Monday, April 27, 2009

தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்

அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!!

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன.
தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை.

ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்திவிட்டு காங்கிரசுக்கும் மத்திய அரசுக்கும் வால் பிடிக்கும் இந்த அரசியல் பரதேசிகளின் மனதில் என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் அவ்வப்போது அவர்கள் விடுகின்ற உணர்வு பூர்வமான கயிறு திரிப்புகளுக்கும் அற்புத வாக்குறுதிகளையும் நம்பி நம்மில் சில பழமைவாதிகள் அவர்களை புகழ்ந்து பாடுவது படு கேவலமாக இருக்கிறது.

உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.

தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.

அன்புடன்
தமிழன்

நன்றி :
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3198:2009-04-27-14-51-47&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

7 Comments:

Anonymous said...

வன்னியர் ஒற்றுமை ஓங்குக

Anonymous said...

அய்யோ. போர் நின்னுடிச்சின்னா. அகதிகளை அந்தந்த நாடுகள் ஈழத்துக்கு திருப்பி அனுப்பிச்சிடிவாங்களோன்னு பயமாயிருக்கு. ஈழத்துக்கு போயி மயிரா பிடுங்கமுடியும். ஏசி, கார், பங்களான்னு வாழ்ந்துட்டோம்.

ஒரு ஈழத்தமிழன்

ttpian said...

முக்கிய அறிவிப்பு:
தக்க தருணம்:
மலயாளிகல்(நாராயனன்,சிவசன்கர மேனன்,அந்தொனி,விஜய் நம்பியார்-இவர்கள்தான்,தமிழர்களுக்கு எதிரான சதியை அற்ங்கேற்றியவர்கள்:
இனிமேல்,போதுகூட்டத்தில் பேசும்போது,இவர்களை கைதுசெய்து விசாரனை நடத்துவோம்
என்ரு அரிவிக்க வேண்டும்...
இந்த அறிவிப்பு,டெல்லி மலயாலி எறுமைகளை பயப்படும்படி இருக்கும்:
பிற்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிரான சதிவலை பின்னமாட்டான்!

Anonymous said...

ஈழத்தமிழன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்ட திமுக அல்லது காங்கிரஸ் பன்னிக்கு கண்டனம்.

Anonymous said...

கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

Anonymous said...

புலிகளுக்கு எதிரானவர்களை எல்லாம் ஈழத்தமிழருக்கெ எதிரானவர்கள் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயலும் புலி ஆதரவாளர்களதான் நரித்தனம் செய்பவர்கள்.

மதி said...

/* புலிகளுக்கு எதிரானவர்களை எல்லாம் ஈழத்தமிழருக்கெ எதிரானவர்கள் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயலும் புலி ஆதரவாளர்களதான் நரித்தனம் செய்பவர்கள்.*/

அட நாய்களே…..
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்…..

இப்படிக்கு,
மனிதர்
தமிழர்
இந்தியர்