Friday, April 24, 2009

கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி

நாம் நினைப்பது போல் இந்த தேர்தல் அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. தமிழர்களின் எதிரிகளான தமிழின கொலைகார கூட்டணிக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் கடும் போட்டியே இந்த தேர்தல், தமிழனின் மானத்திற்கும், ரோசத்திற்கும் விடப்பட்ட சவால் இந்த தேர்தல். தமிழனை ஏமாற்றியே எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று நினைக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எதிரில் வரும் எந்த துரோகியானாலும் தட்டி கேட்போம், அது திருமாவோ, வீரமணியோ, சு.ப வீயோ யாரை பற்றியும் கவலை வேண்டாம். இவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமிழனை பற்றி வாய் கிழிய பேசி விட்டு தமிழனை அழிப்பவனிடமே சரணடைவது வேண்டாம் இந்த ஒட்டு பொறுக்கி தனம்.

கொலைகார கூட்டணியை தோற்கடிப்பதே தமிழர்களாகிய நமது கடமை.

இதில் நாம் தவறினால் இந்த பழி நம் மேல் பல தலைமுறைகளுக்கு தொடரும். இந்த தேர்தலிக் கருணாநிதியின் கொலைகார கூட்டணிக்கு கொடுக்கும் பாடம் இனி எந்த கட்சியினையும் தமிழர்களுக்கு எதிராக பேச முடியாத படி செய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் நமது தமிழினத்தினை அழிக்க துணை போகும் திமுக,காங்கிரஸ் கட்சிகளை புறமுதுகு காட்டி ஓட செய்வதுதான். இதில் மற்றவர்கள் லாபம் அடைந்தால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. தமீழீழத்திற்கு அடுத்து ஒரு உதவி என்பது இந்த கூட்டணியை ஆட்சியில் இருந்து அக்ற்றினால் மட்டுமே முடியும்.

இந்த அளவு தமிழர்களில் எந்த ஒரு காலத்திலும் கொல்லப்பட்டிருக்கவில்லை. இவையனைத்தும் சோனியா, சிங், கருணாநிதியின் சம்மதத்துடனே நடைபெறுகிறது.

எப்படியாவது இந்த தேர்தலுக்கு முன் தமிழர்கள் அனைவரையும் கொன்று விட துடிக்கும் இந்த கொலைகார கூட்டணிக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுவோம்.7 Comments:

vanathy said...

கவிஞர் தாமரை அவர்களின் உரையைத் தந்தமைக்கு நன்றி.
அவரின் உணர்வுகளும் துணிச்சலும் பாராட்டத்தக்கவை..
-வானதி

நிலவு பாட்டு said...

வருகைக்கு நன்றி வானதி. தாமரை அவர்களின் பேச்சு அப்படியே இன்றைய கருணாநிதியின் கையலாகதனத்தை உரித்து காட்டியிருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

கவிஞர் தாமரையின் உரை ஈழம் சார்ந்த தமிழக,இந்திய அரசியலை தோல் உரித்துக் காட்டுகிறது.காணொளி தந்தமைக்கு நன்றி.

எழுத்துக்கள்தான் நமது தலைமைகளுக்குப் போய்ச் சேர்வதில்லை.இந்த உரை போய்ச் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

Anonymous said...

உங்களைப்போன்ற பதிவர்கள் 49ஓ பற்றி எழுதலாமே? இரு கழகங்களிடமும், காங்கிரசிடமும் வெறுத்துப்போனவர்களுக்கு உதவும்.
http://leadindia.itimes.com/content.php?cid=87403
இந்த லிங்கில் கொஞ்சம் பாருங்கள்.
இதுவரை என்னிடம் blog இல்லை, அதனால் தான் அனானி.

தமிழ்நதி said...

நன்றி நிலவுப்பாட்டு,

நான் சில நாட்களாகச் சென்னையில் இல்லாதபடியால் இங்கு நடந்தவை எவற்றிலும் கலந்துகொள்ள முடியவில்லை. தாமரையின் பேச்சிலிருக்கும் உண்மையின் நெருப்பில் பொசுங்கட்டும் தீமைகள். இந்தப் பதிவினை இட்டதற்கு மிகவும் நன்றி நண்பரே.

நிலவு பாட்டு said...

/* நன்றி நிலவுப்பாட்டு,

நான் சில நாட்களாகச் சென்னையில் இல்லாதபடியால் இங்கு நடந்தவை எவற்றிலும் கலந்துகொள்ள முடியவில்லை. தாமரையின் பேச்சிலிருக்கும் உண்மையின் நெருப்பில் பொசுங்கட்டும் தீமைகள். இந்தப் பதிவினை இட்டதற்கு மிகவும் நன்றி நண்பரே.*/

நன்றி நண்பரே, வாருங்கள் போராடுவோம் இன்னும் சில நாட்களே உள்ளன தமிழனின் தலைவிதியினை நிர்ணயிப்பதற்கு

உதயதேவன் said...

தமிழ் கவிதாயினி தாமரை...
சிங்கமுழக்கமிட்டார் மலர்ந்த முகத்துடன்...
புறனானூற்றின் மறத்தழிச்சியை பார்த்தேன்
கேட்ட (புறனானூறு)கதைகளெல்லாம் உண்மை
என்று நம்பினேன் உன்னால்...
எத்தனை துன்பம் வந்தாலும்
எதிர்கொள்வேன் நேர்மையாய் உரைப்பேன்
என்று தனியொரு பெண்ணாய்
தகர்த்து எரிந்தாய் போலிகளை
தைரிய லட்சுமியாய்...
சகோதரி உன்போல் உறுதிகொண்டால்
தமிழர்கள் தவிக்க வேண்டியதில்லை....