Thursday, December 3, 2009

பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்

இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்
ஆவேசம்!

எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு
சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி
அது திரும்பும் என்றே தெரியாது.

சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ
நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.

விழாவில் தங்கர் பேசியது:

"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே
கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க
முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்
போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.

இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்
நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"

"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு
சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே
உட்கார்ந்திருந்தான்.

இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு
போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே
கிடையாது.

இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்
பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்
செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை
குனிகிறேன்…

அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி
உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.

நங்கூரம் இணையத்திலிருந்து

http://www.nankooram.com/thankar-bachan

முத்தமிழ்வேந்தன்
சென்னை

0 Comments: