Saturday, January 24, 2009

சொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(விளக்கப்படம்) : நக்கீரன்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளை தாக்கிக்கொண்டே முன்னேறிச்சென்றது ராணுவம். பின்வாங்கிக்கொண்டே வந்தனர் புலிகள்.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு அணைக்கட்டின் பக்கம் ராணுவத்தினர் வந்த போது புலிகள் அணையை உடைத்துவிட்டனர்.

பீறிட்டெழுந்த தண்ணீரில் சிங்களப்படையினர் திணறியிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திணறலில் இறந்துள்ளனர்.

இன்று இரவு இந்த தாக்குதல் முடிந்துள்ளதால் இதுவரை 500 சிங்களப்படையின் சடலங்களை மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தண்ணீரில் சிங்களப்படையின் ஆயுதங்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரைவில் வெற்றி செய்தி வரும் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.சொன்னது போல்வே இன்று செய்து முடித்துள்ளனர் புலிகள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2434

நன்றி : நக்கீரன்

3 Comments:

"உழவன்" "Uzhavan" said...

Appadiya??

Anonymous said...

அப்படித்தான் நண்பரே.

Anonymous said...

எவன் நான் தமிழன் நான் தமிழன் என்டு அடிவயித்திலிருந்து கத்துகிறானோ அவனுக்கு தமிழ் அபிமானம் துளியும் கிடையாது.

இன்னுமொரு இனத்தை அவமதிப்பதால் உனது இனததை எல்லோரும் தூக்கித்தலையில் வைக்கப்போவது இல்லை.எப்பொழுது நீ இன்னுமொரு இனத்தை மதிக்கிறாயோ அவர்களின் சிறப்புக்களை மெச்சுகிறாயோ அப்பொழுதுதான் உன் இனத்தின் சிறப்பு மற்றவர்களால் பேசப்படும்.

இனக்கலவரம் நடந்தது நூலகம் எரிந்தது இந்திய அமைதிப்படை தமிழ்ப்பெண்களை மானபங்கப்படுத்தியது. பதிலுக்கு நீங்கள் செய்தது என்ன முஸ்லிம்களை கொள்ளை அடித்தது நாட்டைவிட்டுத்துரத்தியது பஸ்களுக்கு குண்டுவைத்து அப்பாவிச்சிங்களமக்களளை கொத்துக்கொத்தாக கொன்றது கரையோர சிங்கள விவசாய கிராமங்களை கொள்ளையடித்தது பள்ளிவாசல் பூந்து பொங்கல் வைத்தது இவைதான்.இவ்வாறு செய்தவர்களைத்தான் நீங்கள் தலைவர்கள் எனவும் உங்கள் விடிவுக்கான பாதைக்கு வழிகாட்டுபவர்களாகவும் பார்க்கிறீர்;கள்.அவர்கள் உங்களை அழைத்துச்சென்ற பாதைகளை திரும்பிப்பாரத்தால் பிணங்களையையும் பதுங்கு குழிகளையும் தான் பார்கிறீர்களே தவிர விடிவுக்கான அவர்களது பயணம் முடிந்த மாதிரித்தெரியவில்லை.

உங்களுக்கு அடிமனத்தில் இருக்கிறது இன வெறி.சிங்களவரை அடிக்கும் எவரும் உங்களுக்கு அவதாரம் தான். நாளை புலிகள் இல்லாத நாளில் டக்ளஸ் வேவானந்தாவோ பிள்ளையானோ இதைசெய்தால் நீங்கள் அவர்களின் குசுவையும் குடிக்கத்தான் போகிறீர்கள். உங்களுக்கு தேவை சிங்களவனை அடிக்க ஒரு கூட்டம்.விறுவிறுப்பான சினிமாப்படம் போல அடிக்கடி வரும் போதைதரும் சண்டைக்காட்சிகளும் மலிவான வீரவசனங்களும் தான்.

சிங்கள அரசாங்கங்கள் இனவெறியுடையவர்கள்.காலம்காலமாக நீரூபிக்க பட்ட உண்மை இது.இவர்களைவிட நூறுமடங்கு அருவருப்பான முகம் உடையவர்கள் விடுதலைப்புலிகள்.தங்களுடைய கட்டுப்பாட்டை இழக்கவிரும்பாமல் ராணுவத்தை எதிர்பதால் மட்டுமே இவர்கள் புனிதமடைந்துவிட முடியாது.இதைச்சொல்வதால் என்னை தமிழின விரோதி என்பாயானால் சோல்லி விட்டுப்போ.. சிங்கள ரானுவத்தால் குடும்பத்தையும் விடுதலை புலிகளால் சுயத்தையும் சொத்துக்களையும் இழந்தவன் நான்.எஞ்சியிருக்கிற சில தமிழர்களுக்காக இதை கேட்டுவிட்டுப்போகிறேன்.