Saturday, April 25, 2009

கலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வி? : தமிழச்சி

"இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது. யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிற வரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காக பல காரியங்களைச் செய்ய பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்."

தந்தை பெரியார்
("விடுதலை´ -27.01.1970)

சளைக்காமல் தொடரும் கலைஞர் புராணம். முன்னுக்குப் பின் முரணாக தகவலுடன் ஆட்டம் தொடருகிறது பகுத்தறிவு சிந்தனைவாதி மானமுள்ள கி.வீரமணி அவர்களிடம் இருந்து. எங்கே தான் போய் முடிகிறது பார்ப்போம் என்று பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

மதஆதரவு கட்சியான பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைய கூடாதாம். அதற்காக தி.மு.க. வை ஆதரிக்க வேண்டுமாம். கலைஞரை பதவியில் அமர்த்த வேண்டுமாம். கலைஞர் ஆதரிப்பதால் காங்கிரசையும் ஆதரிக்க வேண்டுமாம். இப்படியே அடுக்கடுக்காக கோரிக்கைகள் தினம் தினம் கொட்டிக் கொண்டிருக்கிறார் மானமுள்ளவர்.

தள்ளாடும் வயதில் மூத்திரப்பையை பிடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று சொற்பொழிவு செய்த பெரியாரின் நோக்கத்திற்கும், கலைஞரின் பதவி ஆசைக்கும் வித்தியாசம் இருப்பதை மானமுள்ளரு அறியாததா? காங்கிரசை ஆதரிப்பது என்பது பெரியாரியத்திற்கு எதிரானது இல்லையா? காமராசரை பெரியார் ஆதரித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இன்றைய நிலையில் சோனியாவை ஆதரிக்க மானமுள்ள கி.வீரமணியிடம் என்ன காரணம் இருக்கிறது?

இதோ தந்தை பெரியார் கேட்கிறார் :

"காங்கிரஸ் ஆட்சி பார்ப்பனர்களின் அடிமைக்கட்சி! பார்ப்பனரே தலைவர். அக்கட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பாதிப் பார்ப்பனர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவரின் பேச்சை இங்குள்ளவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதுபோலவே மற்றக் கட்சிகளும், இவற்றையெல்லாம் விரும்பாத மற்றக் கட்சிகளின் நிலை என்ன? ஏன் செய்யவில்லை?

சாதிக்கு ஆதாரமாக உள்ள சட்டத்தைக் கொளுத்தினால் சிறை என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறான். நீ அச்சட்டத்தை ஒழித்துவிடுகிறேன் என்று இங்குள்ள மக்களிடம் கூறிவிட்டுச் சட்டசபைக்குப் போய் அச்சட்டத்திற்கு அடங்கி நடக்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்! உனக்கு மானமில்லை. என்ன செய்கிறது உன் முன்னேற்றம்? இதுதான் உன் முன்னேற்றமா? உன்னையும் என்னையும் சேர்த்துத்தானே சூத்திரன் தேவடியாள் மகன் என்று எழுதி வைத்துக் கொண்டு இருக்கிறான்? உன்னைவிட்டு எங்களை மட்டும் சொன்னாலுங்கூட பரவாயில்லையே என்று சொல்லலாம். ரு150- அய் பொறுக்கித்தின்னப் போவதல்லாமல் வேறு என்ன? அங்கே என்ன பருத்திக் கொட்டையிலிருக்கும் பஞ்சு எடுக்கவா போனாய்? எதற்காகப் போனாய்? 1000, 1500- ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சூத்திரப் பட்டம் போகாமல் இருக்கிறது.


14-12-1958 அன்று பெரியார் கேட்டது (´விடுதலை´ - 25-12-1958)

மானங்கெட்ட பொழப்பு. முடியாத வயதிலும் பதவியின் பெயரால் பொறுக்கித்தின்ன அலையும் கூட்டத்திற்கு வக்கனையாக வக்காலத்து.

"எனக்கு இந்த ஜனநாயகத்தில், சட்டத்தில் நம்பிக்கையில்லை" என்று சாகும் வரையில் அரசியல் கூட்டத்தை வெறுத்த தந்தை பெரியாரின் வழியில் வந்தவர் இன்று ஜனநாயகத்தின் மூலமே தீர்வு கிடைக்கும் என்று பரப்புரையை பப்பரமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு தடவைக்கு மேல் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற சட்டங்கள் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் செயல்களில் இருக்கிறது. நம் நாட்டில் தான் பொறுத்தின்னவன் சாகும் வரையில் பொறுக்கித் தின்றுக் கொண்டே இருக்கலாம் என்கிறார்கள். மானமில்லை, வெட்கமில்லை, ரோஷமில்லை, கள் குடித்தவன் உளறல்கள் போன்று தேர்தல் அறிக்கைகளில் தினம் தினம் பல்டி அடித்துக் கொண்டு செயல்படுவதில், "தீவிரமாக உங்களுக்கு சளைத்தவன் இல்லை நான்" என்பதுபோல் கலைஞர் சூப்பர் பல்டி அடிக்கிறார்.

நேற்று பிரபாகனை பிடித்தால் கவுரமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார். இன்று பிரபாகரன் எனது நண்பர் என்கிறார். கலைஞர் தன் நண்பர்களுக்கு ஆப்பு வைத்து பழகிப்போய்விட்டதை தான் பிரபாகரன் விஷயத்திலும் நாசூக்காக நண்பன் முறையை உபயோகப்படுத்துகிறாரோ?

ஆனால், இந்த கூத்துக்களையும் கேட்க ஆட்கள் இருக்கிறார்கள் தான். நடத்துங்க ஆட்டத்தை மானமுள்ள கி.வீரமணி அவர்களே. அப்படியே தந்தை பெரியார் வார்த்தைகளுக்கு எதிரான செயல்படும் உங்கள் யோக்கியதையை தி.க.விற்குள் முழுவதாக திணிக்காமல் உங்களுடைய சொந்தக் கருத்தாக சொல்லிக் கொள்ளுங்கள். அதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் பெரியாரிய போர்வை போர்த்திக் கொண்டு பெரியார் வழியை கடைப்பிடிப்பதாக போலி பாசாங்குத்தனமும், அரசியல்வாதிகளிடம் பொறுக்கித்தின்ன பெரியாரியத்தை ஒழித்துக் கட்ட முயலாதீர்கள் என்று தான் எச்சரிக்கிறோம்.

தமிழச்சி
20/04/2009

நன்றி : http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1181

1 Comment:

சிக்கிமுக்கி said...

தந்தை பெரியாரின் பெயரில் இயங்கிக் கொண்டு அப்பெருமகனாரின் பெயருக்குக்களங்கம் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள இப் பச்சோந்திகள் திருந்தப் போவதில்லை.