Sunday, April 26, 2009

கொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போடும் திட்டம்

இந்த கொடுங்கோலன் ஆட்சியில் இது வரை தமிழினம் காணாத அழிவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது, கையலாகதவனுக்கு ஏன் இந்த முதல்வர் பதவி. நீ கை இருந்தும் இன்னும் பிச்சை எடுக்கும் மூடன். காங்கிரஸ் என்ற கொலைகாரர்களும் நீயும் ஆட்சி நடத்துவதற்க்காக எத்தனை தமிழன் வேண்டுமானாலும் கொல்லலாம் என்றி நினைக்கும் பேய்களே நீங்கள் கண்டிப்பாக குற்றவாளி கூண்டில் ஒரு நாள் ஏற்றத்தான் படுவீர்கள். நன்றி கெட்ட மிருகங்களே உங்களுக்காக 40 சீட்டையும் கொடுத்த நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா எங்களுக்கு நல்ல பாடம் புகட்டினீர்களே மிருகங்களே.

நீங்களெல்லாம் மனிதர்களா. நாங்கள் யார்க்கு என்ன கொடுமை செய்தோம். காங்கிரஸ், திமுக மிருகங்களா. தைரியமான ஒரு மான தமிழ் வீரனாக இருந்தால் இன்றே நீ உன் ஆட்சியை ராஜினாமா செய்து தமிழனை காப்பாற்ற கை கொடுக்க வேண்டும்.

துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு தே.பாதுகாப்பு சட்டம் பயன்படுத்த கருணாநிதி முயற்சிப்பார் போலும். நண்பர் SREESHARAN (http://sreesharan.blogspot.com/2009/04/13.html)வலைப்பதிவிலிருந்து இந்த செய்தி. கருணாநிதியினை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

நண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளதுதுண்டு பிரசுரம்

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.

1 Comment:

தீபக் வாசுதேவன் said...

நாம் என்ன செய்ய முடியும்? 'ராஜ தந்திரமாக' தனது குடும்பத்து உறுப்பினர் அனைவரையும் அரசியலில் அமரச் செய்து, 500 கிலோமீட்டர் தூரத்திலிருந்து, டெல்லியை ஆளும் கலைஞர் கருணாநிதி. 356 சட்டம் பயன்படுத்தினால் தான் சரியாக வரும்.