Sunday, August 30, 2009

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்! பதற வைக்கும் படங்கள்!

போர் முடிவுக்கு வந்து விட்ட பிறகும், ஈழத்தமிழர்களை ரகசியமாக கொன்று குவித்து வருகிறது சிங்கள ராணுவம். சிங்கள ராணுவத்தின் அத்தகைய கொலைபாதகச் செயல்களை அம்பலப் படுத்துகிறது சில வீடியோ பதிவுகள்.தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ காட்சிகளைக் கண்டு உலகத் தமிழர்கள் பதறித் துடிக்கின்றனர். இளகிய மனம் படைத்தவர்கள் அந்த வீடியோ பதிவுகளை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது. அந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது வீடியோ காட்சிகள்.

பரந்து விரிந்து கிடக்கும் ஒரு புல்வெளி பிரதேசம். ஆடைகள் முழுவதும் களையப்பட்டு முழு நிர்வாணமாக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்கள் கறுப்புத் துணியால் இறுகக் கட்டப் பட்டிருக்கிறது. இளைஞனின் இரு கைகளும் முதுகுக்குப் பின்புறம் முறுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. நீண்டிருக்கும் அந்த சங்கிலியின் ஒரு முனையை துப்பாக்கி ஏந்திய சிங்கள ராணுவ சிப்பாய் ஒருவன் பிடித்துக்கொண்டிருக் கிறான். இவனுக்கு அருகில் மற்றொருவன்.

நிர்வாணக் கோலத்தில் கண்கள் கட்டப் பட்டுள்ள அந்த இளைஞனை நெட்டித் தள்ளு கின்றனர். அந்த இளைஞன் கீழே விழுகின்றான். இளைஞனை தூக்கி உட்கார வைக்க சிங்களவன் முயற்சிக்க, பலகீனமான அந்த இளைஞனின் உடல் அதற்கு ஒத்துழைக்காமல் மீண்டும் சரிகிறது. அப்போது இளைஞனின் தலையில் எட்டி உதைக்கிறான் ஒரு சிங்களவன். அதன்பிறகு கஷ்டப்பட்டு அந்த இளைஞன் உட்கார வைக்கப்பட... துப்பாக்கி ஏந்திய சிங்களவன், இளைஞனின் தலை யை குறிவைத்துச் சுட... மெல்லிய சத்தத்துடன் அந்த இளைஞன் கீழே சரிகிறான்.

அந்த இளைஞனிடமிருந்து அப்படியே காட்சிகள் விரிய... அந்த பிரதேசத்தில் ஆங்காங்கே 9 இளைஞர்கள் இதேபோல் சுடப்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களது தலைப்பகுதியில் ரத்தம் சிதறியிருக்கிறது. எல்லோரும் முழு நிர்வாணமாக கொல்லப் பட்டுக் கிடக்கின்றனர்.இந்தக் காட்சிப் பதிவு களைக் கண்டுதான் உலக தமிழர்கள் அதிர்ச்சியில் விக் கித்து நிற்கின்றனர்.

இதுபற்றி நாம் விசா ரித்தபோது... ""வன்னி வதை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர் களை போர்க்கைதிகளைப்போல முடக்கி வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். முள் கம்பிகளுக்கிடையே விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் தமிழர்கள்.

இந்த முகாம்களிலிருந்து கடந்த 3 மாதங்களாக இளைஞர்களையும் இளம் பெண்களையும் இரவு நேரங்களில் ரகசியமாக கடத்திச் செல்கிறது சிங்கள ராணுவம். இதற்காக, வாரத்திற்கு 2 முறை முகாம்களுக்குள் "வெள்ளை வேன்' வந்து போகிறது. ராஜபக்சேவின் ராணுவத்தினருக்கு உதவியாக இந்த வெள்ளை வேனை கருணா மற்றும் டக்ளஸின் ஆட்கள் இயக்கி வரு கின்றனர்.

இப்படி வெள்ளை வேனில் கடத்தப்படுபவர்கள் முகாம்களுக்கு மீண்டும் திரும்புவதில்லை. ராணுவ முகாம்களில் அடைத்துவைத்து கொடூர சித்ரவதைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள் தமிழ் இளைஞர்கள். இளம்பெண்களோ ராணுவத்தினரின் கூட்டு கற்பழிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தொடர் சித்ரவதைகளுக்குப் பிறகு இளம்பெண்களும் இளைஞர்களும் கொல்லப் படுகின்றனர்.

இவர்கள் எப்படி கொடூரமாக கொல்லப்படுகின்றனர் என்பதுதான் இந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. இந்தக் கொடூரக் காட்சிகளை சிங்கள ராணுவத்தினரே தங்களது செல்ஃபோன் கேமராவில் பதிவு செய்துள்ளனர். ராணுவனத்தினரிடமிருந்தே அந்தப் பதிவுகள் கைப்பற்றப்பட்டு அம்பலமாகியுள்ளது'' என்று அதிர்ச்சியுடன் விவரிக்கின்றனர் சிங்கள ராணுவத்துடன் தொடர்புடைய கொழும்பு பத்திரிகையாளர்கள்.

மேலும் இவர்கள், ""விடுதலைப்புலிகளிடமிருந்து இலங்கையை மீட்டுவிட்டோம் என்கிறார் ராஜபக்சே. இனி ஒரு தமிழின விடுதலைப் போராட்டம் இலங்கைக்குள் உருவாகக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராஜபக்சே. இதற்காக ராணுவத்தினருக்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு செயல் திட்டம்தான் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள், மக்களோடு இணைந்துள்ள புலிப்போராளிகள் என அனைவரையும் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்கிற பாதகச் செயல்'' என்கின்றனர்.

சிங்கள ராணுவத்தின் மனித நேயமற்ற இந்த இன அழித்தல் கொடூரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடு மையாக கண்டித்திருப்பதுடன்...

""ஜெனீவா பிரகடன ஒப்பந்தங்களை ராஜபக்சே அரசாங்கம் மீறி வருவதற்கு இந்த வீடியோ காட்சிகளே ஆதாரங்கள். இதனைக் கொண்டே ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் சிங்கள ராணுவ உயரதிகாரிகளை போர்க்கைதிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்'' என்று குரல் கொடுக்கின்றனர். இதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ராஜபக்சே அரசு, வழக்கம்போல் ""இது ஜோடிக்கப்பட்ட வீடியோ'' என்கிறது.

-கொழும்பிலிருந்து எழில்

நன்றி நக்கீரன்

http://kudikaarann.blogspot.com/2009/08/blog-post_30.html

4 Comments:

மதி said...

மைக் மாமா மாதிரி சிங்கள காடைகளை வைத்துகொண்டு சிங்கள அரசாங்கம் எத்தனை கொலைகளை மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளிப்படும், குற்றவாளி கூண்டிலே அந்த கொடுர அரக்கன் ஏற்றப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

மைக் மாமா said...
This comment has been removed by a blog administrator.
சுரேஷ் said...

அட நாய்ப்பயலே மைக் மாமா, நீ எல்லாம் சிங்களவன் ராசபக்சேவை விட மோசமானவண்டா. செருப்பால அடிச்சி உன்னை தூ நாயே.

Anonymous said...

what is shown in the video is a tip of a iceburg,
sinhala government planed to kill all the tamils in the war zone in the last days of war, but when the some picture taken by UN were released showing number of tents etc srilankan governement realised the area is monitored by UN, this is why 360,000 tamils managed to comeout alive. ( don't forget srilanka told the world there is only 60,000 people in the war zone. but surprisingly 360,000 came out alive. ( srilanka estimated only 60,000 injured may survive.

This brutal government continued it killings in the IDP camps , it maintained no register separate family members and abduct 2000 people a day from the camp and taken to undisclosed location where all there people are murdered by sinhala regimes.
did you know so far only 11,000 people got released form this tight security prison. 360,000 people were there on may 19th.
did you know how many people left in the camp now? less than 180,000 in the camps.
fate of 160,000 people are not known,
all these people are striped naked and killed and buned to ashes.
this is how genocide is commited by srilankan government.