Tuesday, May 26, 2009

ஐநா சபையில் இலங்கை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு : கருணாநிதி கடும் கண்டனம்

கலைஞருக்கு மிக்க நன்றி, வெறும் கண்டனங்களோடு நின்று விடாமல் இதற்கான ஆக்கபூர்வ வழிகளில் கலைஞர் செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கும் அப்பாவி தமிழர்கள்.

சென்னை : இலங்கைப் போரினால் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவித் தமிழர்கள் நிலை தொடர்பாக ஐநா சபையில் அந்நாட்டு அரசு கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரவு தெரிவிப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு அமைத்துக்கொடுத்துள்ள முகாம்கள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், குடிநீர், மருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சேவை செய்ய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்த வேண்டுகோளை, இலங்கை அரசு மறுத்துள்ளதை அந்த கடிதத்தில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையத்தில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்து தீர்மானம் கொண்டுவந்துள்ளதாகவும், அதனை, சீனாவின் உதவியோடு முறியடிக்க இலங்கை முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு இந்தியா துணைபோவது வருத்தமளிப்பதாகவும், அப்பாவித் தமிழர்களின் வருங்கால நலன்கருதி, இந்த விஷயத்தில் இந்தியா நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

8 Comments:

Anonymous said...

only letter to PM, why don't Mr KK go to Delhi and talk to PM directly. He will go only for Cabinet berths and not for any issues, so funny Mr.KK.

Anonymous said...

வீல் சேர் வில்லன் சக்தி மானாக இருந்தபோதே ஒன்னும் புடுங்...
இப்ப பண்ணிட போறாரா.... அவரே கனி காய்க்கு மந்திரி பதவி கொடுக்க முடியலைன்னு வருத்ததிலே இருக்கும் போது, வெங்காயம், ஈழ பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்காதுன்னு சொல்லியே ஓட்டு வாங்கினாங்க தெரியும்ல....?!

ராஜ நடராஜன் said...

கலைஞருக்கு பாராட்டுக்கள்.நாம் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மாதிரியான தமிழக உணர்வுகளை மத்திய அரசுக்கு தமிழர்கள் சார்பாக கொண்டு சேர்க்க வேண்டுமென்பதுதான்.(இதுவே மனித அவலங்களுக்கு முன்பு டெல்லி நேரடிப் பயணமாக இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருந்துக்குமே என்பதுவும் கூட ஆதங்கம் தரும் விசயம்)

LKritina said...

Kolaigner MK, has restarted his usual drama of writing letters to PM in regard to eelam tamil issues... shame on MK, shame on TN Tamils..

Anonymous said...

கருணாநிதியெல்லாம் நம்பிகிட்டு ஹையோ ஹையோ இத்தனை நாள் அந்த ஆளை தானே வசவு மாறி எழுதுனீங்க அந்த மை காயுறதுக்குள்ள இப்போ நன்றியா. யார் சொன்னாலும் மூளைய பயன்படுத்தாம நம்பிரிவிங்க. உங்கள சொல்லி குத்தமில்ல உங்க தேசிய தலைவன் நீங்கள் இப்படி முட்டாள்களாக இருப்பதை தான் விரும்பினான்

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

உதயசூரியன் said...

என்னய்யா உங்களுக்கெல்லாம் இப்ப பிரச்சினை ?


அவுரு சும்மா இருந்தா சும்மா இருக்காருன்னு சொல்றீங்க...

அவுரு ஏதாச்சும் பண்ணினா கரிச்சிக் கொட்டுறீங்க........

என்னதான் பண்ணச் சொல்றீங்க?

Anonymous said...

இந்த முறை கடிதமா...? தந்தி அனுப்புல... ஓ... தந்தி சார்ஜ் இப்பத்தான் மத்திய அரசு கூட்டிருச்சே....