Friday, April 24, 2009

கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.







Thursday, April 23, 2009

இந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்கும், தமிழர்களுக்கும்தான்

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

நான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.

மனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம்.

முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.




ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

thanks http://www.tamilwin.org/view.php?2a36QVj4b3c99E234deSWnB0b02p7GQd4d3GYpD2e0d5ZLuSce04g2h92ccb1j0Q2e

இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்?

இந்திய அரசு மற்றும் கருணாநிதி ஒப்புதலுடன் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மறைக்கவே இன்றைய பொது வேலை நிறுத்தம் கருணாநிதியால் நடத்தப்பட்டது. மக்களே இந்த சகுனியின் சதி வலையில் விழ வேண்டாம்.

சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளிடம் இருக்கும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கவே சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 22, 2009

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

குமுதம் கேள்வி பதில் ஒரு குட்டிக் கதை சொல்லுங்களேன்.?
ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர்.

இந்தியத் தலைநகரிலிருந்து வௌிவரும் `வடக்கு வாசல்' இதழில் படித்த கதை இது.

அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத் தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது. என்ன செய்தும் அந்தப் புலியைப் பிடிக்கமுடியவில்லை. அமெரிக்காவில் முப்படை களாலும் அந்தப் புலியைப் பிடிக்க முடியாத நிலையில் வேற்று நாடுகளிடம் அமெரிக்கா உதவி கோரியது. யு.கே., கனடா, ஃப்ரான்ஸ், ஜப்பான் ம்ஹூம்... யாராலும் முடியவில்லை.

"எங்களைக் கேட்கலியே. நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்கிறோம். இதைப் பிடிக்கமாட்டோமா?" என்று ஒரு குரல். யார்? இலங்கை அரசுதான்.
இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. வருடமாயிற்று. போன படை திரும்பவேயில்லை.

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க காட்டுக்குள் சென்றன. நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி...

ஒரு மான் தலைகீழாக நெருப்பின் மேல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. கீழே இலங்கைப் படையினர் அந்த மானைக் குண்டாந் தடிகளால் தாக்கிக்கொண்டிருந்தனர். " ஒப்புக் கொள். ஒப்புக்கொள். நீதான் புலி''

உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து, " ஒரு வருடமாக இதையா கேட்டு உன்னை வதைத்தனர்?''

அதற்கு அந்த மான் . " பரவாயில்லைங்க. எனக்காவது ஒரு வருஷம்தான். ஆனா இலங்கையில 25 வருஷமா இதைத்தான் பண்றாங்க'' என்றது.

நன்றி : குமுதம்

இன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக்கு வழிகோலும்

மேலும் தனது சொத்து வளங்கள் பெருக வேண்டும் என்பதற்க்காக இன்று தமிழினத்தின் அழிவுக்கு துணை போகும் கருணாநிதி நாளையே தமிழினம் முழுவதையும் அழிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.

மக்களே யோசியுங்கள் இன்று இவர் கொடுக்கும் 2000, 3000, 4000 ரூபாய்க்காக உங்களின் வாக்குகளை இவருக்கு அளித்தால் நாம் என்றுமே பிச்சை காரர்கள் ஆகப்போவது உறுதி. சிந்தித்து வாக்கு அளியுங்கள். இதே பணத்துக்காக உங்களை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை முழுவதும் இப்போது பணத்தில்தான், எப்பாடு பட்டாவது மக்கள் ஒவ்வொருவருக்கும் பணத்தினை கொடுத்து வாக்குகளை பெறுவது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த 1 லட்சம் கோடியும் இப்போது இந்த தேர்தலில் இரைக்கப்படுகிறது.

நீலகிரி தொகுதியில் ஒரு வாக்குக்கு 10000 ரூ கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. மதுரையில் 4000 ரூ வரை கொடுக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.

ஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்!

அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் 'ரீ என்ட்ரி' ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!'' என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.

ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர்

பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல்



கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.



இந்த நேரத்தில் சினிமா உலகத்தினர் ஆவேசப்படுவதால் தீக்குளிப்புகளும் வன்முறைகளும்தான் நடக்குமே தவிர, உரிய பலன் கிடைக்காது. தயவுசெய்து அமைதியாக இருங்கள்...' என நயந்து சொன்னதால், அடுத்தகட்டப் போராட்டத்தைத் தள்ளி வைத்திருந்தோம்.

ஆனால், தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது. கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.

ஆனால், ஈழத்தில் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் 'தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.



ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.



அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம். பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம். அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!'' என்றனர்.

இயக்குநர்கள் இப்படிப் போராட... உதவி இயக்குநர்களும், 'தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்... காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.

நடிகர் சத்யராஜிடமும், 'சந்தன காடு' கௌதமனிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.

''திரைத்துறைக்கு எதற்கு வந்தோமோ அதனை நாங்கள் அடைந்து விட்டோம். இனி யாருக்காகவும் எங்களுடைய உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் குரலுக்கு மதிப்பளித்து, ஈழத்து சோகங்களைத் தடுக்க காங்கிரஸ் உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், எங்களின் உணர்வுகளும் எதிர்ப்புகளும் எப்படி இருக்குமென்று எங்களுக்கே தெரியாது!'' எனச் சீறினார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசியபோது, ''உண்ணாவிரத அறப் போராட்டம் என்றெல்லாம் இனியும் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள முடியாது. அகிம்சையில் பிறந்த காங்கிரஸ் கட்சி, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை வேடிக்கை பார்ப்பது சகிக்க முடியாத அவமானம்! எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும்!'' எனக் காட்டம் காட்டினார்.

திரையுலகத் தரப்பு வேட்பாளர் எனச் சொல்லப்படும் இயக்குநர் அமீரிடம் பேசினோம். ''எங்கேயோ பிறந்த சோனியாவை அன்னையாக மதித்து, நாற்பது தொகுதிகளையும் அவருக்காக வாரிக் கொடுத்த தமிழகம்தான், இன்று ஈழப் படுகொலையை ஊக்குவிக்கும் காங்கிரஸ் மீது வயிறு எரிய சாபத்தைக் கொட்டுகிறது. தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தீர்வாக, சோனியா உடனடியாக ஈழப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி அவர் செய்தால், மொத்தத் திரையுலகமும் அவரைப் பாராட்டி விழா எடுக்கத் தயாராக இருக்கிறது. சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்... அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள். பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!'' என்றார்.

திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ''காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!'' என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.

இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!' என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது

- இரா.சரவணன், எம்.குணா
படம்: என்.விவேக்

நன்றி;விகடன்