Saturday, March 14, 2009

இவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண்டதா

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?


சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு, திரட்டி மற்றும் வலைபதிவுகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இவர்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.

உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

12 Comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் போதுமான அளவு ஈழ விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன. அதனால் தான் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு தீ குளிக்கிறார்கள். நீங்கள் தமிழ் மணத்திற்கு எதிர்த்து கூப்பாடு போடுவதை விடுத்து, ஆங்கிலத்தில் எழுதி இந்திய , அனைத்துலக தளங்களில் வெளியிட்டு உலகமெங்கும் கொண்டு செல்லுங்கள். உலக மக்களை புரிந்து கொள்ள செய்யுங்கள். அது மட்டுமே பலனளிக்கும்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டி மேலும் மேலும் தமிழில் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதால் பல முத்து குமார்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். காசு உள்ள ஈழ தமிழர்கள் விடுதலைக்கு போராடாமல் வெளிநாடுகளில் சென்று ஓடி ஒளிந்து கொண்டு ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு வீர வேசமாக எழுதுவதை விட , பணம் இல்லாததால் ஈழத்தில் வாழ்ந்து சாகிறானே ஏழை தமிழன் அவன் தியாகம் பெரிது.

உருப்படியாக ஏதாவது எழுத/ செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் , பரப்புங்கள். அதுதான் பலன் தரும். உலகமெங்கும் இருந்து குரல் வந்தால் தான் தீர்வு கிடைக்கும். தமிழ் மனத்தில் போடுவது எந்த உபயோகத்தையும் தராது. வேண்டுமானால் மேலும் பல தீகுளிப்புகளை தரலாம்.

நிலவு பாட்டு said...

/* தமிழ்நாட்டில் போதுமான அளவு ஈழ விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன.*/

அப்படி தெரிந்திருந்துமா இன்னும் சோ, ஜெ, தினமலர், சாமி இவனுங்கலெல்லாம் மக்கள் முன்னாடி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இவ்வளவு தெரிந்துமா நீங்கள் இப்படி பேசுகிறீர்கள், உங்களை போன்று படித்தவர்களையே மாற்றவே இன்னும் பல காலமாகுமய்யா.


தமிழன் அனைவரும் முதலில் தமிழின அழிவை புரிந்து கொள்ளவேண்டும், உங்கள் போன்ற கருங்காலிகளும் சேர்த்துதான். உங்களுக்கு புரியவைப்பது எங்கள் முதல் கடமை அல்லவா நண்பரே.

Anonymous said...

//அப்படி தெரிந்திருந்துமா இன்னும் சோ, ஜெ, தினமலர், சாமி இவனுங்கலெல்லாம் மக்கள் முன்னாடி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.//

இவர்களை போன்றவர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இலங்கையிலேயே கருணா, டக்லஸ் தேவானந்தா போன்றவர்கள் இருக்கிறார்களே?

அது சரி... நீங்கள் இப்படி எழுதி தமிழ்மணத்தில் போட்டு சோ, ஜெ, தினமலர், சாமி போன்றவர்களை திருத்த போகிறீர்களா?

//உங்கள் போன்ற கருங்காலிகளும் சேர்த்துதான்.//உண்மையை சொன்னால் கருங்காலி பட்டமா?

ஒன்று செய்யுங்கள்... ஈழத்தில் இருந்து ஓடி வெளி நாடுகளில் ஒளிந்து கொண்டு திரியும் ஆண்மை மிக்க பணக்கார ஈழத்தமிழர்களை முதலில் ஈழம் சென்று போராட சொல்லி பதிவு போடுங்கள். பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கலாம்

நிலவு பாட்டு said...

மகிந்தவும் உணமைதான் சொல்றன்னு சொல்லிட்டி இருக்கிறான் தமிழ் மக்களை காக்கிறார் என்று.

கருங்காலி என்பது நல்லதொரு பட்டம் நண்பரே. கருங்காலி நண்பா ஈழத்தையும் , தமிழனையிம் பிரித்து பார்க்கும் உன் சொற்களே உன் குடுமியை பார்க்க வைக்கிறது. இந்த மாதிரி குள்ளநரிகளை கருங்காலிகள் என அழைப்பது தவறேதும் இல்லை.

Anonymous said...

ஒன்று செய்யுங்கள்... ஈழத்தில் இருந்து ஓடி வெளி நாடுகளில் ஒளிந்து கொண்டு திரியும் ஆண்மை மிக்க பணக்கார ஈழத்தமிழர்களை முதலில் ஈழம் சென்று போராட சொல்லி பதிவு போடுங்கள். பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கலாம்//

அடி மடியிலேயே கை வைக்கலாமா? புலிகள் போராட ஸ்பான்சர் செய்யமுடியும் புலிகளை கேள்விகேட்க முடியும், புலியாகவே ஆகச்சொன்னால்... ஐரோப்பிய சொகுசு வாழ்க்கையை யார் இழக்கதயார். நாலு பதிவ போட்டமா ரெண்டு பெக் அடிச்சமா மேட்டர் ஓவர்

யோவ் எழவுபாட்டு மாற்று கருத்து சொன்னா தமிழ்மண ஜால்ரா இல்ல கருங்காலி... தமிழனுக்கு எதிரா தமிழன சின்டு முடிஞ்சு உடற நீதான்யா, உன்ன மாதிரி ஆள்தான்யா ராஜபக்சேவுக்கு சேவ செய்யுரீங்க. வேல முடிஞ்சுதுல்ல கடைய மூடிட்டு கிளம்பு,,, நீயும் மைக்கும் சொல்லி தமிழக மக்கள் தெறிஞ்சுக்குற நெலமேல இல்ல என்னவோ இவங்க 83 லேருந்து பிளாக் எழுதற மாதிரி...

Anonymous said...

என்னாமா பேசறாணுங்கய்யா இவனுங்க, இந்த ஆர்வத்தை தமிழனுக்கு காட்டிருந்த்தா எப்பவோ விடுதலை அடைஞ்சிருக்கலாம்.

நிலவு பாட்டு said...

/* மாற்று கருத்து சொன்னா தமிழ்மண ஜால்ரா இல்ல கருங்காலி... தமிழனுக்கு எதிரா தமிழன சின்டு முடிஞ்சு உடற நீதான்யா, உன்ன மாதிரி ஆள்தான்யா ராஜபக்சேவுக்கு சேவ செய்யுரீங்க.*/


மாற்று கருத்துதான் என் கருத்தும், ஏன் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற கூடாது. வெட்டி தனமா எங்கிட்ட வந்து வாங்கி கட்டிக்கறதுக்கு பதில், வீணாக வம்பளப்பதை விட்டு விட்டு.

Anonymous said...

//இந்த மாதிரி குள்ளநரிகளை கருங்காலிகள் என அழைப்பது தவறேதும் இல்லை.//

என் குடுமியை எட்டி பார்ப்பது இருக்கட்டும். சாத்தான் வேதம் ஓதலாமா?

நிலவு பாட்டு said...

/* என் குடுமியை எட்டி பார்ப்பது இருக்கட்டும். சாத்தான் வேதம் ஓதலாமா? */

சரி நான் சாத்தானாவே இருந்துட்டு போறேன், மோசமான கொலகாற ராசபக்சே, ஹம்சா, தமிழின துரோகி இவனுங்களுக்கு நான் சாத்தாந்தான்.

இனி வெட்டி பேச்சுக்கு நான் தாயாரில்லை, நீ சென்று வரலாம்.

Anonymous said...

There are 2 reasons:

1) Tamilans have no guts.

2) Tamilans are hardly united, in good or bad. Not like Arab medias that showcased without fear, what happenned in Gaza.

About time to stop worrying about mediums and people who curtain reality, and start to use other avenues. Starting another aggregator, starting english mediums, making video CDs etc.

If we have noticed, people are their with the sufferers. It is time to go straight to the people.

-Kajan

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

/* nilavuppAddu you are nothing but a professional idot working fulltime to promote stupidity to the world. squeeze your pea brain rather than scratch your tiny weeny and THINK.
*/

I was thinking about your suggestion, i realized my mistake. i follow the way you say but before that one thing why dont you change yourself and true to tamil people, then we will have a big discussion how to change the world and stop the genocide by mahinda and also discuss about why few people always against tamil, do they have any big KUDUMI or not and lot more