Monday, April 27, 2009

3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங்களாக கொலைஞரால் முடியவில்லை

போர்நிறுத்தம் இல்லாமலே அது வந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றும் இவரிடம், இவர் வழியிலே ஒரு கேள்வி, கொலைஞரே இன்று உங்களால் ஒரு போர் நிறுத்தம் கொண்டு வரமுடிகிறது என்றால் ஏன் இத்தனை தமிழர்கள் இத்தனை மாதங்களாக, வருடங்களாக கொல்லப்படுவதற்கு அனுமதித்திர்கள். அன்றே இதே போல் உண்ணா விரதமிருந்திருந்தால் நாம் இழந்த அனைத்து தமிழர்களையும் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா. அது எப்படி 3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்த உங்களால் 30 வருடமாக உங்கள் திறமையினை எங்கு ஒளித்து வைக்க முடிந்தது.

எல்லாம் தேர்தல் நாடகம் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்றுதான். மீண்டும், மீண்டும் கேட்டு கொள்வது அங்கு தமிழன் அழிகிறான், இந்த நாடகமெல்லாம் வேண்டாம் உங்களின் வயதுக்கு இந்த ஏமாற்று வேலை அழகல்ல.

மேலும், மேலும் தமிழின துரோகியாகி கொண்டே செல்லாதிர்கள். மக்கள் எல்லாம் இப்ப புத்திசாலிகள் உங்கள் காலம் போல் இல்லை. யார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.3 Comments:

Anonymous said...

இன்னக்கி காலயில திடீர்னு அதிரடி நகைச்சுவை ட்ராமா ஒன்ன மொதல்வர் அண்ணா சமாதியில ஆரம்பிச்சிருக்காரு.. அப்படியே உளியின் ஓசை 2 எடுத்டுரலாம் அம்புட்டு அழுகாச்சி.. ஒரு பக்கம் கனிமொழி மினரல் வாட்டர் பாட்டில் மூடியில தண்ணி கொடுக்குராரு அதயும் அவரு வேணாம்ங்ராரு.. அப்புறம் கையில தொட்டு ஒதட்டுல தடவிக்குராரு.. இது கொஞ்சம் இல்ல நெறயவே ஓவர்னு தெரியலயா? காலவறையற்ற 3 மணி நேர உண்ணாவிரதம்? என்ன கர்மமோ.. ஓட்டுக்காக இப்படியா?? நாறுது தாங்க முடியல

கழக கண்மனிகள் தலைவரோட நோக்கம் புரியாம அங்கங்க உண்ணாவிரதம் இருந்து மொதல்வர வெறுப்பேத்தீட்டானுவ..அவ்ரு நோகம் என்னன்னா எல்லாபயலும் இருந்தா தனக்கு கெடைக்கிற பப்ளிசிட்டி போயிரும்னு நான் மட்டும் இருக்கிரேன் (அதுவும் 3 மணி நேரம் அது வேற விஷயம்).. ஸ்பெக்ட்ரம் 60000 கோடி ஊழல 1 நொடியில தீத்து வச்ச சாணக்கியர் அல்லவா? அதன் 8 மணிக்கு உண்ணாவிரதம் 10 மணிக்கு ராஜபக்சே அறிவிப்பு.. ராஜப்க்சேக்கு தெரியும் மீண்டும் காங்கிரஸ் வந்தா அவருக்கு உதவின்னு.. அதுக்காக திட்டமிட்ட நாடகம்... தாத்தாவின் நகைச்சுவை நடிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இவரு இருந்ததாலதான் போர் நிறுத்தம்னா இத்தினி நாள் இன்னா செஞ்சின்டு இருந்தாரு?? மந்திரி பதவி பேரனுக்கு வேணும்ன் ஒடனே ப்ளேன்ல போய் கடுங்குளிர்ல டெல்லியில ரூம் போட்டு அழுது அடம்பிடிச்சி வாங்குனார் இல்ல..இப்ப எதுக்கு எலெக்சன் வர்ர வரைக்கும் வெயிட்டிங்?? மேச் ஃபிக்சிங் அப்படின்னு கேள்வி பட்டிருக்கோம்..து உண்ணாவிரத ஃபிக்சிங்... அப்பட்டமான அரசியல் நகைச்சுவை நாடகம்

Anonymous said...

அவர் வாங்கிங் சென்ற தடுக்கி விழுந்ததால் அப்படியே உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

XLmoron said...

//அது எப்படி 3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்த உங்களால் 30 வருடமாக உங்கள் திறமையினை எங்கு ஒளித்து வைக்க முடிந்தது.// என்ன செய்வது? சிங்களரும் நாங்களும் சகோதரர்கள்; இந்தியர்கள் இங்கு வர வேண்டாம் என பிரபாகரன் சொல்லி விட்டதால் இன்த திறமையை மறைத்து வைக்க வேண்டி வந்தது.