நிஜமாவே இவரு காமெடி ஏதும் பண்றாரா அல்லது தமிழன் எல்லாம் ஏமாளி நினைச்சிட்டு இருக்கிறாரா, போரை நடத்துபவனிடமே தந்தி அடிச்சு இன்னாமா நாடகம் போடறாருப்பா. உன்னோட ஒவ்வொரு அவசர தந்திக்கும் 1 லட்சம் ஓட்டுகளை இழக்க வேண்டும்.
சென்னை: இலங்கையில், நிரந்தர போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அந்நாட்டு அரசுக்கு இந்தியா இறுதி கெடு விதிக்கவேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று அவசர தந்தி அனுப்பியுள்ளார்.
முன்னதாக, நேற்று இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 476 சிறுவர்கள் உட்பட 1496 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததனர். இதனிடையே, பிரபாகரனுக்கு, அந்நாட்டு அரசு விதித்த கெடு இன்று மதியம் 12 மணிக்கு முடிவடைந்த நிலையில், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் கருணாநிதி, மன்மோகன்சிங், தலைவர் சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி ஆகியோருக்கு இன்று அவசர தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில், உச்சகட்ட போர் நடைபெற்று வருவதாகவும், இதனால், அப்பாவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, அங்கு நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கையில், போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட உலகநாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அங்கு போர்நிறுத்தம் செய்வது அவசியம் என்றும் கருணாநிதி அந்த தந்தியில் கூறியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாத பட்சத்தில், அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 21, 2009
103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி
Posted by நிலவு பாட்டு at 8:58:00 PM 2 comments
ஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்? கருணாநிதி, சோனியா, வீரமணி
இன்றைய சூழ்நிலையில் அனைவரும் தெரியும் காங்கிரஸ், திமுக கூட்டணி மாபெரும் தோல்வியினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெ எந்த வித சிறு துரும்பையும் அசைக்காமல் எளிதாக வெற்றி பெறப்போகிறார்.
காங்கிரஸ் - தமிழனை அழிப்பதற்க்கு அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு கொடுத்ததன் மூலம் எந்த உணமை தமிழனின் வாக்கும் இவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
திமுக - சுயமாக சிந்திக்க மறந்த நிலையில் இன்னும் 2 வருட ஆட்சியை மட்டுமே பற்றி கவலைப்படுகிறது. ஆனால் ஜெ வரும் போது அதற்கும் ஆப்பு வைக்கப்படும். காங்கிரஸினை அடிவருடும் இவர்களும் தமிழினத்தின் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.
வீரமணி - பகுத்தறிவு இல்லாத ஒருவர், சுயமரியாதை, மானமிகு இது எல்லாம் வெறும் பேச்சில் மட்டும்தான் என்று மக்களுக்கு புரிய வைத்தவர். இந்த வார்த்தைகளை எல்லாம் இவர்கள்தான் கண்டிபிடிச்ச மாதிரி பீலா விடுறவர்.
Posted by நிலவு பாட்டு at 8:08:00 PM 2 comments
இவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண்ணை திறந்து பாருமய்யா
பாதுகாப்பு வலயத்தில் நேற்று சிறிலங்கா படையினரின் இனஅழிப்பின் போது காயமடைந்த தமிழ்பொதுமக்களின் அவலக்குரல்கள் (வீடியோ)
வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை நேற்று அதிகாலை மனிதக் கேடயங்களாக்கி, பெரும் எடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா பிணந்தின்னிப் படையினரின் இன அழிப்புத் தாக்குதலில் சிக்குண்டு காயமடைந்த தமிழ் பொதுமக்களின் அவலக்குரல்கள் அடங்கிய கோரக் காட்சிகள் (காணொளி)
http://www.tamilwin.org/view.php?2a36QVZ4b3499E824dbSWnPeb0217GQc4d3iYpD3e0d5ZLuGce03g2hF2ccdHj0o0e
Posted by நிலவு பாட்டு at 1:07:00 PM 0 comments
40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் முடிவி
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கே ஆதரவாக எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இன்று துவக்கி உள்ளனர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிப்பதற்காக மத்திய சென்னையில் இதனை இன்று அவர்கள் துவக்கி உள்ளனர்.
.
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.எஸ். மூலமும், நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னாவை ஆதரித்து அவர்களின் எஸ்.எம்.எஸ். பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு இன்று துவக்கி வைத்தார். கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடந்த இந்த துவக்க விழாவுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு கூறியதாவது:-
தொலைக்காட்சித் துறையில் தனியார் ஆதிக்கம் காரணமாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலை உருவாகி வருகிறது. திமுக தலைமைக்கும், தனியார் டிவி நிறுவனருக்கும் இடையே உருவான குடும்பத் தகராறு காரணமாக அரசு தரப்பில் கேபிள் டிவி துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் ஏதோ சில காரணங்களால் அதில் தடங்கல் ஏற்பட்டு இன்று அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவியை நம்பி தொழில் தொடங்க வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தற்போது தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசின் இந்தப் போக்கின் காரணமாக அதிமுக கூட்டணிக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் பிரச்சாரம் செய்ய முன்வந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவிஆப்பரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுமார் 100 கோடி ரூபாய்செலவில் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. சுயநலம், சுயலாபம் காரணமாக இது தற்போது முடக்கப்படும் நிலை நீடிக்கிறது. அரசு இதை அறிவித்த போது இதனை வளர்க்க லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் வந்தனர். ஆனால் சொந்த நலன் கருதி இதை கைவிட்டு விட்டார்கள்.
எனவே திமுகவுக்கு பாடம் புகட்ட நாங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள ஜெயலலிதா வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம்.
ஒரு லட்சம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 3 லட்சம் ஊழியர்களும் இந்த ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிக்கவே மத்திய சென்னையில் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இங்கு நிச்சயம் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னா வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கம்யூனிஸ்ட் நிர்வாகி சி.மகேந்திரன் உடனிருந்தார்.
Posted by நிலவு பாட்டு at 1:05:00 PM 0 comments
Monday, April 20, 2009
லண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம் : காணொளி
http://news.bbc.co.uk/1/hi/england/8009150.stm
http://news.bbc.co.uk/1/hi/uk/8008270.stm
பிரித்தானியாவில் கடந்த 14 நாட்களாக தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திரைமறைவு முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் இன்று அதிகாலை தொடக்கம் பிரித்தானிய நாடாளுமன்ற வீதியையும் நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள சதுக்கத்தையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடியவேளையில் இடம்பெற்ற முற்றுகையின்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் நாடாளுமன்ற முன்பாக உள்ள சதுக்கத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள கம்பிவேலிகள் உடைத்து எறியப்பட்டதுடன் சதுக்கத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நுழைந்துள்ளனர்.
கடந்த 11 ஆம் நாள் தொடக்கம் மேற்படி சதுக்கத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத வகையில் சதுக்கத்தைச் சுற்றி கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 14 ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளிலும் காவல்துறையினர் இறங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்று அதிகாலை தொடக்கம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் உரக்க முழக்கமிட்டுள்ளதுடன் குறிப்பாக இன்று காலை மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் சிறிலங்கா படையினர் புகுந்து 1,000-க்கும் அதிகமான மக்களின் உயிர்களை கோரப் பலி எடுத்தமையைக் கண்டித்த வண்ணமும் உள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கமும் அனைத்துலக சமூகமும் உடன் தலையிட்டு போரை இத்துடன் நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்களால் பெருமளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அங்கிருந்து அகற்ற பிரித்தானிய காவல்துறை முயற்சித்தபோதும் காவல்துறையினரின் எதிர்ப்புக்களையும் மீறுவதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இருந்துள்ளதுடன் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தனர்.
இதனால், காவல்துறையினர் அவர்களை எதுவும் செய்யமுடியாது அந்த இடத்திலேயே அவர்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இடமளித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற அமர்வு முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இன்று மாலை அங்கிருந்து வெளியேறும்போது இந்தப் போராட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியில் ஏற்பாட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.
அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சியில் தமிழ்மக்கள் அப்பகுதிக்கு மேலும் சென்றவண்ணம் உள்ளனர்.
அதேநேரம் 14 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடரும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றபோதும் அவர் தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குளிர்கால விடுமுறை முடிந்து கடந்த மூன்று மாதங்களுக்குப்பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியநிலையில் இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தை உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் முக்கிய கவனம் எடுத்து பதிவு செய்து வருகின்றன.
Posted by நிலவு பாட்டு at 10:04:00 PM 4 comments
புதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' :ஒளிப்பதிவு
இதனை பிரசுரிக்க சொன்ன நண்பருக்கு நன்றி, உண்மையாகவே கண்ணீரை வரவழைக்கிறது. இதை பார்த்து கொண்டும் தமிழனாகிய நாம் இன்னும் நமது கையாலாகதனத்துடன் இன்னும் இருக்கவும் வேண்டுமா. தமிழர்களே இனியும் இத்தாலி கழுதைக்கு சப்பாணியாக இருக்க வேண்டுமா யோசியுங்கள்.
http://www.pathivu.com/news/1379/54/.aspx
Posted by நிலவு பாட்டு at 9:05:00 PM 0 comments
மகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி
கண்ணை கட்டி கொண்டு இருக்கும் திமுகவும், காங்கிரஸ்ம் விழிக்குமா. யோவ் கருணாநிதி இன்னும் சிறுபிள்ளை தனமா இருந்தால் தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். ஏதாவது பண்ணுய்யா. 102 வது முறையும் தந்தி அடிச்சு இன்னும் மக்களை ஏமாத்த வேண்டாமய்யா.
வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.
மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.
Posted by நிலவு பாட்டு at 5:50:00 PM 3 comments