ரத்த வெறி பிடித்த சிங்கள இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்ததை அம்பலபப்டுத்தியது சேனல் 4 தொலைக்காட்சி.
இந்த வீடியோ காட்சிகள் உண்மை இல்லை; இது தயாரிக்கப்பட்டது என்று இலங்கை அரசு நாடகம் ஆடியது. இலங்கை அரசு ஆடியது நாடகம்தான் என்று என்று டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ’டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விசயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
Wednesday, December 16, 2009
தமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான்: உறுதிப்படுத்துகிறது டைம்ஸ் பத்திரிகை
Posted by நிலவு பாட்டு at 12:33:00 AM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Post a Comment