Saturday, April 25, 2009

கருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறது, அவர் நினைத்தபடி

இன்று மக்கள் பாதுகாப்பு வலயம் மீது மதியம் வரை 25 தடவைகள் வான் குண்டு வீச்சு! இவர் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இந்திய அரசு மலையாளிகள் கூட்டணிகளை அங்கு அனுப்பி இனி ஒவ்வொரு நாளும் 1000 குண்டுகளும் 500தமிழ் மக்களும் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என கேட்டு கொண்டதற்கினங்க இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது.

வன்னியில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பகுதியான மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது சிறீலங்கா வான்படையினர் பரவலாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என பதிவு இணையத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மதியம் வரையில் சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான மிகையொலி யுத்த வானூர்த்திகள் 25 தடவைகள் மக்கள் மீது அகோர குண்டு வீச்சை நடத்தியுள்ளன.

முற்பகல் 9:00 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையில் நான்கு தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. பின்னர் மதியம் 12:00 மணிக்கும் பிற்பகல் 2:30 மணிக்கும் இடையில் 12 தடவைகளும் வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் பின்னர் பிற்பகல் நான்கு தடவைகளும் தொடர்ந்து மாலை 5 தடவைகளுமாக மொத்தம் 25 தடவைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா வான் படையினர் அகோர வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

2 Comments:

Anonymous said...

tamizhinithu.blogspot.com

Anonymous said...

//இவர் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இந்திய அரசு மலையாளிகள் கூட்டணிகளை அங்கு அனுப்பி இனி ஒவ்வொரு நாளும் 1000 குண்டுகளும் 500தமிழ் மக்களும் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என கேட்டு கொண்டதற்கினங்க இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது//

தமிழகத்தில் தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரையில் எந்தவித முன்னகர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கட்டாயம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.