Sunday, January 25, 2009

சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும்

கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது.


இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது.


ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது குறித்த தகவல்களை வெளியிடவில்லையென்கிற யதார்த்தம் உணரப்படவில்லை.


சிங்களம் தொடுக்கும் உளவியல் பரப்புரைச் சமரின் ஒரு அங்கமாகவே, பூதாகாரமாக்கப்பட்ட, ஆதாரமற்ற இத் தகவல்களை நோக்க வேண்டும்.5000 இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளரென்பது போன்றும், கிளிநொச்சியை நோக்கி விடுதலைப் புலிகள் வேகமாக முன்னோக்கி நகர்வதாகவும், அரியாலை மற்றும் மண்டைதீவில் மோதல்கள் நடைபெறுவது போல பல வதந்திகள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.


அண்மையில் மகிந்தர் வெளியிட்ட அவசர அழைப்புச் செய்தியை நாம் உற்று நோக்க வேண்டும்.சர்வதேச மட்டத்தில், தமது நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், அதனை முறியடிப்பதனை பிரதான இலக்காக் கொண்டு, வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.


அதாவது மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு மற்றும் தூதுவரக முற்றுகைப் போராட்டங்கள், சிறிலங்கா அரசிற்கு பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. சிங்களத்தின் தமிழின அழிப்பு செயற்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழும், தமிழ் மக்களின் பங்களிப்பும் வீரியமடைகின்றது.ஆகவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அந்த வெற்றிச் செய்திகள், வெகுஜன போராட்டங்களில் ஈடுபடும் தமிழ் மக்களின் குவிமையப் படுத்தப்பட்ட சிந்தனையை, திசைதிருப்பி விடலாம்.இம் மாற்றத்தினையும், பிறழ்வினையுமே சிங்களம் எதிர்பார்க்கிறது.


அதேவேளை தம்மால் அவிழ்த்துவிடப்பட்டுள்ள இச் செய்திகள், சிங்கள ஊடகங்களிடம் சென்றடையாதவாறு மிகச் சாதுரியமாக தடுத்துள்ளது. இச் செய்தி கேட்டு புளகாங்கித மடைந்த தமிழர்கள், இதன் போலித் தன்மையை மறுநாள் உணரும் போது, தேசியத் தலைமை மீது சோர்வும், விரக்த்தியும் அடைவார்களென்று சிங்களம் கணிப்பிடுகிறது.


ஆகவே சிங்களத்தின் உளவியல் சமர்ப் பொறிக்குள் வீழ்ந்து விடாமல், தற்போது மேற்கொண்டிருக்கும் பணியை, தொடர்ந்து தீவிரமாக முன்னகர்த்திச் செல்வதே இன விடுதலைக்கு பலம் சேர்க்கும்.ஆதலால் தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்படும் கள செய்திகளே, உண்மையானவை என்பதனை இனியாவது எமது மக்கள் புரிந்து, தெளிவு பெற வேண்டும்.
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

2 Comments:

Anonymous said...

இது போன்ற வதந்திதான் திருகோணமலை எம்.பி சம்பந்தர் சொன்னதாக சில பொறுப்பற்ற ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும்.

karu said...

neengka solvathu sarithaan