Tuesday, May 5, 2009

மைக் சொன்னது சரியே, கருணாநிதி தோற்க வேண்டும், திருமங்கலத்தில்

பல மாதங்களுக்கு 6-jan-09 மைக் அவர்களால் எழுதப்பட்ட இந்த பதிவு இன்றைய நிலையை அப்படியே உரித்து வைக்கிறது. அறிவாளிகளை துரத்தும் கழுகுகளே கொஞ்சம் சிந்தியுங்கள். அப்பொதே நாம் விழித்திருந்தால் இன்று மாபெரும் இனப்படுகொலையினை தடுத்திருக்க முடியும்.

கருணாநிதி தோற்க வேண்டும், திருமங்கலத்தில்

தமிழர்களில் கருணாநிதிதான் அதிகாரமிக்கவர், பலமிக்கவர். பல மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர் இவை அனைத்தும் இருந்தும் தமிழின தலைவர் என்ன செய்தார் தமிழ் மக்களுக்கு, இவருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்கட்டும் அனைத்து கட்சிகளுக்கும். தமிழனை ஏமாற்றி விட்டு ஆட்சி கட்டிலில் எவனும் உட்கார முடியாது. தமிழர்களே இதுதான் உங்களின் நேரம் வாக்குகளை மாற்றி அளியுங்கள். காங்கிரஸிடன் கூட்டு வைத்த திமுக வை புறக்கணியுங்கள்.

அப்போதுதான் திமுக கொள்கைகளிலே மாற்றம் வரும், காங்கிரஸின் பற்று குறையும். தமிழ் மக்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடியும். அடுத்த பாரளுமன்ற தேர்தலில் சரியான கூட்டணி அமைத்து கொள்ள முடியும்.

தி.மு.க வாக்களர்களே நீங்களும் வேறு யாருக்காவது உங்கள் வாக்கை அளியுங்கள். இந்த முறை நீங்கள் மாற்றி அளிக்க தவறினால் உங்கள் திமுக கழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாமல் போகும். வரும் முன் காப்போம் சிறிய இழப்புகளோடு.

தமிழனுக்கு துரோகம் பன்ணுபவன் மட்டும் தமிழின துரோகி அல்ல, தன்னால் முடிந்தும் தன் சுய நலனுக்காக தமிழனுக்கு எதுவும் பண்ணாததும் ஒரு வகை தமிழின துரோகமே. இதற்கு சில உதாரணங்கள்

1) ராஜினாமா நாடகம் நடத்தியது.

2) தமிழகத்தின் எழுச்சியை அமுக்கியவர்களில் ஜெ-யிம், கருணாநிதியும் சமபங்கு படைத்தவரே. ஜெ மற்றும் காங்கிரஸ் சொன்னதற்காகவும் சீமான், வை.கோ வையும் கைது பண்ணியது மாபெரும் தவறு. சீமான் அவர்கள் வெளியில் வந்தால் கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மண் கவ்வும் என்று பயந்து விட்டார் நம்ம தமிழின தலை.தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலை அடக்கி விடவே மத்திய அரசு விரும்புகின்றது. ஆட்சி நாற்காலி ஆசை இருப்பவர்களுக்கு வலியும் வேதனையும் எப்படிப்புரியும்.

3) பிரணாப் முகர்ஜியை இப்ப அனுப்பறோம், அப்ப அனுப்பறோம் என்று படம் காட்டியது, அதற்க்காக டில்லி வரை சென்று பெரிய படம் காட்டியது.

4) தமிழகத்தில் எழுச்சி வந்தவுடன், தானும் இணைந்து கொண்டது போல் காட்டி கொண்டு, குட்டைய குழப்பியது. குரல்கொடுத்தவர்களை சிறையில் அடைத்து கொழுத்துவிட்டெரிந்த தமிழக எழுச்சியை அணைத்துவிட்டார். மகள் ஒரு புறம் வீறுகொண்டு எழுங்கள் என்று சொல்லி கொண்டிருக்க்க இவரோ மறுபுறம் கையில் விலங்குடன் காத்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

5) இத்தனை அமைச்சர்கள் டில்லியில் இருந்து எந்த ஒரு மதிப்பும், மரியாதையும் கிடைக்காத டில்லியிடம் இன்னும் கூட்டு வைக்க ஆசைப்படுவது, தமிழின அழிவிற்கு துணை போவது.

ஏன் இந்த நாடகம் தமிழின தலைவரே. தமிழனே, தமிழனை காப்பாற்றா விட்டால் எப்படி ஒரு கன்னடத்தி வந்து காப்பாற்ற முடியும். திராவிடனே ஒரு திராவிடனை காப்பாற்ற முடியா விட்டால் எங்கிருந்து ஆரியன் வந்து காப்பாற்ற முடியும்.

1 Comment:

www.mdmkonline.com said...

http://www.mdmkonline.com/news/latest/sonia-meeting-cancelled-in-chennai.html

சோனியா :
கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

மக்களை நாம் சேர்ந்தே சந்திப்போம் ! நான் மட்டும் மக்களை சந்தித்து செருப்படிவாங்கவேண்டும் நீங்க ஆஸ்பத்திரியில் எ சி ரூமில் அதை டி வி ல பாக்கணுமா?

எந்த ஊரு ஞாயம் இது ?

-----
செய்தி இங்கே:


சென்னை : சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்.., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் , தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்துள்ளனர்.

-தோழர்