும் உள்ளது(கண்டிப்பாக தேர்தல் வரவும் பண்ணூவார்கள் அதுவரை கவலை இல்லை)

தமிழ்மணம் சில நல்ல முயற்சிகளை எடுக்கிறார்கள், வலைப்பதிவர் செந்தில்நாதன் அவர்களுக்கான கூட்டுப்பிரார்த்தனை.

வாழ்க தமிழ்மணம் இன்று போல் என்றும்.

தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை, கரூரில் போராட்டம்

கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு

தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்த செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.


இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த காட்சிகள் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Wednesday, August 26, 2009

இலங்கையில் தமிழர்கள் சுட்டுக்கொலை! சிங்களவனின் கொடூரம்!! அதிரவைக்கும் வீடியோ...

வன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.
இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார்.

இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=292

Tuesday, August 18, 2009

கவனம் 1000 ரூ கள்ள நோட்டு, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

எனக்கு வந்த ஒரு இ-மெயில், உண்மையாக இருப்பது போல் தெரிகிறது. நீங்களும் 1000 ரூபாய் நோட்டு வாங்கும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

Dear All, Avoid accepting Rs.1,000/- note of series 2 AQ and 8 AC More then 2.00 CR duplicate notes worth Rs.2,000 CR have already entered India . Copy of this circular from RBI is also attached. Please read & pass it on to Family & Friends

Monday, August 17, 2009

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தி.மு.க.பெரும் துரோகம்!

உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாக உரிமை கோரும் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக பங்களிப்பை வழங்குவதில் தோல்வி கண்டுவிட்டதாகவும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தாயகத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பாரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் இராஜ்ஜியசபா எம்.பி.யான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் முன்னணிப் பங்காளியாக திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்திருப்பது தொடர்பாக திராவிடக் கட்சியை நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்று ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

த ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருப்பதாவது;

ஐ.நா. முறைமையின் கீழ் தனிநாடொன்றுக்கு உரிமை கோருவதற்கு 3 நிபந்தனைகள் ஐ.நா.முறைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். முதலாவதாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆட்புலம் இருத்தல் வேண்டும். இரண்டாவதாக அங்கு மக்கள் வசிக்க வேண்டும். மூன்றாவதாக அந்த ஆட்புல எல்லையை ஆளுகின்ற அதிகாரத்திற்கு மக்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

2001 இல் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இவை மூன்றும் இருந்தன. ஆட்புல எல்லை சுதந்திரமாக இருந்தது. வரி வருமானம் கொழும்பைச் சென்றடைந்திருக்கவில்லை. புலிகள் அந்தப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதுவொரு அரசாங்கம் போன்று இருந்தது. அந்த நிலைமையைப் பயன்படுத்தி ஐ.நா. அங்கீகாரம் பெறுவதற்கான நகர்வை மேற்கொள்ள புலிகள் தவறிவிட்டனர். அச்சமயம் இந்தியாவில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்தத் தருணத்தில் புலிகள் ஆதரவாளர்களான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகியவை மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர் என்ன செய்திருந்தார்கள். இதே மாதிரியானதொரு நிலைமை 1971 இல் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்தது. 1971 டிசம்பரில் இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிவடைந்திருந்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி காலத்திற்கேற்றவாறு செயல்பட்டு டாக்காவிலிருந்த அதிகாரத்தை அங்கீகரித்தார். நாட்கள் செல்ல புதிய தேசமான பங்களாதேஷை ஐ.நா. உட்பட உலகின் அநேகமான நாடுகள் அங்கீகரித்தன என்று நாச்சியப்பன் கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தோல்வி கண்டதற்குப் பின்னர் குடிப்பரம்பலில் மாற்றமேற்படுவதற்கான எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார். மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இலங்கையில் வாழ்ந்த சகல தமிழர்களும் எங்கே? என்று அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். இலட்சக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு 1983 இன் பின்னர் சென்றுவிட்டனர். தமிழர்கள் அங்கு இல்லாத நிலையில், அவர்களுடைய உரிமைக்காக எவ்வாறு போராட முடியும். இந்தப் பாரதூரமான நிலைமை குறித்துத் தாமதமின்றி நாகரிக உலகம் தீர்வுகாண்பது அவசியமாகும். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் இப்போது கண்ணிவெடி அகற்றுவதென்ற பெயரில் பல இடங்கள் அழிக்கப்படுகின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த பகுதிகளிலுள்ள சான்றாதாரங்கள் யாவும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க�
�ன்றன என்று நாச்சியப்பன் கூறியுள்ளார்.

தற்போதைய உலக சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினமான விடயமென்று நாச்சியப்பன் தெரிவித்திருக்கிறார். கடந்த காலத்தில் தனது இலக்கை எட்டுவதற்கு கிடைத்திருந்த சகல வாய்ப்புகளையும் புலிகள் தவறவிட்டுவிட்டனர். தமக்குக் கிடைத்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டு படிப்படியாக தமது இலக்கை எட்டுவதற்கு அவர்கள் தம்மைக் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும் என்று நாச்சியப்பன் கூறியுள்ளார். 1999 லோகசபைத் தேர்தலில் தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தோற்கடித்ததன் மூலம் தேசிய ரீதியில் முன்னணிக்கு வந்தவர் சுதர்சன நாச்சியப்பன் (62 வயது) ஆகும்.
http://www.paranthan.com/

Sunday, August 16, 2009

வளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கி சீனாவின் அடுத்த பயணம் --வேல்ஸிலிருந்து அருஷ்

மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான துணை அமைச்சருமான ரொபட் ஓ பிளெக் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப் பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்øககளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது.

இலங்கையில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செய்த விடயங்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன. 280,000 தமிழ் மக்கள் உதவி நிறுவனங்களின் தொடர்புகள் அற்ற முறையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மீண்டும் இலங்கையில் போரை ஆரம்பிப்பதற்கே வழிவகுத்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "த பினான்ஸியல் ரைம்ஸ்' என்ற நாளேடும் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேண்டிய முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் தென்னிலங்கையில் இல்லை எனவும், காலம் காலமாக ஆட்சிபுரிந்த இலங்கை அரசாங்கங்கள் அவர்களை ஒரு இனவாத சிந்தனைக்குள் தள்ளிவிட்டுள்ளதாகவும், இந்த புறச்சூழல்களின் மத்தியில் மத்திய அரசிடம் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு அதிகாரப்பரவலாக்கம் என்ற அதிகாரமற்ற ஆட்சியை தமிழ் மக்கள் அமைக்க முடியாது எனவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து கூறி வந்ததன் அர்த்தங்கள் தற்போது மேற்குலகத்திற்கு புரிந்திருக்கும்.

அவற்றின் வெளிப்பாடுகளாகத்தான் அண்மையில் மேற்குலகத்தின் சில நகர்வுகள் அமைந்துள்ளன. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் எல்லாவற்றையும் மீறி தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசு இந்தியாவின் ஆதரவைத் தான் அதிகம் எதிர்பார்த்துள்ளது.

வடக்கு, கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியாவும் நம்புகின்றது. ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 20 தொடக்கம் 30 நாடுகளாக உடைப்பது எப்படி என்ற திட்டங்களை சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் வகுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவை சிறு சிறு நாடுகளாக உடைப்பதன் மூலம் வளமான ஆசிய பிராந்தியத்தை உருவாக்க முடியும் என சீனா நம்புகின்றது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரும் மோதல்களைத்தொடர்ந்து மேற்குலகமும் அந்த நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலைப்பாட்டில் மேற்குலகத்தின் பூகோள அரசியல் சமன்பாடுகளும் பொதிந்துள்ளன. அதாவது சோவியத்தின் வீழ்ச்சி தொடக்கம், யூகோஸ்லாவாக்கியாவின் உடைவு வரையிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்ட உத்திகளைத்தான் ஆசிய பிராந்தியத்திலும் பயன்படுத்த முற்பட்டு வருகின்றனர்.

அதாவது முதலில் இந்தியாவின் உடைவை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது உருவாக்கிவிடுவது, அதன் பின் அங்கு கால்பதிப்பதன் மூலம் சீனாவை அச்சுறுத்துவது. அதனைத் தான் மேற்குலகம் மறைமுகமாக சாதிக்க முற்படுகி ன்றது.

இந்தியாவின் ஊடாக இலங்கையை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தென்ஆசியாவில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என அமெரிக்கா முன்னர் கருதியது. ஆனால், இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் அந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா தற்போது இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளு டன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி பேணி வருகின்றது. இலங்கைத் தமிழ் மக்

களை ஆதரிப்பதன் மூலம் தென் ஆசியாவில் இழந்து போன தமது ஆதிக்கத்தை மீண்டும் தக்க வைக்க முடியும் என அமெரிக்கா நம் புகின்றது.

சீனாவைப் பொறுத்தவரையில், அது தனது வளர்ச்சிக்கு முன்னர் அமெரிக்கா பின்பற்றிய அதே நடைமுறைகளைத் தான் சத்தமின்றி பின்பற்றி வருகின்றது. அதாவது முதலில் தமது பிராந்தியத்தில் உள்ள தனக்கு ஆதர வான நாடுகளில் அமைதியை தோற்றுவிப் பது. அதாவது அமைதியான நாடுகளின் கூட் டணியை அமைப்பது. அதன் பின்னர் தனக்கு சவாலாக மாறும் நாடுகள் என கருதும் நாடுகளை பல நாடுகளாக துண்டாடி விடுவது.

இலங்கையில் நடைபெற்ற மோதல்களை யுத்தத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவர உதவிய சீனாவின் தத்துவம் தற்போது அதன் அடுத்த கட்டத்திற்கு நகரப்போகின்றது. இந்தி யாவை சிறிய நாடுகளாக உடைப்பது என்ற சீனாவின் கோட்பாடு எவ்வளவு தூரம் சாத்தி யமானது என்ற கேள்விகளும் உண்டு.

அதாவது, சீனா நினைப்பது போல அது சுலபமானதா? இந்தியாவின் அரசியல் கலாசார உட்கட்டுமானங்களை நோக்கும் போது அது சுலபமானது என்ற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகின்றனர். ஏனெனில் அங்கு காஷ்மீரிலும், நாகலாந்திலும் பிரிவினைக்கான உந்துதல்கள் உள்ளன. ஏற்கெனவே பிரிவினைக்கான போரை ஆரம்பித்து பின்னர் அடங்கிப்போன சீக்கிய மக்களின் அடிமனதிலும் விடுதலை வேட்கை உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமது அதிகார சுகத்திற்காக மத்திய அரசை நம்பி வாழ்ந்தாலும், தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கையின் வலு குறைந்துவிட்டது. அவர்கள் தம்மை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாகவே எண்ணத் தலைப்பட்டுள்ளதாக தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அண்மைக் கால நடவடிக்கைகள் உலகெங்கும் பரந்துவாழும் பல இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களினதும், உலகில் பரந்து வாழும் பல கோடி தமிழ் மக்களினதும் ஒட்டுமொத்த வெறுப்பை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது. இந்தியாவை நோக்கி ஒட்டுöமாத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் வீழ்ச்சியை விøரவுபடுத்த முடியும் என சீனாவும் சரி மேற்குலகமும் சரி நம்புகின்றன போலும்.

சீனாவின் இந்த கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்பது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரின் கருத்துகள் கடந்த வாரம் திரட்டப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த முடிவுகள் ஆச்சரியமானவை. அதாவது இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பõலானவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

அதாவது இந்தியாவைச் சுற்றி அதற்கு பாதகமான ஒரு புறச்சூழலை சீனா உருவாக்கி விட்டது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய பல ஆசிய நாடுகளுக்கும் "வளமான ஆசியா' என்ற சீனாவின் சொற்பதம் ஊக்க மருந்தாகவே தோன்றும்.

இதனிடையே விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டு விட்டனர் என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் நடை பெற்ற உள்ளூராட்சி மாநகரசபை தேர்தல் முடிவுகளும் இந்திய இலங்கை அரசுகளின் வடபகுதி மீதான அரசியல் ஆதிக்கத்திற்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 18 சதவீதமான வாக்கு பதிவுகள் நடைபெற்றது. அந்த மக்கள் அரசாங்கத்தின் அரசியல் நடைமுறைகளில் எவ்வளவு தூரம் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்த போது அது விடுதலைப்புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரு கருத்து ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை அனைத்துலகமும் நம்பியிருந்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காண்பிக்கவில்லை. தேர்தலில் பங்குபற்றிய சிறிய தொகை மக்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சியை ஆதரித்துள்ளனர்.

மேலும் இந்த தேர்தல்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்து வருகின்றன. அங்கு ஒரு இயல்பான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தக்கூடிய அமைப்புகளோ, அனைத்துலக ஊடகங்களோ இருக்கவில்லை. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் தற்போது எட்டப்பட்ட 18 சத வீத வாக்குகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

இலங்கைத்தமிழ் மக்களின் விடுதலைக்கான தாகம் தற்போதும் உள்ளது என பிரிட்டனின் "த ரைம்ஸ்' வாரஏடு தெரிவித்திருந்தது. அதனைப் போலவே மிகப்பெரும் இராணுவ அழுத்தத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற கோட்பாட்டை தக்கவைத்துள்ளனர்.

களத்திற்கு அப்பால் இந்த கோட்பாடுகள் புலத்தில்தான் அதிகம் தீவிரம் பெற்று வருகின்றது. அதனை முறியடிக்க இலங்கை, இந்திய அரசுகள் தீவிரமாக முயன்று வந்தாலும் வெளிநாடுகளின் சட்டவிதிகள் அவர்களின் நடவடிக்கையை ஒரு எல்லைக்கு அப்பால் அனுமதிக்கப்போவதில்லை.

மேலும் வலுவான அரசியல் கட்டமைப்புகளுடன் அனைத்துலகத்துடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ளும் போது நாம் ஒரு பலமான சக்தியாக எம்மை இலங்கைக்கு வெளியில் கட்டியமைத்துக்கொள்ள முடியும். அதனூடாக இலங்கைத் தமிழ் மக்களின் அரசி யல் உரிமைக்கான அடுத்த கட்ட நகர்வு முனைப்பாக்கப்படும். அதனை அடைவது எவ்வாறு? அரசியல் வழிமுறையிலா அல்லது ஆயுதவழியிலா என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ளும்.


http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=3755:2009-08-16-05-42-42&catid=34:2009-04-30-04-35-39&Itemid=53

சேரனின் பேட்டி நேற்று கலைஞர் டிவியில்

சேரன் தான் படத்திற்க்காக பட்ட அனைத்து கஷ்டங்களையும் தெளிவாக எடுத்து கூறினார். ஆனால் ஒரு பயம் அவர் முகத்தில இருந்தது நன்றாகவே தெரிந்தது. பேசியவர்கள் அனைவரும் ஆட்டோகிராப் படம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டனர். சேரன் மனம் புண்படகூடாது என அனைவரும் பேசிய மாதிரி தெரிந்தது. பேட்டி எடுத்தவர் எதிர் மறை கருத்துக்கள் சேரனிடம் யாரும் கேட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

சேரனும் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளினையும் செய்து எப்படியாவது மக்கள் பொக்கிஷம் திரைப்படம் பார்க்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தார்.

திருச்சி ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஸ்ரீபிரியா அவர்களின் அம்மாவும் சேரனும் அலைப்பேசியில் நேரடியாக பேசி வாழ்த்தியது ஒரு சிறப்பாக அமைந்தது

சேரன் ஒரு சிறந்த படைப்பாளி அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்க்காகவாவது தமிழர் என்ற முறையில் நாம் பொக்கிஷம் படத்தினை வெற்றியடையச் செய்வோம்.

Saturday, August 15, 2009

ஷாருக்கான் பிற நாட்டு சட்ட திட்டங்களினை மதிக்க வேண்டும்

இந்தியர்களிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம் எந்த சட்ட, திட்ட விதிகளுக்கும் கட்டுபடுவது கிடையாது அதில் தனக்கு என்று ஒரு ஓட்டையினை வைத்து கொள்ளப் பார்ப்பவர்கள் இதுதான் மேலை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

நம்மூரு ஒரு போலிஸ் நம்மை பிடித்து விசாரித்தால் நாம் சொல்லும் முதல் பதில் எங்க மாமா, சித்தப்பா யாராவது ஒருவர் போலிஸில் இருக்கிறார் அல்லது உயர் பதவியில் அல்லது அரசியலில் இருக்கிறார் என்று, அது யாராக இருந்தால் என்ன உனக்கு லைசன்ஸ் இருந்தா காட்டு அதை விட்டுட்டு அவரை தெரியும் இவரை தெரியும் நான் பெரிய ஆளு என்பது வெட்டி வாதம்.

நீங்கள் பெரிய ஆளாக இருந்தும் உங்களையும் போலிஸ் விசாரித்தால் பெருமை படுங்கள்.

ராசபக்சேவின் ஊதுகுழலாக கருணாநிதி

ராஜபக்சேவின் அட்டூழியங்களை மறைப்பதற்கு துணைசெய்யும் வகையில் செயற்படுகிறார் கலைஞர்: பழ.நெடுமாறன்

இலங்கையில் சமூக நிலை நிலவுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கூறுவது கேலிக்குரியது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்டு விட்ட பிறகும் கூட அந்த பிரச்சினையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும் என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்து இல்லாமல் நாள் தோறும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதனை சுமூக நிலை என்று கருதுகிறாரா?

தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதனைக் கண்டித்து ஒரு வார்த்தை இதுவரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் ராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயற்படுகிறார்.

கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி நக்கீரன்

Friday, August 14, 2009

பொக்கிஷம் 10/100

பல வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் பார்த்த திரைப்படம், நானும் என்னோட கருத்தை சுருக்கமாக பதிவு செய்கிறேன். சரியான இப்படி ஒரு அறுவை படத்தை பார்த்ததில்லை. முதல் பாதி எல்லாம் சேரன், லெட்டர் பாக்ஸ், போஸ்ட் மேன் இவர்கள்தான்.

அடுத்த பாதி 5 நிமிடம் விறுவிறுப்பாக போன மாதிரி இருந்தது அப்புறம் பார்த்தால் அது முதல் பகுதியினை விட பெரிய கடி. பாதி பேச்சுகள் படத்தில் புரியவே இல்லை. கிணத்துகுள்ள இருந்து பேசற மாதிரி இருந்தது.

படத்திற்கு மொத்த செலவு 25 லட்சம்தான் இருக்கும். நதீரா அழகாக இருக்கிறார். 5 நிமிடம் மட்டுமே முகம் பார்க்க முடிகிறது. 10 நிமிசத்துக்கு ஒரு பாட்டு வந்த மாதிரி இருந்தது. எல்லாம் செம போர்.

கண்டிப்பாக படம் 10 நாளில் தியேட்டரை விட்டு ஒடிவிடும்.

Saturday, August 1, 2009

வீரமணி மற்றும் வினவு கும்பலுக்கு

நண்பர்களே நாத்திகம் பற்றி மட்டுமே நீங்கள் பேசி கொண்டிருப்பது என்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான், மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை முதலில் கவனியுங்கள்.

1) தொழிலாளர்கள் வேலை நேரம் கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு அதிகமாக போகக்கூடாது.

2) வாரத்திற்கு இரு நாட்கள் விடுமுறை

3) வருடாந்திர கம்பெனி லாபத்தில் 10% மாவது தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

4) வருடத்திற்கு 30 நாட்கள் விடுமுறை வார விடுமுறை போக

உதாரணத்திற்கு இந்த பெரிய, பெரிய கடைகளில் rmkv, pothys, chennai silks இவர்களை சற்று கவனியுங்கள், இவர்கள் தினமும் தொழிலாளர்களை 12 முதல் 15 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் கொடுப்பதோ 2000 ரூ இதே போல் பல தொழிற்சாலைகள், கம்பெனிகள் எனக்கு தெரிந்த பலர் பத்திரிக்கை துறையை சார்ந்த பலர் அடிமையாக முழு நேரமும் நாயாக உழைக்க வைக்கப்படுகின்றனர். எந்த ஒரு விடுமுறையும் கிடையாது.

எப்படி நஷ்டம் வந்தால் மட்டும் வேலை விட்டு நீக்க தெரிகிறதோ அதே போல் லாபத்திலும் பங்கு கொடுக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

முதலில் மக்கள் சிந்திக்க நேரம் ஏற்படுத்தி கொடுங்கள்