Saturday, May 2, 2009

80 லாரிகளில் ஆயுதம், கருணாநிதி, சோனியா சம்மதத்துடன் அனுப்புகிறது இந்திய அரசு

கேட்கும் போதே ரத்தம் கொதிக்கிறது, தமிழனின் அழிவினில் வெற்றி காண நினைக்கும் இந்த கொலைகார கூட்டணி நாசமாக போகட்டும்.

தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல்

Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

நேரடி செவ்வி எதிர்பாருங்கள்

Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்த திரையுலகம் களமிறங்கியது

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்ன போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா.

அப்போது அவர் கூறுகையில், திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத் துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து, அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழல்நிலையில், தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் நான், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உள்பட ஏராளமான இணை, துணை, உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் 4ம் தேதி எங்களது பிரசார பயணத்தைத் தொடங்குகிறோம்.

உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், அதைத் தட்டிகேட்கவும், தோள் கொடுக்கவும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம். தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.

தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது.

தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட மோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு பொருளாதார அகதி. தமிழகத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். இங்கு அவர் அகதியாகத்தான் தங்கி இருக்கிறார்.

காஞ்சீபுரத்தில் தொடங்கும் இந்த தேர்தல் பிரசாரம், ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடத்தப்படும். அங்கு பொதுக்கூட்டமும் நடக்கும்.

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

4-ந் தேதி தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11-ந் தேதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்ட வேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார் பாரதிராஜா.

சீமான், சுந்தரராஜன் ஆகியோரும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.

இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஆகும். ஏற்கனவே இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நிறுத்தப்படாவிட்டால் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். சோனியாவை முழுமையாக எதிர்ப்போம் என திரையுலகினர் அறிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் எறிகணைத் தாக்குதலைக் காட்டும் செய்மதிப் படங்கள் பிபிசி

இலங்கையின் வடகிழக்கே மோதல் நடக்கும் பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசால் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடந்திருப்பதை காட்டக்கூடிய செய்மதித் தொலைக்காட்சிப் படங்கள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இலங்கை ராணுத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிய கடற்கரைபிரதேசத்தில் அடைபட்டு இருப்பதை,
ஐநா மன்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் காட்டுகின்றன.

இந்த எறிகணை மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ராணுவம் பொறுப்பல்ல என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சுடவேண்டாம் என்று ஐநா மன்றம் இலங்கை அரசை தொடர்ந்து கேட்டுக்கொண்டுவருகிறது.


http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

இலங்கை குண்டு வீச்சு அல்ஜசிரா உலகுக்கு வெளிப்படுத்துகிறது

ஐ நாவே .........நீ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நம் இனம் அழிகிறது ....
உடனே செயல் இறங்க ஏன் இந்தளவு .........தயக்கம்.

Friday, May 1, 2009

தமிழக உறவுகளே! ஓட்டுப் போடும் முன் ஒரு நிமிடம்...!

நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.


வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று? கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது.சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது !!!
ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது . வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.

பேரன்புமிக்க தமிழக உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?
சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.

எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!
தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள்,மனிதச்சங்கிலிகள்,உண்ணாவிரதங்கள் என சாதாரண மக்களாக உங்கள் ஈழ உறவுகளின் அவலம் நீக்க, போரை நிறுத்தக்கோரி நீங்கள் செய்த அத்தனைக்கும் நாம் தலை வணங்குகின்றோம்.உங்கள் ஆதரவும் அன்பும் உணர்வும் எங்களுக்கு நன்கே புரியும். அவலத்தின்மேல் அவலப்பட்ட மக்களுக்கு உங்கள் ஆதரவு எரியும் நெருப்பை அணைக்கும் நீராய்த் தோன்றியது. ஆனாலும் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடிவாதமான போர்வெறியும், தமிழுணர்வுக்கு துளியும் மதிப்புக் கொடுக்காத காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் பழிதீர்க்கும் மனப்பாங்கும் சேர்ந்து, உங்கள் போராட்டங்களையெல்லாம் வீணாக்கி விட்டன. உங்களது போராட்டங்களால் விடியல் வரும் என்று காத்திருந்த ஈழத்தமிழருக்கு அவை கானல் நீராகவே போயின.
எதைக்கேட்டாலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையையே புராணம் பாடும் இந்த காந்திய காங்கிரஸ். கங்கிரஸாரிற்கு அதைவிட்டால் வேறு காரணங்கள் கிடையாது. அன்று புலிகள்தான் செய்தார்கள் என்று தாமாகவே முடிவுசெய்த காந்திய காங்கிரஸ், இன்று அதற்கு பழிதீர்க்க அனைத்து தமிழருக்கும் முடிவுகட்ட முண்டியடித்து நிற்கின்றது சிங்களதேசத்துடன், இந்திய அரசு என்னும் அதிகாரத்தோடு. இந்த அதிகாரத்தினை அவர்களுக்கு கொடுத்தவர்கள் நீங்கள்தான் தமிழக உறவுகளே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த நாற்பதுக்கு நாற்பது ஆசனங்கள்தான் அவர்களை மத்தியில் அதிகார ஆசனத்தில் அமரவைத்தது. ஆனால் நீங்கள் விடுத்த கோரிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டார்கள். கேட்டும் கேளாமல் இருந்தார்கள். சில சமயங்களில் செவிசாய்ப்பதுபோல் நாடகமாடினார்கள். இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் உறவுகளுக்கான உங்கள் கோரிக்கைகளுக்கு எதிராகவே நடந்து வருகின்றார்கள்.
தன்னை "தமிழினத் தலைவர்" என சொல்லிக் கொள்ளும் மான்புமிகு தலைவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தது மிகவும் வேதனைக்குரியது. எதிர்பார்ப்புக்களைக் கொடுத்து ஏமாற்றினார்கள் தம் சுயநலங்களுக்காக. பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்கள் ஈழ உறவுகளின் உயிர்களை ஏலம்விட்டார்கள்.தம் குடும்ப நலன்களுக்காக ஈழத்தமிழர் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை என கைகழுவி விட்டார்கள். பதவி விலகல்கள், தந்திகள், கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதம் என பலவிதமான கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்க நல்லதொரு சந்தர்ப்பம் உங்கள் முன்றலிலேயே வந்து நிற்கின்றது.
தமிழகம் மீண்டுமொருமுறை நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டது. இத்தேர்தல் முடிவில் அவலப்படும் ஈழத்தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் அடங்கியிருக்கின்றது என்பது தமிழக உறவுகள் நீங்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.மீண்டுமொருமுறை காங்கிரஸ் அரசமைக்க நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்களானால் அது ஈழத் தமிழினத்தினை அழித்தொழிக்க நீங்களே அனுமதி கொடுப்பதற்கு சமனாகும்.
சர்வதேசமெங்கும் ஈழ ஆதரவு பெருகிவருகையில் அவற்றின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸின் தமிழின எதிர்ப்புக் கொள்கைகளுக்குள் தமிழகமும் அடக்கப்பட்டு அடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.எனவே,
தமிழினத்துக்கு எதிராகவே எப்பொழுதும் கொள்கை வகுக்கும் காங்கிரஸிற்கு இந்த முறை தகுந்த பாடம் புகட்டுங்கள் தமிழக உறவுகளே!

இவ்வளவு காலமும் கட்சிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! சாதிக்காக ஓட்டுப் போட்டீர்கள்! மதத்துக்காக ஓட்டுப்போட்டீர்கள்! சலுகைகளுக்காக ஓட்டுப் போட்டீர்கள்! அப்போதெல்லாம் மாறுதல்களோ நன்மாற்றங்களோ வந்ததாக தெரியவில்லை. இம்முறை உங்கள் இனத்துக்காக ஓட்டுப் போடுங்கள்! உங்கள் உறவுகளின் கண்ணீரைத் துடைத்த புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும்.

ஓட்டுப் போடுவதற்குமுன், சொல்லொணா துயரத்தில் ஏக்கத்துடன் தவிக்கும் ஈழ மக்களின் கண்ணீர் தோய்ந்த முகத்தினை ஒரு தடவை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.உங்கள் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து மனிதநேயம் மிக்க மனிதன் என்ற ரீதியில் வாக்களியுங்கள்.

தமிழினம் சாதாரணமான ஒரு இனம் அல்ல. உலக வரலாற்றில் சரித்திரம் படைத்ததும் தொன்றுதொட்டே மேன்மையானதுமான ஒரு இனம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழினத்தினை அழிக்க பலவழிகளில் முயல்கின்றன பல நாசகார சக்திகள்.
முதலில் ஈழ தமிழரை குறிவைத்திருக்கும் அந்த நாசகார சக்திகளின் அடுத்த இலக்கு உங்களை நோக்கியும் திரும்பும் எம் தமிழ் தமிழக உறவுகளே!
குறிப்பிட்ட ஒரு கட்சிக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்று வற்புறுத்தவில்லை.தமிழின எதிர்ப்புக் காங்கிரஸும் அதன் கூட்டணியும் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்பது கங்கிரஸின் துரோகத்தனத்தினால் செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் எதிர்பார்ப்பும் பணிவான வேண்டுதலும் ஆகும்.
தமிழக அன்புள்ளங்களே! நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம். உங்கள் சொந்தங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து துடிதெழுந்தவர்கள் நீங்கள்! உங்கள் உணர்வுகளுக்குமுன் அரசியல் கபட நாடகங்கள், சதிகள் ஜெயிக்காது. ஜெயிக்கவும் விடமாட்டீர்கள் என்பது உறுதி!
ஈழ மக்களின் அவலங்களைப் பார்த்து உருவான உங்களின் மனப்பாரங்களை வாக்குப் பெட்டிகளில் இறக்கிவையுங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான வாக்குகளாய்...!



புலம்பெயர் தேசத்திலிருந்து,
ஒரு ஈழத்தமிழன்,
[பருத்தியன்]

thanks http://www.tamilseythi.com/kaddurai/kaddurai-paruthiyan-2009-04-30.html

கோடாரியால் வெட்டப்போவதாக அறிவிப்பு பிரான்ஸ், இங்கிலாந்து அமைச்சர்களை: பௌத்த பிக்குகள்

ஒரு நாட்டின் வெளிவிவகார துறை அமைச்சருக்கே இந்த கதி என்றால், இவர்களின் கோரப்பிடியில் இருக்கும் தமிழர்களை ஒருகனம் நினைத்து பாருங்கள்.

நாங்கள் கோடரியையும் வாளையும் கையில் எடுக்க வேண்டியேற்படலாம். எல்லைகளைக் கடந்து வருபவர்கள்; மீது கோடரி கொண்டு நாங்கள் தாக்க வேண்டியேற்படலாம் என ஹெலஉருமயக் குழுவினர் கோஷம் எழுப்பினர் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கையிட்டுள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக பிரிட்டிஷ் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தியபோதே ஹெல உருமயவினர் இவ்வாறு கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் பௌத்த பிக்குகள் இருந்ததை இவ்வார்ப்பாட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவித்திருக்கிறது.


அதேவேளை பிரிட்டிஸ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளிங்டன், நோர்வேயின் சூழல் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹைம் ஆகியோரின் பெரியளவிலான படங்களுடன் கூடிய பயங்கரவாதத்திற்கு உதவியளிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இவர்கள் தேடப்படுகிறார்கள் என்ற சுலோகத்தைக் கொண்ட சுவரொட்டிகளும் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் இவ்விரண்டு தரப்பினருக்குமிடையே அகப்பட்டுள்ள பொது மக்களுடைய மனிதாபிமான நிலைமையைப் பார்வையிடுவதே பிரித்தானிய மற்றும் பிரென்சு வெளிநாட்டமைச்சர்களின் விஜயத்திற்கான நோக்கமாக இருந்தது.

அவர்களுடைய கவலை எல்லாம் எண்பதாயிரத்திற்கும் ஒரு லட்சத்து நாற்தபாயிரத்திற்கும் இடையேயான மோதலில் அகப்பட்டுள்ள சிறுவர்கள், பெண்கள். முதியோர்கள் பற்றியதாகும். இந்த மனிதாபிமானக் கோரிக்கை இனவாத சக்திகளால் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஒன்றாக ஊடகங்களில் மாற்றப்பட்டிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பிடித்திருந்த சுலோக அட்டையில் கோல்டன் பிறவுண் ஒசாமா பின்லேடனுக்கு உதவ உங்களால் முடியுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ஏற்கெனவே கிடைத்த அறிக்கைகளின்படி ஷெல் வீச்சினாலும் கனரக ஆயுதத் தாக்குதலினாலும் ஜனவரி 2009இலிருந்து மார்ச் வரை 6500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 14000 போர் காயமடைந்திருக்கிறார்கள். பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி வந்த 110000 பேர் உட்பட 175000 பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

அரசாங்கம் தனது ஆதரவாளர்களுடாக ஊடகங்களைப் பயன்படுத்தி தேசியக் கொள்கைகளின் ஒரு பகுதியாக சர்வதேச சட்டங்களின் கீழான மனிதாபிமான உதவி பற்றி அக்கறை கொள்பவர்களுக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

வாளையும் கோடரியையும் கையிலெடுக்க அழைப்பு விடுப்பது என்பது பெரும் படுகொலை நிகழ்ந்த ரூவண்டாவில் வன்முறைக்குப் பயன்படுத்தப்பட்ட இது போன்ற கோட்பாட்டை ஞாபகப்படுத்துகிறது. இவ்வாறான பிரச்சாரம் மிகப்பெரும் படுகொலைக்குக் காரணமான பிரச்சாரமாகியது. ஏற்கெனவே சமூகம் வன்முறைக்குள்ளாகியுள்ள ஒரு சூழலில் இது பெரும் அபாயத்தைத் தோற்றுவிக்கும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது?

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது?

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது?

http://www.nerudal.com/nerudal.4394.html

http://www.nerudal.com/images/2009/05/tamilsinvanni-640x430.jpg