Tuesday, May 5, 2009

மதுரை மக்கள் அதிர்ச்சி அழகிரியின் மேல்

அழகிரியின் தொகுதியில் பணம் பட்டுவாடா, மக்கள் அதிருப்தி முதலில் 2000 முதல் 4000 வரை கொடுக்கப்படும் என அறிவித்து இன்று 500 மட்டுமே வழங்க படுவதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு சிலர் இவர் கொடுக்கும் பணம் அரசாங்க பணம் என்று நினைத்து கொண்டுள்ளனர். சிலர் மீதி பணம் பட்டுவாடா பண்ணாவிடில் வழக்கு போடப்போவதாக சொல்கின்றனர். நீதிபதி என்ன நீதி கொடுப்பார் என தெரியவில்லை. சுவத்திலே முட்டி கொள்வார், என்னடா கருமம் இது அப்படின்னு நினைக்கிறேன்.

இவரை நம்பி பலர் 10000 வரை கடன் பெற்றுள்ளனர், கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இவரது பணப்பட்டுவாடா குறித்து பல பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்தி வந்துள்ளது, மேலும் தேர்தல் ஆனையரிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது.

அழகிரியின் ஆட்கள் மிரட்டி வேறு ஓட்டு கேட்கிறார்களாம்.

மதுரையில் பண மழை

8 Comments:

பாண்டியன் said...

அய்யா என் எண்ணங்களை உங்கள் வலை பதிவில் பதியுங்கள்

'இந்தி' தேசியத்தில் தமிழக தமிழனின் இருப்பை உணரவைத்த இரண்டாவது ஈழ எழுச்சிக்கு கோடி நன்றிகள்

சமீபத்தில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் சக கர்நாடக காரர் ஒருவர் புலிகள் கதை முடிந்துவிட்டதாமே என ரொம்பவே சந்தோசபட்டார்.நான் அவர்கள் அந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்று லெமூரிய கண்டம் முதற்கொண்டு விளக்கி கூறினாலும் அதை அவர் ஏற்று கொள்ளவில்லை தமிழர்கள் இன்னும் மூன்று நான்கு தலைமுறைக்கு எழவே கூடாது அழிந்து ஒழிய வேண்டும் என பேசி கொண்டு இருந்தார்..ஏன் நம் மீது இவ்வளவு காண்டு? எந்த தமிழன் இவர்களுடைய சோற்றில் மண் அள்ளி போட்டான்?தமிழர்கள் இது வரை யாருடைய உரிமைகளையாவது மறுத்திருக்கிறார்கள் ? எந்த இனத்தவரையாவது அடிமைபோல நடத்தி அவர்களை பாகுபாடுடன் நடத்தியிருக்கிறார்களா ? தமிழர்களின் உரிமையை ஏன் மற்றவர்கள் மறுக்கின்றனர் ? அதுதான் கலாச்சார வேறுபாடு தமிழ் மொழியின் தொன்மை,தமிழ் காலாச்சார பாரம்பரியம் சுயமரியாதை சமஸ்கிருதம்&இந்தியை ஏற்று கொள்ளாமை முதலிய பல விடயங்கள் அடங்கியுள்ளன...

தமிழ்மொழியின் தொன்மை என்று சொல்லபோனால் இந்த மொழி எப்போது தோன்றியது என செம்மொழி அந்தஸ்து கொடுக்கும் போதே ஆளாளுக்கு தலையை பிய்த்து கொண்டார்கள் என்பது
நாம் அனைவரும் அறிந்த்ததே! கர்நாடககார்களுக்காக அதை வெறும் 1500 ஆண்டுகளாக குறைத்துவிட்டார்கள் என்பது வேறு விடயம் ஆனாலும் உலக மொழி தரவரிசையில் தொடர்ந்து ஆறாவது இடத்தில் உள்ளது அதுவே இவர்கள் கண்ணை உறுத்துகிறது. அதே போல் கலாச்சாரமும் இவர்களுக்கும் நமக்கும் ஏணிவைத்தாலும் எட்டமுடியாதுள்ளது. சுயமரியாதை பற்றி நமக்கு சொல்லவே வேண்டாம் நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் நிற்க மனம் கூசும் வெளியேறி விடுவோம்(அரசியல்வாதிகள் தவிர்த்து). எதற்கு எடுத்தாலும் ஏன் எதற்கு என கேள்விகளை சிறிதளவாவது கேட்போம்!

இனவெறி அடக்குமுறை என்பதை பின்வருமாறு அடக்கலாம் வரலாற்றை முடக்குவது கலாச்சாரத்தை முடக்குவது மக்களின் அடிப்படை வாழ்வாதரமான விவசாயம் மீன்பிடித்தல் ஆகியவற்றை சிதைப்பது ,உரிமைகளை சிதைப்பது போன்றவைகள் வருகின்றன.. இதில் மேற்கூறிய அனைத்தும் அப்பட்டமாக இந்தி தேசியத்திற்கும் தமிழர்களுக்கும் பொருந்துவதை காணலாம்..முதலில் வரலாற்றுக்கு வருவோம் முதன் முதலில் 1805 வேலூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் ஏன் மறக்கடிக்கப்பட்டு 1857 கலகம் மட்டும் பாட புத்தகங்களில் முதலிடம் பெற்றது ? சுதந்திரதிற்காக போராடிய தமிழர்கள் எத்தனையோ பேர் ஆனால் ஒரு தமிழனின் சிலைகூட நாடாளுமன்றத்தில் காண முடியவில்லையே ஏன்? நாம் என்ன வேறு நாட்டு சுதந்திரத்திற்காகவா போராடினோம்? கடல் கடந்து வெற்றி கொடி நாட்டியது சோழர் படை ஆனால் ஒரு கப்பலுக்கும் இந்த தேசம் அவன் பெயரை ஏன் வைக்கவில்லை? பிருத்திவி அக்னி அண்டார்டிக்கா என பேர் சூட்டுவது ஏன்?சரி இனி மக்களின் வாழ்வாதரந்களுக்கு வருவோம்..

இதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை காவிரி ஒக்கேனக்கல் என கருநாகத்தான் தொல்லை கொடுக்கிறான்..கேரளாவிற்கு தினமும் அரிசி, பருப்பு, இறைச்சி என எவ்வளவோ செல்கிறது.கேரளாவிலிருந்து தமிழகத்தில் வந்த மலையாளிகள் 2 லட்சம் தேனீர் கடைகள் வைத்துள்ளனர்.. அதற்கான நன்றியை கூட முல்லை பெரியாறு பிரச்சனையில் காட்ட மறுக்கின்றனர்.. கடலில் கலக்கும் வீணாகும் நீரில் சில டி.எம்.சியைக் கூட தமிழ் நாட்டிற்கு கொடுக்க மறுக்கின்றனர்..

புலிகளுக்கும் இந்திய கற்பழிப்பு படைக்கும் எம்.கே. நாராயணன் மூலமாக சண்டை மூட்டிவிட்டு அன்றைய மலையாள் மனோரமவில் தமிழனுக்கு எப்போதும் பாடம் கற்று கொடுப்பவன் மலையாளத்தான் தான் என தலைப்பு செய்தி ஏன் போடவேண்டும்? இன்று கண்ணகி வழிபாடு என்பது தமிழர்களின் சடங்காகவே மாறிவிட்டது அங்கு ஏன் கேரள காவல்துறை வரவேண்டும் ஏன் பிரச்சனை செய்யவேண்டும் மாமன்னன் ராசேந்திர சோழனால் கட்டபட்ட மிக பழமையான மண்டபத்தில் இதுதான் பாரதமாதா என்று ஒரு சிலையை வைத்துவிட்டு அந்த நாளில் மட்டும் மலையாளிகள் பாரத மாதாகி சே என ஏன் முழங்க வேண்டும்?

பண்டா சாஸ்திரிஒப்பந்ததின் மூலம் இலங்கை மலையக மக்களை நாடற்றோர் ஆக்கியது யார்?'இந்தியாவில் அனைவரும் சமம்தானே ஏன் நாகாவை மட்டும் தனித் தேசிய இனமாக இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 371(ஏ) பிரிவு அங்கீகரிக்கிறது ?உலகின் மூத்த குடியான தமிழினதிற்கு மறுக்கிறது? உலகில் எங்குமே அனுமதிக்கப்படாத ரசியாவின் அணுமின் நிலையத்தை தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலமும் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை.

அதனால் மத்திய அரசு தமிழகத்தில் அதை அமைக்க தீவிரம் காட்டியது ஏன் ?மராட்டியத்தில் கூலி வேலை செய்த தமிழர்களை அடித்து விரட்டினர் சிவசேனைய மராட்டிய படைகள்.. அதற்கு அவர்கள் சொன்ன பதில் 'மும்பை நகரம் மராட்டியர்க்கே' ஏன் அவ்வாறு கூறி விரட்டினர் ?இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

நம்முடைய தமிழ் நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக வழங்கியது யார் ? ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 400ல் ஒருவருக்குக்கூட ‘இந்தி’ய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை..
பாகிஸ்தான்காரன் சுட்டால் உலகையே கூப்பிட்டுக் காட்டும் மத்திய அரசு ஏன் தமிழர்களிடம் பாகுபாடு காட்டுகிறது ? தமிழர்களும் இந்தியர்கள் தானே?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் இந்தி தோட்டாக்கள் தமிழக மீனவனை சுடும் சிங்களனை நோக்கி ஒருமுறையும் சுடவில்லையே ஏன்?ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்.இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்த்தி வருகின்றனர். ஆனால் இந்திதேசியத்தின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது.
தமிழர்களே அடுத்தவனிடம் கேட்டு போராடி நீ பெற வேண்டிய நிலை உள்ளதென்றால் நீ அவனுக்கு அடிமையாகத்தானே உள்ளாய் என்று பொருள்?இதைத் தட்டிக் கேட்டால் நாம் பிரிவினைவாதிகள் என்று நம்மவர்களே பொங்கி எழுவர்..

Vishnu - விஷ்ணு said...

//இவரை நம்பி பலர் 10000 வரை கடன் பெற்றுள்ளனர், கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். //

ஆமாங்க இதுக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரி பதில் சொல்லியே ஆகனும்.

ARIVUMANI, LISBON said...

புதியவர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் பின்னுட்டாம்..

நல்ல பதிவு திரு.பாண்டியன்..

senthil said...

ஆமா சார் .. எதிலும் நியாயம், நேர்மை தர்மம் இருக்கணும் சார்

anandth said...

Pandian what you said is 100% truth and has to reach many people.

வால்பையன் said...

சிட்டிகுள்ள தான் 500!
அவுட்டர்ல 100, 200 தானாம்!

ஆனா வேறு யாரும் அது கூட தரலைங்கிறதால மக்கள் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டாங்க

இல்லைனா மூன்ரை லட்சம் மேல வந்துருக்கும்!

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

karu said...

i read your news about three line but i laugh my self its nice story