Saturday, May 2, 2009

பாதுகாப்பு வலயப் பகுதியில் எறிகணைத் தாக்குதலைக் காட்டும் செய்மதிப் படங்கள் பிபிசி

இலங்கையின் வடகிழக்கே மோதல் நடக்கும் பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசால் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடந்திருப்பதை காட்டக்கூடிய செய்மதித் தொலைக்காட்சிப் படங்கள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இலங்கை ராணுத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிய கடற்கரைபிரதேசத்தில் அடைபட்டு இருப்பதை,
ஐநா மன்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் காட்டுகின்றன.

இந்த எறிகணை மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ராணுவம் பொறுப்பல்ல என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சுடவேண்டாம் என்று ஐநா மன்றம் இலங்கை அரசை தொடர்ந்து கேட்டுக்கொண்டுவருகிறது.


http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

0 Comments: