Wednesday, April 29, 2009

'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்கர்கள்

கோவை: ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸார் ஓட்டு கேட்க வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்ற ஸ்டிக்கர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் நேற்று சிறிதும், பெரிதுமாக ஏராளமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரஸ் ஓட்டு கேட்டு வீட்டிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரபு போட்டியிடுகிறார். அவருக்கு இங்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவை தங்கம் (ஜி.கே.வாசன் ஆதரவாளர்), கோவையில் தனது கட்சிக்காக வாக்கு சேகரிக்காமல், அருகில் உள்ள பொள்ளாச்சிக்குப் போய் விட்டார். அங்கு திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆதரவாளர்களும் கூட பிரபு மீது காட்டமாக உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து காங்கிரஸுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பிரபு வட்டாரம் கலங்கிப் போயுள்ளது.

நன்றி http://www.mdmkonline.com/news/latest/chappal_to_congress.html

4 Comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Anonymous said...

எப்படி மதிமுக காரங்க இத வெக்கமில்லாம அதுவும் கோயம்புத்துருலயே பண்ணுனாங்கன்னு தெரியலையே...அவங்க பிரபு காங் என்பதற்காக எதிர்க்கிறார்கள்... ஏன்னா காங் ஈழத்துக்கு எதிரானது... அது சரி அவங்க ஆதரிக்கும் அந்த தொகுதியின் மார்க்சிஸ்டு கட்சி ஈழத்துக்கு எதிரானதுதான்... அதாவது ஒன்றுபட்ட இல்ங்கைக்குள் ஒரு மாநிலமாகத்தான் ஈழம் இருக்க வேண்டும் எனச் சொஃல்பவர்கள்... இப்போ என்ன செய்வீங்க•.. சிபிஎம் ஐ ஆதரிச்சா ஈழத்த எதிர்க்கணும்... ஈழத் த ஆதரிச்சா உங்க கூட்டணிய நீங்களே தோற்கடிக்கணும்...

நிலவு பாட்டு said...

/* அது சரி அவங்க ஆதரிக்கும் அந்த தொகுதியின் மார்க்சிஸ்டு கட்சி ஈழத்துக்கு எதிரானதுதான்... அதாவது ஒன்றுபட்ட இல்ங்கைக்குள் ஒரு மாநிலமாகத்தான் ஈழம் இருக்க வேண்டும் எனச் சொஃல்பவர்கள்... இப்போ என்ன செய்வீங்க•.. சிபிஎம் ஐ ஆதரிச்சா ஈழத்த எதிர்க்கணும்... ஈழத் த ஆதரிச்சா உங்க கூட்டணிய நீங்களே தோற்கடிக்கணும்... */

அனானி நண்பா, அதுதான் தமிழன் தலைவிதி என்கிறது, நீயும் நானும் தமிழ்தான் நீ கொலையை ஆதரிக்கற, நான் ஆதரிக்கவில்லை. எங்கும் இந்த புல்லுருவிகள் இருக்கத்தான் செய்யும்.

vanathy said...

ஸ்ரீலங்கா அரசு ஆயுதப்போருக்கு மட்டுமின்றி பிரச்சாரப் போருக்கும் மிகப் பெருந்தொகையான பணம் செலவழிக்கிறது.
தான் செய்யும் அக்கிரமங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவும் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் எல்லாவிதமான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் அதன் ஒரு பகுதிதான் இது
சமீபத்தில் தயா மாஸ்டர் அளித்த பேட்டி என்று இந்திய ஊடகத்தில் வந்ததை பற்றி சில பதிவர்கள் போட்டிருந்தார்கள்.
முதலில் தயா மாஸ்டர் சரணடையவில்லை.அவர் கைது செய்யப் பட்டிருந்தார்.
அவர் போராளி இல்லை (போராளிகள் சயனைட்டுகுப்பிகள் வைத்திருப்பார்கள்.) இவர்
இரு தடவை ஹார்ட் அட்டாக் வந்த நோயாளி. ஊடகத் துறையில் முன்பு இருந்தவர்.
ஸ்ரீலங்கா அரசின் துப்பாக்கி முனையில் இருக்கும் போது அவர் இப்படித்தானே பேசுவார்.வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய அரசு மட்டுமல்ல இந்திய ஊடகங்களும் இலங்கை அரசுக்கு சார்பாக நடந்து இலங்கையின் பிரச்சாரப் போருக்கு உதவுகிறார்கள்.
இதே ஊடகங்கள் வன்னியில் இலங்கை அரசு செய்யும் குண்டு வீச்சு மற்றைய அட்டூழியங்கள் பற்றி வாய் திறக்காமல் அங்கு நடக்கும் இனப்படுகொலையை இந்திய மக்களிடமிருந்து இருட்டடிப்பு செய்வதில் பங்கு வகிக்கின்றன.
-வானதி