ரத்த வெறி பிடித்த சிங்கள இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்ததை அம்பலபப்டுத்தியது சேனல் 4 தொலைக்காட்சி.
இந்த வீடியோ காட்சிகள் உண்மை இல்லை; இது தயாரிக்கப்பட்டது என்று இலங்கை அரசு நாடகம் ஆடியது. இலங்கை அரசு ஆடியது நாடகம்தான் என்று என்று டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ’டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விசயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
Wednesday, December 16, 2009
தமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான்: உறுதிப்படுத்துகிறது டைம்ஸ் பத்திரிகை
Posted by நிலவு பாட்டு at 12:33:00 AM 0 comments
Labels: ஈழம்
Monday, December 14, 2009
பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 99 வீதமான வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"
பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.
தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,
31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,
மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 99வீதமான பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் "தமிழீழமே" இறுதித் தீர்வென மக்களாணை தெரிவித்துள்ளனர். இன்னமும் அஞ்சல் மூலமான வாக்குகளின் முடிவுகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.
இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை நகர ரீதியாக பார்வையிட இங்கே அழுத்தவும்.
Posted by நிலவு பாட்டு at 9:12:00 PM 0 comments
Labels: ஈழம்
Saturday, December 12, 2009
வேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு தமிழனின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரிகளுக்கே
மக்களே நம் முன் நல்லவன் போல் நடித்த விஜய், சில மாதங்களுக்கு முன் மேலும் பணம் சேர்த்து கொளவதற்க்காக, தமிழ் இனத்தினையே அழிக்க கங்கனம் கட்டி கொண்டிருக்கும் காங்கிரஸ், சோனியாவுடன் கை கோர்க்க சென்றான், அங்கு தலைவர் பதவி கிடைக்காததால் திரும்பி வந்து எனக்கு காங்கிரஸ் கொள்கைகள் பிடிக்கும் என்று சொல்லி அதன் கொள்கையான அனைத்து தமிழர்களையும் கொல்வதற்கு சம்மதம் தெரிவித்தான். அதுவே தனது விருப்பமாகவும் தெரிவித்தான்.
இன்று சன் பிக்சர்ஸ், விஜய் ஆண்டனி மற்றும் ரட்னே வுடன் சேர்ந்து நம்மிடமே பணம் பிடுங்க வருகிறான்.
வன்னி கை பற்றபட்ட போது சிங்களனை குதுகாலபடுத்த சிங்கள பாட்டின் மெட்டினை அப்படியே எடுத்து இதில் பயன்படுத்தி தமிழ் மக்களை மடையனாக்க நினைக்கிறான்.
இவன் படத்தை எந்த மானமுள்ள தமிழனும் பார்க்கும் முன் அங்கு வன்னியில் நடந்த அவலத்தினை ஒரு முறை நினைத்து பார்க்கவே தூண்டும்.
இந்த தமிழின எதிரிக்கு நாம் இந்த முறை கொடுக்கும் அடி பெரிய இடியாக இருக்க வேண்டும்.
Posted by நிலவு பாட்டு at 10:37:00 PM 0 comments
Labels: ஈழம்
Thursday, December 10, 2009
சீமானை கண்டும் ஒன்னுக்கு அடிக்கும் அம்பிகளும், தமிழின துரோகிகளும்
பிரபாகரன் போயிட்டார்ன்னு சொல்லியாவது தமிழ் மக்களின் கனவுகளை நசுக்கி விடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு இன்று சீமான் சிம்ம சொப்பனமாக தெரிவது வியப்பில்லை.
இவர் தமிழ் மக்களுக்கு பாடுபடுவது பிடிக்காமல், அம்பி முதல் ரோ வரை அனைத்து தில்லு முல்லுகளையும் பண்ணி பார்க்கிறது.
இனியும் தமிழனை எந்த அம்பிகளும், ரோ-க்களும் ஏமாற்ற முடியாது. அவரு தமிழனுக்காக பாடுபடுவது பொறுக்க முடியலை இந்த நாதாரி பயலுகளுக்கு.
அவர் மேலே களங்கம் கற்பிக்க என்னவெல்லாம் பேசறானுங்க. கொஞ்சம் சிந்தியுங்கடா தமிழன் தமிழனுக்கு குரல் கொடுக்கறான். இதுல எண்டா பொறாமை உங்களுக்கு.
Posted by நிலவு பாட்டு at 10:22:00 PM 2 comments
Labels: ஈழம்
Thursday, December 3, 2009
பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்
இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்
ஆவேசம்!
எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு
சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி
அது திரும்பும் என்றே தெரியாது.
சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ
நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.
விழாவில் தங்கர் பேசியது:
"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே
கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க
முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்
போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.
இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்
நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"
"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு
சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே
உட்கார்ந்திருந்தான்.
இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு
போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே
கிடையாது.
இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்
பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்
செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை
குனிகிறேன்…
அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி
உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.
நங்கூரம் இணையத்திலிருந்து
http://www.nankooram.com/thankar-bachan
முத்தமிழ்வேந்தன்
சென்னை
Posted by நிலவு பாட்டு at 10:34:00 PM 0 comments
Labels: ஈழம்
Tuesday, December 1, 2009
ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?
மாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..
சராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..
ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?
எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?
நன்றி
http://siruthai.wordpress.com/2009/12/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/
Posted by நிலவு பாட்டு at 7:22:00 PM 0 comments
Labels: ஈழம்
Sunday, November 29, 2009
தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்
தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்
ஈழப்போர் 4 ஆம் கட்டத்தில் தமிழர்களைக் கொல்லும்படி தமக்கு பணிப்புரை விடுத்தது கோத்தபாயதான் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி என அறிவித்தல் வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.
இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.
வன்னிப் போரின்போது நடந்த யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு அழைத்தபோது தப்பினால் போதும் என ஓடிவந்த சரத் இப்போது ஒரு பத்திரிகையாளரிடம் கூறுபவற்றை அங்கு அமெரிக்காவிடம் கூறியிருக்கலாமே. இதை சிறீலங்கா பத்திரிகையில் கூறி என்ன பயன். எல்லாப் பழியையும் கோத்தபாயமேல் போட்டு சரத் தான் தப்பிக்கப் பார்க்கிறார். சிங்கள இனத்தவரிடையே தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதற்காக சில கசப்பான உண்மைகள் சில விரைவில் வெளியாகும்.
என்ன தான் எதிரியாக இருந்தாலும் சரத் கோத்தபாயவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கவில்லை, ஆனால் சில தமிழர்களோ என்ன செய்தாவது அரசுடன் ஒடியிருக்கவும், மகிந்தவைக் கட்டி அணைக்கவும் காத்திருக்கின்றனர். எப்போது திருந்தப்போகிறார்கள் இவர்கள்
நன்றி மீனகம் http://www.meenagam.org/?p=17719Posted by நிலவு பாட்டு at 12:22:00 PM 1 comments
Labels: ஈழம்
Saturday, November 28, 2009
பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
சிங்கள ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையில் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் மற்றும் இலங்கை அரசு உலகை நம்ப வைத்தாலும், தமிழ் மக்களின் பெரும்பான்மையானோர் பிரபாகரனின் இருப்பு குறித்த நம்பிக்கை மாறாத மனநிலையில்தான் உள்ளனர். காரணம் பிரபாகரன் என்பவர் ஒரு இனத்தின் அடையாளமாக, குறியீடாகத் திகழ்வதுதான்.
மேலும் கடந்த மே 16-ம் தேதி வரை தலைவர் பிரபாகரன் களத்தில் நின்று போராடினாலும், பின்னர் இயக்கம் மற்றும் தமிழீழ போராட்டத்தின் நன்மை கருதி போர்க்களத்திலிருந்து வெளியேறினார் என போராளிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர். கரும்புலிகள் அணியுடன் பிரபாகரன் வெளியேறியது உண்மையே என இப்போதும் செய்திகள் வருகின்றன.
மேலும் தமிழர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் பிரபாகரன் தனது தளபதிகளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக தமிழீழ ஆதரவு தளங்களில் கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன.
அதேநேரம், இந்த மாவீரர் தினத்தில் அவர் வெளிப்படுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது என்றும், அவர் வெளிப்படுவதற்கான காலம், புறச் சூழல் இன்னும் அமையவில்லை என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம்-
இலங்கை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில துரோகப் புலிகளை வைத்து ஒரு பொய்யான மாவீரர் உரையைத் தயாரித்து, வரும் 27-ம் நாளன்று வாசித்துக் காட்டி, பிரபாகரன் இல்லை என்ற தங்கள் புனைவை நிலை நிறுத்த முயற்சிப்பதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வருகின்றன.
எனவே மாவீரர் உரை / அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் எதனையும் நம்ப வேண்டாம் என்றும் புலிகளின் தலைமைப் பீடமான பிரபாகரன் மூலம் வருவது ஒன்று மட்டுமே உண்மையான அறிக்கை என்றும் அதிர்வு உள்ளிட்ட தமிழர் தளங்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன
Posted by நிலவு பாட்டு at 2:00:00 PM 1 comments
Labels: ஈழம்
Friday, November 27, 2009
சிங்கள அரசினை அச்சுறுத்திய செந்தமிழன் சீமான் தாயகம் திரும்புகின்றார்.
Posted by நிலவு பாட்டு at 11:34:00 PM 0 comments
Labels: ஈழம்
பிரபாகரன் தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.
நினைத்தது மாதிரியே இங்கெ வந்து புலம்ப ஆரம்பிச்சிடான்யா, எங்கே பிரபாகரன் மாவீரர் தினத்திற்கு வரவில்லை என்று இந்த தமிழின துரோகிகள்.
டேய் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா. இன்னும் புலிகளையும் தலைவர் பத்தியும் பேசாவிடில் உங்களின் சன்மானம் இலங்கை அரசிடமிருந்து குறைக்கபடுகிறதா.
பிரபாகரன் இன்னும் 3 வருடத்துக்கு எங்கிருந்தாலும் வரமால் இருப்பதுதான் நல்லது. உங்களின் விருப்பபடி பிரபாகரன் இல்லை என்று வைத்து கொள்வோம். நீங்களும் இந்த உலகமும் இப்ப என்னடா இந்த தமிழ் சமூகத்துக்கு செய்ய போறீங்க. அதை பார்க்கத்தான் எங்கள் தலைவர் இன்னும் காத்து கொண்டிருக்கிறார்.
அவர் என்றும், எப்பொழுது தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.
Posted by நிலவு பாட்டு at 6:31:00 PM 1 comments
Labels: ஈழம்
Tuesday, November 24, 2009
ஈழத்துப் புறநானூற்றுக் கதை
நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம்.
அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது.
தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய்.
அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.
Posted by நிலவு பாட்டு at 10:05:00 PM 1 comments
Labels: ஈழம்
Tuesday, October 27, 2009
இலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ?
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்...
நன்றி அதிர்வுஇறுதிப்போரில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து தமிழீழ வரலாற்றை தாங்கி வந்து முற்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் தமிழீழ வரலாற்றின் சுவடுகள். போற்றப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தமிழீழ போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஆதரவை அளித்து இன்று பல சித்திரவதைகளிற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எமது சுவடுகளை போராட்டத்தின் வலிமையை முகாமிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனிலும் நாம் பார்க்க முடியும். அந்த மக்கள் தாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே பார்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளிலிருந்து வரும் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரையும் அந்த மக்களை பார்க்க சிறிலங்கா அரசங்கம் அனுமதிப்பது ஏன்?
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் அந்த மக்களை வைத்து தாம் பிழைப்பு நடத்தி பணம் சுரண்டுவதற்கே. ஒருவரால் கொடுக்கும் பணம் மொத்தமாக அந்த மக்களை சென்றடைவது இல்லை. மேலிடத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து சுரண்டி சுரண்டி அந்த மக்களுக்கு செல்வது பெயரளவுக்கு கொடுத்தோம் என்று சொல்கின்றளவுக்கே. உதாரணமாக சமீபக காலமாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. அதாவது மக்கள் முகாமிற்குள் வந்ததால் சம்பாதித்து இலட்சாதிபதியாகிய அமைச்சர்கள் பற்றி நாம் அறிவோம்.
இதைவிட கொடுமை என்னவென்றால், சிறிலங்காவின் அனுமதியில்லாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை பார்க்க செல்லவில்லை. அது ஒரு புறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற குழு அந்த முகாமுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுலாவில் சென்றவர்கள் சிலர் தமிழ்நாட்டில் செய்த ஊழல்கள் போதாதென்று தமிழீழத்திலும் செய்ய சென்றுவிட்டார்களோ! என்று ஐயம் ஏற்பட்டு தெளிவடைந்துள்ளேன்.
ஏன் அந்த ஐயம் என கேட்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன் தமிழ் நாட்டு நாடாளுமன்றக்குழு சிறிலங்காவுக்கு பயணித்து திரும்பியதும் என் செவிகளில் விழுந்த ஒரு செய்தி "கவிஞர் கனிமொழி 250 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார்" என்பதே. உள்ளமெல்லாம் கொதித்தது காரணம் அந்த நிலம் தமிழீழ நிலப்பரப்பிலாக இருந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மாதிரியான ஒரு ஒழுக்கமற்ற அரசியல் தமிழீழத்திலும் வந்துவிடுமோ என்று. ஏனெனில், தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி பொதுமகனின் நிலத்தை அபகரிப்பதும் அதனை அந்த பொதுமகன் போய்கேட்டால் அடியாட்களுடன் விரட்டுவதும் தமிழகத்தின் வழக்கமான ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. அதே மாதிரி எமது தமிழீழத்திலும் வந்துவிடுமோ! என்று ஏங்கினேன்.
நேற்று தான் தெரிந்தது அது எமது நிலப்பரப்பில் இல்லை என்பது. அதையிட்டு சந்தோசமடைந்தாலும் அந்த குழுவில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவாளரான தொல்.திருமாவளவன் அவர்களின் செயற்பாடும் தமிழர்களின் மனம் நினைத்ததைப்போல இல்லை என்பதே உண்மை. தொல்.திருமாவளவனை கண்டதும் எம் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகளில் படித்தேன். எம் மக்கள் இலகுவில் யாரிடமும் கண்ணீர் விடமாட்டார்கள் மண்டியிடமாட்டார்கள். அந்த மக்கள் கண்ணீர் விட்டு எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர்களிடம் கூறியதாக செய்திகள் படித்ததுமே என் உரோமங்கள் சிலிருத்தன. கண்கள் கனத்தன. எப்படியெல்லாம் வாழ்ந்த எம்மினம் எம்மக்கள் இப்படி துன்பப்பட்டு போனார்களே என.
சரி அவர்கள் ஏன் தொல்.திருமாவளவனை கேட்டார்கள். தமிழீழத்திற்கு ஆதரவானவர் ஒரு தமிழன் என்ற ஒரு உரிமை அவர்களின் மனதில் இருந்ததால் தானே!, அப்படியான அந்த மக்களிடம் நீங்கள் ஆறுதலாக பேசாதது ஏன்? அவர்களின் மனநிலையை அறிய முற்படாதது ஏன்? சரி அதைத்தான் விடுவோம் சர்வதேச குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று யாரை நீங்கள் கூறினீர்களோ அந்த குற்றவாளியின் விருந்தை உண்டு வந்த உங்களை தமிழீழ மக்களாகிய நாம் எந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது?
வதை முகாம் சென்று வந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர் முகாம்கள் சர்வதேச மட்டத்தில் தரமாகவுள்ளதாக அறிக்கை விட்டிருக்கிறார். சர்வதேசமட்டம் என்றால் என்ன? என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா அவருக்கு! அவர் சர்வதேச மட்டம் என்று நினைத்தது தமிழ்நாட்டை என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதிமுகாம்களைவிட சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதைமுகாம்கள் சிறந்ததாக இருப்பதால் அவர்கள் சர்வதேசமட்டத்தில் சிறந்தாக இருப்பதாக கருதுகிறார்கள். தமது அரசியல் ஆசனத்துக்காக எமது மக்களை இந்தியரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்நாட்டு அரசாங்கமும் சிங்கள அரசாங்கமும் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றமை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதைமுகாம் பயணம் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்....
Posted by நிலவு பாட்டு at 7:34:00 PM 3 comments
Labels: ஈழம்
Sunday, October 18, 2009
சானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர். அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.
- வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.
இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
Posted by நிலவு பாட்டு at 7:02:00 PM 0 comments
Labels: ஈழம்
இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
போர் நடைபெற்ற போதும் சரி, முடிந்த பின்னரும் சரி இலங்கை அரசுக்கு உதவி செய்வதில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊக்கமாகவே உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவென 500 கோடி ரூபா இந்தியாவின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது மீண்டும் இந்திய அரசு ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கலாம் என சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிதம்பரம், இலங்கையில் அகதி முகாம்களிலுள்ள மக்களின் புனர்வாழ்வுத் திட்டத்தை அந்நாட்டு அரசு தமக்குச் சமர்ப்பித்ததும் இந்திய அரசு மேலும் ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகக் கூறினார். இந்திய நா.உ இலங்கை விஜயம் குறித்து வழங்கியுள்ள அறிக்கை பற்றிக் கூறும்போது தாம் அனைத்து விடயங்கள் குறித்தும் கருணநிதிக்கு விளக்கியுள்ளதாகக் கூறினார்.
அந்த அறிக்கையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தாம் அதற்கு எவ்வாறு உதவுவது என்று கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு முகாம் மக்கள் 5000 பேரை இலங்கையரசு அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் தமிழக நா.உ களுக்கு தகவல்கள் வழங்கிய தமிழர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, தாம் உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து கருத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் சிதம்பரத்தின் இன்றைய பேட்டி அவர் இலங்கையரசுக்கு சாதகமாக மட்டுமே பேசுவார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.
Posted by நிலவு பாட்டு at 6:20:00 PM 1 comments
Labels: ஈழம்
Thursday, October 15, 2009
ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!
ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.
சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.
ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.
ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.
இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.
தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.
பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.
1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.
2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.
3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.
4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.
5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.
இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்....................................நன்றி ஈழத்தில் இருந்து ஈழவேந்தன்
Posted by நிலவு பாட்டு at 7:51:00 PM 3 comments
Labels: ஈழம்
தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா
இவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா
அன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்
என்று சொல்லி நாம் அழுவதா...
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org
"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:42:00 PM 2 comments
Labels: ஈழம்
இப்படியும் கூட நடந்திருக்கலாம்...!!!
பங்கேற்ப்போர்: இந்திய எம்.பிக்கள் குழு, முகாம் மக்கள்
Posted by நிலவு பாட்டு at 7:32:00 PM 0 comments
Labels: ஈழம்
கற்பு காத்த காவலர்
கலைஞரே உமது திருவிளையாடல் எம்மாம் பெருசு
இலங்கை மக்கள் குண்டு மழையில் செத்த போது கடிதம் எழுதுவது
அவர்களுக்காக போராட்டம் பெரிய அளவில் நடக்கும் போது
போலீச விட்டு வக்கீலையும் லீவு உட்டு மாணவர்களையும் நசுக்கு
போராட்டம் முடிந்ததும் தேர்தல் வெற்றில் இத்தனை மந்திரிகள் வேணும்னு
போராடி போராடி பெற்றீரே உமது அருமை தெரியாத சனங்கள்
நீர் இலங்கைக்கு அநீதி இழைத்ததா சொன்னது இதோ இந்திய குடியுரிமை
என இந்திய குடியுரிமையை இலவச வேஸ்டி கணக்கா சும்மா தூக்கி போட்டீரே
"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் " என உமது வசனத்துக்கு தகுந்தாப்பல
இல்லையா நீர் நடந்து கொண்டீர் . தினமலர் காரன் என்னென்ன எழுதினான் லங்கை பிரச்சனையில்
இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்பனியத்தின் கூசாவாக திகழ்ந்த அவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு
நமீதாவும் , ஸ்ரீதேவியும் விபசாரம் பண்ணுவதாக புவனேஸ்வரி சொன்னார் என போட்டதற்கு
எழுதியவரை உள்ள தூக்கி வச்சு "நமீதாவின் கற்பை " காப்பாற்றிய உம்மை
" கற்பு காத்த காவலர் " என பட்டம் கொடுத்து புகழலாம் .
வாலி கிட்ட சொன்னா கவிதை அலையை தோற்று வித்து இதுபோல
உமது புகழை தமிழால் பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து இருப்பாருல்ல
எம்பி குழு போய் " அட நீங்க வேற மூனு வேளையும் பிரியாணி துண்ணுட்டு
இருக்காங்கன்னு சொன்னதும் " நாங்க் உங்களை நம்பிருவம்னு என்னமா
யோசிச்சு ஒரு முடிவு எடுத்தீங்க அதை பாராட்ட வார்த்தையே கிடையாது கலைஞரே
" நீ தண்ணி அடிக்கறவன் தானே' ன்னு சொல்ல " நீ ஊத்தி கொடுத்தியான்னு; கேட்டு
மோதிகிட்டு திரிந்த விசயகாந்து , செயா மாமியும் கூட்டு சேர்ந்து நம்ம டவுசரை
வரும் எலக்சனில் கழட்ட வாய்ப்பு இருக்குன்னு தெரிந்ததும் ' மருத்துவரை "
கூப்பிட்டு வந்துரு நாம ஒன்னா இருக்கலாம் என சொன்ன உமது மதியூகத்துக்கு
முன்னால் இந்த பயலுவ நிக்க முடியுமா/
கிடக்கிறதெல்லாம் கிடந்துட்டு போவுதுன்னு இப்போ பத்திரிக்கை -சினிமா உலக சண்டையை
சுவைத்து பார்க்கும் நீர்
நாளை அவனுகளை அழைத்து "பத்திரிக்கை யாளர் குடும்ப பாதுகாப்பு நிதி" அப்படின்னு
ஒன்றை ஏற்படுத்தினா சும்மா வாலை இந்த பக்கம் அந்தபக்கம் ஆட்டிகிட்டு
உமது புகழை இந்த பத்திரிக்கை எழுதாதா என்ன /
கலைஞரே உம்ம மாதிரி ஆளுக இருக்கிற வரை
நூறு பெரியாரில்லை ஆயிரம் பெரியார் வந்தாலும்
"திராவிட மாயையை " ஒழிக்க முடியான்னேன்
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 7:31:00 PM 0 comments
Labels: ஈழம்
மூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே கதறுகிறது, இந்த குழு பக்சேக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வந்துள்ளது
வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படு கின்றது.
இந்தக் குழுவினரின் வருகைக்கான ஏற்பாடுகள், ஒழுங்குகள், நடைமுறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடியோடு பிடிக்க வில்லை என்று தெரியவந்தது. சரியோ, பிழையோ இலங்கை நாடாளு மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழர்கள் 23 பேரில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் வன்னித் தமிழர்களை நாடாளுமன்றில் பெருமளவில் பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும் கூட்டமைப்பினரே.
எம். மக்களின் வருகை மூடுமந்திரமாக இருந்தது
இந்த மக்களின் அவலநிலைமையை உண்மை நிலைவரத்தை கண்டறிவதாயின் அதற்கான ஏற்பாடுகளை அந்த மக்களின் பிரதி நிதிகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால் இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகை பெரும் மூடுமந்திரமாகவே வைக்கப் பட்டது. தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணாமலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆக, கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பு குறுகிய கால முன்னறிவித்தலுடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவும் ஒன்றே கால்மணி நேரத்துக்குள் அவசரமாக முடிக்கப்பட்டது. சந்திப்பின்போது இந்திய எம்.பிக்கள் தரப்பில் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின என்று கூறப்படுகின்றது. இலங்கைத் தரப்புடன் ஓர் உடன்பாடு கண்டு, அதனடிப்படையில் சில விடயங்களை ஒப்பேற்றவே இந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது என்ற எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் "உதயனு" க்குத் தெரிவித்தார்.
காங்கிரஸின் மூத்த எம்.பி. சொன்ன காரணம்
"இந்த அகதிகளை மீளக் குடியேற்று வதை இலங்கை இராணுவம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகின்றது. அதையும் மீறி அகதிகளை மீளக் குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்றால் அவருக்கு எதிராக இராணுவம் கிளம்பும் சாத்தியம் உண்டு. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதில் இராணுவத்துக்கு சார்பாக சீனா தலையிடும் சூழல் உண்டு. இதை யெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளது.'' என்ற சாரப்பட இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.ஒருவர் இந்தச் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது, இக்குழுவினரின் உள் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்தச் சந்திப்பில் அகதிகளின் நிலைமை குறித்துப் பேசி முடிப்பதற்கிடையிலேயே நேரம் போய்விட்டதாகக் கூறி சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.
"தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வந்தவர்கள் தமிழர் தரப்பின் முக்கிய பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்து யாடாமல் முடித்துக் கொண்டமை முறித்துக் கொண்டமை வேறு உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் இக்குழுவின் விஜயம் அமைந்துள்ளது என்ற கருத்தையே எமக்குத் தந்துள்ளது.'' என்றார் கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி.
தமிழர்களின் அவல நிலைக்கு இந்தியாவே காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்
"ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் இந்தியாவும் ஒன்று. அவர்களால்தான் இந்த அவல நிலை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இதை இக்குழுவினருக்கு உணர்த்த முன்னரே சந்திப்பை நேரம் போதாது என முடித்துவிட்டார்கள். யாராவது ஒருவர் இதை அவர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.'' என்றார் இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்மர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஆவர்.ஆனால் யாழ்ப்பாணத்துக்கான இந்தக் குழுவினரின் விஜயம் எஞ்சியுள்ள ஓர் எம்.பியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் திரு விழாவாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எடுபட்டு, இக்குழுவினர் இலங்கை அரசு சார்பானவர்களாகவே செயலாற்றும் அவலம் ஏற்படும் என்று தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி. முற்கூட்டியே எச்சரிக்கை செய்துள்ளார்.
இக்குழுவினரின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் வவுனியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்கள் பற்றியதே. எனவே, அவர்களின் வருகையில் கணிசமான நேரம் அந்த அகதிகளுடனான சந்திப்பாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நேற்று மாலை சில மணி நேரத்துடன் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எல்லா அகதி முகாம்களுக்கும் இந்தக் குறுகிய நேரத்துக்குள் சென்று விடயத்தை முடித் துக்கொள்ளலாம் எனக் கூறுவது அபத்தமாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அகதிகளையும் இணைத்துக்கொண்டு வராமல், தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை மட்டும் அதுவும் இந்திய மத்திய அரசின் தூதுக்குழுவாக அல்லாமல் தமிழக முதல்வரின் தூதுக்குழுவாக அனுப்பி வைத்திருக்கின்றமையும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.
Posted by நிலவு பாட்டு at 7:25:00 PM 0 comments
Labels: ஈழம்
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.
மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 8:29:00 AM 0 comments
Labels: ஈழம்