Saturday, August 29, 2009

மானங்கெட்ட, நன்றி கெட்ட விஜய் காங்கிரஸில்

இத்தனை தமிழின மக்கள் அழிவிற்கும் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியினை விஜய் சேர்வது என்பது எந்த உப்பு போட்டு சாப்பிடும் தமிழனாலும் இப்படி துரோகம் பண்ணனும் அப்படின்னு நினைச்சுகூட பார்க்க முடியாது. ஆனால இந்த தலை தமிழனாலே எல்லாம் வளந்து இப்ப தமிழனுக்கே ஆப்பு வைக்க கிளம்பிடிச்சுது.

விஜயின் இந்த் செய்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இன்னும் இருக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களை எல்லாம் கொல்வதற்கு துடித்து கொண்டிருக்கும் ராசபக்சேக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ், காங்கிரஸ் தலைவராக துடிக்கும் விஜயும் ஒரு சிறந்த தமிழின துரோகியோ. இவனை எல்லாம் நாம் தூக்கி வச்சி ஆடினதுக்கு தமிழனுக்கு எல்லாம் வேணும்டா. சூடு, சொரணையற்ற ஒரு இனம் தமிழினம்.


"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.


தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.


இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண் டும்' என வேண்டுகோள் விடுத்தார். "காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது.


"கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள் ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.

5 Comments:

பாலகிருஷ்ணா said...

அவனெல்லாம் ஒரு ஆளுன்னு நெனச்சு பதிவு வேற போடுறீங்க. போங்க சார். காங்கிரஸை நம்பி இந்தியா என்ற நிலை மாறும் வரை தமிழருக்கு என்றுமே விடிவுகாலம் இல்லை.

மேலும் ஒரு விஷயமொன்றும் இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக விஜயின் படம் ஓடவில்லை. ஆகையால் இப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார்கள். ஏதாவது மீடியாவில் பரபரப்பாய் செய்தி வந்தால் தான் படம் வியாபாரம் ஆகும். இதெல்லாம் நுண்ணிய அரசியல்.

மக்கள் என்ன எம்ஜியார் காலத்திலேயேவா இருக்கிறார்கள். விஜயின் எண்ணத்தில் மண் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

VanniOnline said...

இளைய தலைவலியை புறக்காணிப்போம்!!!!!!!

பழூர் கார்த்தி said...

// VanniOnline said...
இளைய தலைவலியை புறக்காணிப்போம்!!!!!!! //

இந்த கமெண்ட்டை ரசித்தேன் :-)
எனக்கும் இதென்னமோ படத்தை ஓடவைக்க ஸ்டண்ட் என்றே படுகிறது..

Anonymous said...

இவனது படங்களை இனி அனைத்து நாடுகளிலும் புறங்கணிப்போம்.

பகுத்தறிவு முழக்கம் said...

அய்ய்யோ இந்த சினிமா கொசு த் தொல்லை தாங்க முடியல யே