Sunday, May 24, 2009

திருடனுக்கு காவல் திருடனே, உலகே இது என்ன நியாயம்

யுத்தப் பிரதேச போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு விசாரிக்கும்: ஐ.நா. - இலங்கை கூட்டறிக்கை

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா.தலைமைச் செயலர்

இலங்கையில் இராணுவ படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த மோதல்களின்போது நடந்ததாகக் குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமைச் செயலர் இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த வேளை இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகட்டங்களில் இருதரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருத இடமிருப்பதாக சர்வதேச மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

அரசாங்கம் இதனை மறுக்கிறது என்றாலும், கூட்டறிக்கையில் இவ்விவகாரம் தொடர்பாக அது பதில் தந்துள்ளது.

1 Comment:

அது சரி(18185106603874041862) said...

//
ஐ.நா. தலைமைச் செயலர் இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த வேளை இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
//

இந்த மயிரை சொல்றதுக்கு தான் பான் கி மூன் வந்தாரா?? இதை ராஜபக்சே என்ற ரத்தவெறி பிடித்த பன்றியும், இந்தியா என்ற இனவெறி பிடித்த நாடுமே சொல்லுமே??