Saturday, April 11, 2009

லண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேரணி ஆரம்பம்

இந்த பேரணி ஊர்வலத்தினை நேரடி செய்தியாக கேட்க இங்கே அழுத்தவும், ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரு முக்கிய வரலாற்று திருப்பத்தினை இந்த பேரணி ஏற்படுத்தும் என நம்பலாம்.

http://www.ibctamil.net/live.asx

பிரித்தானியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கண்டனப் பேரணியில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்வர் என எதிர் பார்க்கப்படுகின்றது.
பிற்பகல் 1:00 மணியளவில் ரெம்பிள் (Temple) பகுதியில் ஆரம்பிக்கும் இந்தப் பேரணி ஹைட் பார்க்கில் (Hyde Park) நிறைவுபெற இருக்கின்றது.

கடந்த ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்றதைவிட மிக பிரமாண்டமாக இந்தப் பேரணி இடம்பெற இருப்பதாகவும், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் ஒரு இலட்சத்து 25 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இம்முறை தமிழர் தாயகத்தில் சிறீலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கை தீவிரம் பெற்றிருப்பதால் மேலும் பலர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவில இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருவதால், இன்றைய பேரணியில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பதிவின் பிரித்தானியச் செய்தியாளர் கூறுகின்றார்.

0 Comments: