Saturday, August 15, 2009

ஷாருக்கான் பிற நாட்டு சட்ட திட்டங்களினை மதிக்க வேண்டும்

இந்தியர்களிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம் எந்த சட்ட, திட்ட விதிகளுக்கும் கட்டுபடுவது கிடையாது அதில் தனக்கு என்று ஒரு ஓட்டையினை வைத்து கொள்ளப் பார்ப்பவர்கள் இதுதான் மேலை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

நம்மூரு ஒரு போலிஸ் நம்மை பிடித்து விசாரித்தால் நாம் சொல்லும் முதல் பதில் எங்க மாமா, சித்தப்பா யாராவது ஒருவர் போலிஸில் இருக்கிறார் அல்லது உயர் பதவியில் அல்லது அரசியலில் இருக்கிறார் என்று, அது யாராக இருந்தால் என்ன உனக்கு லைசன்ஸ் இருந்தா காட்டு அதை விட்டுட்டு அவரை தெரியும் இவரை தெரியும் நான் பெரிய ஆளு என்பது வெட்டி வாதம்.

நீங்கள் பெரிய ஆளாக இருந்தும் உங்களையும் போலிஸ் விசாரித்தால் பெருமை படுங்கள்.

6 Comments:

ரவி said...

அவர் முஸ்லிம் என்பதால் விசாரித்தது தான் இங்கே கேள்வி.

கான் என்றால் உட்கார். அப்துல், அப்படீன்னா நீ தீவிரவாதி. முகம்மது ? உன்மேல சந்தேகம்.

இதுதானே தவறு என்கிறோம்...

Anonymous said...

முதல்ல நீங்க உங்க நாட்டு (இலங்கை)சட்டத்தை மதியுங்கோ!

அப்புறமா எமக்கு புத்தி சொல்லுங்கோ!!!

நிலவு பாட்டு said...

/* அவர் முஸ்லிம் என்பதால் விசாரித்தது தான் இங்கே கேள்வி.

கான் என்றால் உட்கார். அப்துல், அப்படீன்னா நீ தீவிரவாதி. முகம்மது ? உன்மேல சந்தேகம்.

இதுதானே தவறு என்கிறோம்.. */

முஸ்லிம் என்ற முறையில் அவர் விசாரிக்கபட்டிருந்தால் அது கண்டிக்கதக்கது. ஆனால் அவர் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் அவரை விசாரிக்க உரிமை இல்லை என்பது ஏற்றுகொள்ளப்பட முடியாத விசயம்.

Prabu M said...

Kindly visit my posting on the same issue and give your comments dear friend...

http://vasagarthevai.blogspot.com/2009/08/blog-post_16.html

Thanks and Regards,
Prabu M

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி பிரபு, பதிவினை படித்தேன், சரியாக சொல்லியிருக்கிர்கள்.

publicity கிடைப்பதற்க்காக கூட இவர் இந்த விசயத்தை பெரிய பிரச்சனை ஆக்குகிறார் போல் தெரிகிறது.

Barari said...

publicity kidaippatharkaka kooda ivar intha vizayaththai periya piratchinai akkukiraar pol therkirathu// ippadi solvathu ungalukke jokkaaka theriyavillai.khaanukku illaatha publicityya ithan moolam kidaikka pokirathu.paavam nilavu paattu innum nilavileye irukkiraarpol therkirathu.