Sunday, May 17, 2009

பிரபாகரன் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ

பிரபாகரன் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். இவரது தோல்வியால் மனமுடைந்த அக்கட்சியின் தொண்டர் அய்யனார் தீக்குளித்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அய்யனாரை அப்போலோ மருத்துவனையில் பார்த்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ


ஓட்டுபதிவு அன்று ஓட்டுசாவடிகளில் நான் சென்று பார்த்த போது மக்கள் என்னை பார்க்க தயங்கினர். அப்போதே அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டனர் என்று யூகித்தேன். தேர்தல் தோல்வியால் என் மனம் வருத்தம் அடையவில்லை, முன்பைவிட இனி கட்சி வேலையில் அதிகம் ஈடுபடுவேன்.


விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை விட கூடுதலாக 24,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.


தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்கையில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 Comments: