Thursday, April 9, 2009

தமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் போது..

அய்யா வீரமணி உங்கள் மேல் ஒரு மதிப்பும், மரியாதையும் இருந்தது ஆனால் இன்று கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழுனர்வாளர்களின் கோபம், விரக்தி உங்கள் மேலும் உள்ளது.

நீங்கள் இழைக்கும் வரலாற்று பிழை இன்னும் கருணாநிதியை நம்புவதுதான், அது உங்களின் சுயநலத்திற்காகவா அல்லது நட்புக்காகவா. கருணாநிதி பெரிய தமிழின துரோகி என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இன்னமும் நீங்கள் அவருடைய வாலை பிடித்து கொண்டுதான் அலைவேன் என்பது எந்த பகுத்தறிவை சார்ந்தது அய்யா.

மானமிகு அய்யா, தமிழனின் மானத்தை அடகு வைத்து இன்று தமிழின கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ், கருணாநிதிக்கு தாளமிடுவதேன்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்ததற்காக கருணாநிதி பண்ணுவதெல்லாம் சரி என்று சொல்வது மூடப்பழக்கத்தை விட மோசமானது.

தயவு செய்து மாறுங்கள்.

நீங்கள் அடிக்கும் தாளத்தில்தான் கருணாநிதி இந்த ஆட்டம் ஆடுகிறார்.

9 Comments:

Anonymous said...

வீரமணியின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். எரிகிற தீயில் எண்ணை ஊற்றி கருணாநிதியை வளர்க்க நினைக்கிறார் இவர். தி.க என்பது வீரமணியின் சொத்தல்ல.

எந்த மனசாட்சி உள்ள தி.க காரனாவது வீரமணி செய்வது சரி என்று சொல்லட்டும் என் காதை அறுத்து கீழே வைக்கிறேன்.

Anonymous said...

வீரமணியை நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

அப்பாவி said...

\\ஆனால் இன்னமும் நீங்கள் அவருடைய வாலை பிடித்து கொண்டுதான் அலைவேன் என்பது எந்த பகுத்தறிவை சார்ந்தது அய்யா.

மானமிகு அய்யா, தமிழனின் மானத்தை அடகு வைத்து இன்று தமிழின கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ், கருணாநிதிக்கு தாளமிடுவதேன்.//

அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? ஆட்சி மாறினால் அவரும் மாறிவிடப்போகிறார்..

இந்த கேனையைஎல்லாம் நம்பிக்கொண்டு இருக்கீங்களே.. உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

Anonymous said...

வீரமணியா? யாரு அவரு? ஓ பெரியார் நிறுவனங்களின் அந்த அதிபதியா? இவரு முதுக அவரு சொறிய, அவரு முதுக இவரு சொறிய கொண்டாடம். மானங்கெட்டவர்கள்.

Anonymous said...

நண்பரே பாடு தமிழனே இல்லை .

தெலுகு இன சாதி இல் பிறந்தவன்.
இவனுக்கு தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன ?

தமிழ் ஓவியா said...

//பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்ததற்காக கருணாநிதி பண்ணுவதெல்லாம் சரி என்று சொல்வது மூடப்பழக்கத்தை விட மோசமானது.//

கலைஞரை தி.க. எதிர்ப்பதும் அதரிப்பதும் கொள்கை அடிப்படையிலேயே.

எப்போதையும் விட இப்போது கலைஞரின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது .

ஈழப்பிரச்சனையில் கலைஞர் நடந்து கொண்ட விதமும், மற்ரவர்கள் நடந்து கொண்ட விதம் பற்ரியும் கீழ் கண்ட கட்டுரையை படியுங்கள். நடுநிலையுடன் சிந்தியுங்கள்.உண்மை புரியும்.

"ஈழத்தமிழர்ப் பிரச்சினையும் -
மக்களவைத் தேர்தலும்!

ஈழத்தமிழர்ப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல; உலகப் பிரச்சினையாக இன்று வடிவெடுத்திருக்கிறது. இனப் பிரச்சினை மட்டுமல்ல; மனித உரிமை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகவும் பேருரு எடுத்துள்ளது.

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இதில் அதிக அக்கறையும், கவலையும், பாத்தியதையும் பட்டுள்ள தமிழ்நாட்டிலோ, தமிழர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, தேர்தல் இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர்.

அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சரி, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? மாநில அரசிடமும், மத்திய அரசிடமும்தானே கோரிக்கைகளை வைக்கிறார்கள்?

இந்த நிலையில், மாநில அரசு இப்பிரச்சினையில் சில முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது, கட்சி மாச்சரியங்களைக் கடந்து ஒத்துழைத்தி ருக்கவேண்டும்.

ஆனால், அப்படியான அணுகுமுறைகளை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கடை பிடித்ததுண்டா?

அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; பிரதமரைச் சந்திக்கச் செல்லும் குழுவில் இடம்பெற மறுப்பு. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது வெளிநடப்பு, இத்தியாதி - இத்தியாதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சில அரசியல் கட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்ட கட்சிகள் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க தகுதி உள்ளவைதானா - உரிமை உடையவைதானா என்பது அர்த்தமிக்க வினாக்களாகும்.

எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கிறது என்றால் பிரதமர், தமிழக முதல்வர் உருவப்படங்களை எரிக்கும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டு விட்டது.

இதன் விளைவு என்னவாகும்? ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் கடுமையான அளவுக்குப் பிளவு படவும், ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொள்ளவுமான ஒரு நிலையைல்லவா ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, அவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க முடியும்?

இலங்கை அரசு தமக்குச் சாதகமாக இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கூறுவதைக் கவனியுங்கள் என்று அவர்கள் கூறும் அளவுக்கு நிலைமையைக் கொச்சைப்படுத்தியவர்கள் தமிழர்களின் மத்தியில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அல்லவா?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் சார்பற்றது என்றுதானே தொடக்கத்தில் கூறப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திரு மாவளவன் தொடக்கத்திலேயே அதனைத் தெளிவுபடுத்தினாரே - இப்பொழுது அதன் நிலை என்ன? தேர்தலில் ஆளும் தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு சென்று விட்டதே!

இதில் என்ன வேடிக்கையான துன்பம் என்றால் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சோதரிபோல நடந்துகொண்டவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அல்லவா!

ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லுவதே - விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டவர்தானே ஜெயலலிதா?

இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?

இது அக்கட்சிகளின் நேர்மையற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும். ஈழத் தமிழர்ப் பிரச்சினையைக்கூட தேர்தல் இலாபத்துக்குத்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற உண்மையும், கோணிப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்ததுபோல வெளிவந்துவிட்டதா இல்லையா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதனைக் கவனமுடன் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அக்கறை உள்ள நமது வேண்டுகோளாகும்.

------------------"விடுதலை" தலையங்கம் 10-4-2009

ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானம் இழந்துவிடாதீர்கள்.

நிலவு பாட்டு said...

நன்றி தமிழ் ஓவியா அவர்களே, ஜெ பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான், நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், கருணாநிதிதான் இந்த பிரச்சினையை அரசியலாக்குகிறார். அவர் தலைமையில் அனைத்து நடக்க வேண்டுமாம், ஆனால் இவரோ தந்தி அடிப்பதுடன் நின்றி விடுகிறார். அய்யா பழ.நெடுமாறன் தலைமை ஏன் போராடகூடாது.

கருணாநிதியை எதிர்ப்பதற்கும் முன் எவ்வளவோ பொறுமையாக சென்றோம், இன்று திருந்தி விடுவார் இன்று இன்று என்று நாட்கள் சென்றதே தவிர இவர் திருந்தவேயில்லை. வீரமணியும் இப்போது அதே நிலையில். நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் சிந்தித்து பாருங்கள். முடிந்தால் வீரமணியிடம் கூறுங்கள், இது ஆரம்பமே, வீரமணி மாறாவிடில் தலைமை மாற்றப்படும்.

அது சரி(18185106603874041862) said...

//
மானமிகு அய்யா, தமிழனின் மானத்தை அடகு வைத்து இன்று தமிழின கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ், கருணாநிதிக்கு தாளமிடுவதேன்.
//

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, வீரமணியைப் பற்றி புரிந்து கொண்டு, அதன் பின்னரும், உங்களால் வீரமணியை மானமிகு அய்யா என்று எப்படி அழைக்க முடிகிறது??

இது தான் எனக்கு புரியவில்லை!

அது சரி(18185106603874041862) said...

//
எப்போதையும் விட இப்போது கலைஞரின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது
//

அப்படியா?? தினந்தோறும் மின்வெட்டுத் துறையால் அவதிப்பட்ட மக்களிடமும், மின்வெட்டு பிரச்சினையால் வேலையிழந்த கோவை, திருப்பூர் தொழிலாளர்களிடமும் கேட்டால் வேறு மாதிரி சொல்கிறார்களே??

//
இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், இதில் அதிக அக்கறையும், கவலையும், பாத்தியதையும் பட்டுள்ள தமிழ்நாட்டிலோ, தமிழர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு, தேர்தல் இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர்.
//

இது உண்மை தான்...அதில் தி.மு.கவும் ஒன்று...அண்ணன் செத்தா என்ன, திண்ணை காலி என்பது தானே தி.மு.க வின் அணுகுமுறை??

//
அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் சரி, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? மாநில அரசிடமும், மத்திய அரசிடமும்தானே கோரிக்கைகளை வைக்கிறார்கள்?

இந்த நிலையில், மாநில அரசு இப்பிரச்சினையில் சில முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் போது, கட்சி மாச்சரியங்களைக் கடந்து ஒத்துழைத்தி ருக்கவேண்டும்.
//

அந்த மாநில அரசே தி.மு.க அரசு தான்...அந்த மத்திய அரசே தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.கவின் கட்டுப்பாட்டில் தானே இயங்குகிறது??? ஒன்று கூட விடாமல், நாற்பது தொகுதிகளையும் அள்ளிக் கொடுத்தார்களே??

கருணாநிதி அறிக்கை விடுகிறார்...நான் அடிமை...ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு என்ன செய்ய முடியும் என்று...இதைச் சொல்ல அவருக்கு நா கூசவில்லை??

மத்திய அரசு, மாநில அரசு என்று எல்லாவற்றையும் ஆண்டு கொண்டு, ஒரு துரும்பை கூட நகர்த்த மனமில்லாத, துப்பில்லாத இவரை கொண்டாட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்???

//
அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; பிரதமரைச் சந்திக்கச் செல்லும் குழுவில் இடம்பெற மறுப்பு. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது வெளிநடப்பு, இத்தியாதி - இத்தியாதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சில அரசியல் கட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நடந்துகொண்ட கட்சிகள் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க தகுதி உள்ளவைதானா - உரிமை உடையவைதானா என்பது அர்த்தமிக்க வினாக்களாகும்.
//

அது என்னவோ உண்மை தான்.. கருணாநிதி& ஃபேமிலி நிறுவனத்திற்கும், ஜெயா&ஃப்ரண்ட்ஸ் நிறுவனத்திற்கும் இதில் பெரிய வித்தியாசமில்லை....நீங்கள் பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள்...பிரச்சினை ஜெயா கட்சிக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதல்ல...அனைத்து அதிகாரமும் வைத்துக் கொண்டு கருணாநிதி நடத்தும் நாடகங்கள் தான் இங்கு பிரச்சினையே...

//
எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கிறது என்றால் பிரதமர், தமிழக முதல்வர் உருவப்படங்களை எரிக்கும் அளவுக்குத் திசை திருப்பப்பட்டு விட்டது.
//

உயிருள்ள மக்களே எரிக்கப்படும் போது, கொடும்பாவி எரிப்பு குறித்து இதுவரை காங்கிரஸ் என்னும் ஆளில்லா கட்சி மட்டுமே போராடியது...நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது இப்பொழுது தி.க வும், தி.மு.கவும் சேர்ந்து இருப்பதாக தெரிகிறது... வாழ்க உங்கள் கூட்டணி!

//
இதில் என்ன வேடிக்கையான துன்பம் என்றால் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சோதரிபோல நடந்துகொண்டவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா அல்லவா!
//

நீங்கள் எழுதியிருப்பதிலேயே உண்மையான விஷயம் இது தான்...ராஜ பக்சேவின் தமிழ்நாட்டு தூதுவராக ஜெயா & ஃப்ரண்ட்ஸ் செயல்படுவது உண்மை தான்!

//
ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லுவதே - விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டவர்தானே ஜெயலலிதா?
//

அதே சமயம், ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் சகோதர சண்டை என்று அறிக்கை விட்டு, மக்களின் உணர்களை திசை திருப்ப கருணாநிதி முயன்றாரா இல்லையா??

//
இந்த நிலையில், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டு (கூட்டணியில்) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று முழக்கம் செய்வதில் பொருள் இருக்க முடியுமா?
//

ராஜீவை கொன்றவர்களை மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று எல்லாருடைய படுகொலையையும் நியாயப்படுத்திய காங்கிரஸின் தலைமை கூட்டணிக்கு நல்ல அரசு என்று சான்றிதழ் கொடுத்தவர் வீரமணி அல்லவா??

இதில் மட்டும் என்ன பொருள் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்??

//
இது அக்கட்சிகளின் நேர்மையற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தும். ஈழத் தமிழர்ப் பிரச்சினையைக்கூட தேர்தல் இலாபத்துக்குத்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற உண்மையும், கோணிப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்ததுபோல வெளிவந்துவிட்டதா இல்லையா?
//

ஆமாம்...வெளியில் வந்தது ஜெயாவின் சிங்களப் பூனை மட்டுமல்ல, கருணாநிதியின் பதவி ஆசை பிடித்த பச்சோந்தியும் கூடத்தான்...

//
தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதனைக் கவனமுடன் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அக்கறை உள்ள நமது வேண்டுகோளாகும்.
//

இதுவே எனது கோரிக்கையும்....தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தி.க. போன்ற விஷங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்!