Friday, May 1, 2009

கோடாரியால் வெட்டப்போவதாக அறிவிப்பு பிரான்ஸ், இங்கிலாந்து அமைச்சர்களை: பௌத்த பிக்குகள்

ஒரு நாட்டின் வெளிவிவகார துறை அமைச்சருக்கே இந்த கதி என்றால், இவர்களின் கோரப்பிடியில் இருக்கும் தமிழர்களை ஒருகனம் நினைத்து பாருங்கள்.

நாங்கள் கோடரியையும் வாளையும் கையில் எடுக்க வேண்டியேற்படலாம். எல்லைகளைக் கடந்து வருபவர்கள்; மீது கோடரி கொண்டு நாங்கள் தாக்க வேண்டியேற்படலாம் என ஹெலஉருமயக் குழுவினர் கோஷம் எழுப்பினர் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கையிட்டுள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக பிரிட்டிஷ் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தியபோதே ஹெல உருமயவினர் இவ்வாறு கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் பௌத்த பிக்குகள் இருந்ததை இவ்வார்ப்பாட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவித்திருக்கிறது.


அதேவேளை பிரிட்டிஸ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளிங்டன், நோர்வேயின் சூழல் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹைம் ஆகியோரின் பெரியளவிலான படங்களுடன் கூடிய பயங்கரவாதத்திற்கு உதவியளிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இவர்கள் தேடப்படுகிறார்கள் என்ற சுலோகத்தைக் கொண்ட சுவரொட்டிகளும் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் இவ்விரண்டு தரப்பினருக்குமிடையே அகப்பட்டுள்ள பொது மக்களுடைய மனிதாபிமான நிலைமையைப் பார்வையிடுவதே பிரித்தானிய மற்றும் பிரென்சு வெளிநாட்டமைச்சர்களின் விஜயத்திற்கான நோக்கமாக இருந்தது.

அவர்களுடைய கவலை எல்லாம் எண்பதாயிரத்திற்கும் ஒரு லட்சத்து நாற்தபாயிரத்திற்கும் இடையேயான மோதலில் அகப்பட்டுள்ள சிறுவர்கள், பெண்கள். முதியோர்கள் பற்றியதாகும். இந்த மனிதாபிமானக் கோரிக்கை இனவாத சக்திகளால் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஒன்றாக ஊடகங்களில் மாற்றப்பட்டிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பிடித்திருந்த சுலோக அட்டையில் கோல்டன் பிறவுண் ஒசாமா பின்லேடனுக்கு உதவ உங்களால் முடியுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ஏற்கெனவே கிடைத்த அறிக்கைகளின்படி ஷெல் வீச்சினாலும் கனரக ஆயுதத் தாக்குதலினாலும் ஜனவரி 2009இலிருந்து மார்ச் வரை 6500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 14000 போர் காயமடைந்திருக்கிறார்கள். பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி வந்த 110000 பேர் உட்பட 175000 பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

அரசாங்கம் தனது ஆதரவாளர்களுடாக ஊடகங்களைப் பயன்படுத்தி தேசியக் கொள்கைகளின் ஒரு பகுதியாக சர்வதேச சட்டங்களின் கீழான மனிதாபிமான உதவி பற்றி அக்கறை கொள்பவர்களுக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

வாளையும் கோடரியையும் கையிலெடுக்க அழைப்பு விடுப்பது என்பது பெரும் படுகொலை நிகழ்ந்த ரூவண்டாவில் வன்முறைக்குப் பயன்படுத்தப்பட்ட இது போன்ற கோட்பாட்டை ஞாபகப்படுத்துகிறது. இவ்வாறான பிரச்சாரம் மிகப்பெரும் படுகொலைக்குக் காரணமான பிரச்சாரமாகியது. ஏற்கெனவே சமூகம் வன்முறைக்குள்ளாகியுள்ள ஒரு சூழலில் இது பெரும் அபாயத்தைத் தோற்றுவிக்கும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments: