Wednesday, April 8, 2009

வீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோம்

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், புகைப்படங்களில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றன.

கடந்த முதலாம் உலகப்போரில் இடம்பெற்ற பாரிய உயிரிழப்புகளை தொடர்ந்து, இவ்வாறான உயிரியல் இரசாயன ஆயுதங்கள், சர்வதேச போரியல் பிரகடனத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு இந்த தடைசெய்யப்பட்ட இராசாயன ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தமை வெளிவந்திருந்தன.

இந்த இரசாயன ஆயுதங்களை மீன் பிடிக்கும் போதும், மிருகங்களின் மீதும் கூட பாவிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த வகையில் போராளிகளின் மீது பிரயோகிக்கமுடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

4 Comments:

Anonymous said...

தமிழின துரோக நாய்களை முகப்பில் அனுமதித்து உங்களை போன்றவர்களை ஓதுக்கும் தமிழ்மணம் ஒரு பச்சை துரோகியே.

மணி said...

வீரமணிக்கு தமிழர்களின் மேல் உண்மையாக அக்கறை இருந்தால் இவர் கருணாநிதிக்கு அடிக்கும் ஜால்ராவை நிறுத்த வேண்டும். கருணாநிதியை தட்டி கேட்க வேண்டும். நானும் ஒரு தி.க காரன் என்பதில் மிகுந்த வேதனை அடைகிறேன்.

Anonymous said...

இன்றைய தலையங்கம் விடுதலையில், என்னமா நம்ம வீரமணி வால் பிடிக்கறாரு. அய்யா வீர மணியனே உன் நாடகமும் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தமிழின கொலையில் முக்கிய காரணகர்த்தாவாகிய கருணாநிதிக்கு வால் பிடிப்பதை நிறுத்துமய்யா.



காக்கை, குருவிகள் போல் சுடுவதா?
பிரதமர், சோனியா காந்திக்கு கலைஞரின் தந்தி

நாளை மாலை கலைஞர்
தலைமையில் பேரணி வரவேற்கத்தக்கது

கழகத் தோழர்கள் பேரணியில் கலந்து கொள்வீர்

தமிழர் தலைவர் அறிக்கை

காக்கை, குருவி போல தமிழர்களை சுட்டுத் தள்ளும் கொடுமையைக் கண்டித்தும், போரை நிறுத்தச் சொல்லியும் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் அனுப்பியுள்ள தந்தியை வர வேற்றும், நாளை மாலை சென்னையில் கலைஞர் தலைமை யில் நடக்கவிருக்கும் பேரணியில் கழகத் தோழர்கள் பங் கேற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (7.4.2009 செவ்வாய் அன்று) திருச்சியில் நடைபெற்ற சுமார் 400 பேர்களுக்கு மேல் பங்கேற்ற திராவிடர் கழகம் நடத்திய பொதுக்குழுவில் மூன்றா வது தீர்மானமாக...

saamakodanki.madurai said...

இன்றைக்கு பெரியாரும், அண்ணாவும் இருந்திருந்தால் கலைஞரையும், வீரமணியையும் கண்டுபிடித்த குற்றத்திற்காக தங்களுக்கு தாங்களே ஏதாவது தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பது உண்மை.கருப்பு சட்டைக்குள் ஒளிந்து கொண்டு மனதையும் கருப்பாக வைத்திருக்கும் வீரமணி போன்றவர்கள் தமிழக மண்ணில் இருப்பது கூட கேவலம். கருணை இல்லாதவருக்கு பெயர் கருணாநிதி. மற்றவரின் பின்னால் ஒளிந்து கொண்டு சுரண்டி தின்னும் கேவலத்திற்கு வீரமணி என்று பெயர்? என்ன கொடும சார் இது?