Wednesday, May 13, 2009

தமிழகத்தின் 40 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு சதவீதம்:கரூர் முதலிடம்!

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று தமிழகத்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5மணிக்கு முடிந்தது.


திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் உட்பட அரசியல் பிரமுகர்களும், ரஜினி, அஜீத்,விஜய்,விசால், ஆர்யா உட்பட சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டனர்.


தமிழகம் முழுவதும் உத்தேசமாக 68 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.


தென் சென்னை-54%, மத்தியசென்னை-58%, வட சென்னை-59சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


காஞ்சிபுரம்-67%, ஸ்ரீபெரும்புதூர்-65%, திருவள்ளூர்-69%, மதுரை-76.6%, திண்டுக்கல்-68%, தேனி-69.5%, ராமநாதபுரம்-64.5%, சிவகங்கை-65%, விருதுநகர்-70சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


பொள்ளாச்சி-65%, கோவை-68%, நீலகிரி-70%, திருப்பூர்-74.32%, நெல்லை-65%, தென்காசி-63%, நாகை-68.5%, தஞ்சாவூர்-70%, மயிலாடுதுறை-67.5%, திருச்சி-70.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


வேலூர்-66,% அரக்கோணம்-68.9%, கன்னியாகுமரி-64%, ஆரணி-59%, கள்ளக்குறிச்சி-62%, சிதம்பரம்-68%, விழுப்புரம்-70.5%, சேலம்-69%, தர்மபுரி-70.53%, நாமக்கல்-75.405, ஈரோடு-72%, திருவண்ணாமலை-60%, கிருஷ்ணகிரி-70.13%, பெரம்பலூர்-67%, கரூர்-80%, தூத்துக்குடி-69.8 , மதுரையி்ல் 76.6 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


மற்றும் புதுச்சேரியில் -79.73சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

0 Comments: