Saturday, April 11, 2009

பெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்டு அழகு பார்க்கும் திராவிடர்கள்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அதை முள்வேலியாக போட்டுள்ள வீரமணி, கருணாநிதி மற்றும் திராவிட கழகங்களுக்கு இன்று பெரியாரி மட்டும் நேரில் வந்தால் நீங்கள் அடிக்கும் இந்த கூத்தை கண்டு ஓடியே போய்விடுவார். பெரியார் பயந்தவரல்ல உங்களை எல்லாம் நாக்கை புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்டு இருக்கும் இடம் தெரியாமல் பண்ணியிருப்பார்.

எந்த அடிமைதனத்திலிருந்து தமிழன் விடுதலை பெற வேண்டும் பெரியார் போரடினாரோ மீண்டும் அதே அடிமைதனத்தினையே விரும்பி செல்லும் வீரமணி மற்றும் கருணாநிதியினை என்ன செய்வது. தொண்டர்கள் அனைவரும் முட்டாள்கள் என நினைக்கும் இருவருக்கும் தொண்டர்களும், மக்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்.

எனக்கு தெரிந்த வரை வீரமணியின் இந்த அடிவருடி கொள்கை எந்த மாவட்ட செயலாளருக்கும், தொண்டருக்கும் விருப்பமே கிடையாது. 90% சதவீதம் வீரமணியின் இந்த கருணாநிதி எடுபிடி வேலைக்கு எதிர்ப்பே தெரிவிக்கின்றனர். ஆனால் தலைவர் திருந்துவார் என எதிர் பார்க்கின்றனர் அதனால் எதுவும் வெளியில் கூறமுடியாமல் மவுனியாக உள்ளனர். ஒரு அளவுக்கு மேல் எதையும் பொத்தி வைக்க முடியாது. இது ஒரு புரட்சியாகி வீரமணி தலைமையில் இருந்து தூக்கும் அளவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

புதிய உலகு அமைப்போம்.

அடிவருடிகள், வால் பிடிப்பவர்களையும் புறந்தள்ளுவோம். தி.க தொண்டர்களே முதலில் கருணாநிதியின் அடிமைதனத்தில் மாட்டுப்பட்டுள்ள தலைவரை காப்போம், தட்டி கேட்க ஆளில்லா அரசனும் ஆண்டியாவான்.

2 Comments:

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு மூளை வளர்ச்சி குறைவா?
வீரமணியை திட்டியே ஆகவெண்டும் என்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது.

பழுத்த மரத்தில் தான் கல்லடி படும்.வீரமணியை திட்டியவர்கள் பின்னால் அதர்க்காக வருத்தப்பட்டு திருந்தியுள்ளார்கள்.

நீங்கள் எப்படியோ எனக்கு தெரியாது?
உங்களின்ன் பேச்சை தி.க.வினரும் நடுநிலையாலரும் கேட்கப்போவதில்லை.

ஏனெனில் உங்களிடம் காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை.

நிலவு பாட்டு said...

/* உங்களுக்கு மூளை வளர்ச்சி குறைவா? */
நன்றி நண்பரே, மூளை வளர்ச்சி குறைவாக இருந்திருந்தால் நானும் உங்களை போல் கலைஞருக்கு ஒரு ஓ போட்டுட்டு போயிருப்பேன் நண்பரே. ஒரு உண்மை தமிழனாக என்னால் நீங்கள் பண்ணூம் கூத்தினை பார்த்து கொண்டிருக்க சொல்கிறீர்களா.

காழ்ப்புணர்வு எல்லாம் ஒன்றும் இல்லை, வீரமணியை பல முறை பாராட்டியுள்ளவன் என்ற முறையில் இன்று அவரின் தவறினை சுட்டி காட்டும் பொறுப்பும் உள்ளது.