Thursday, May 21, 2009

பிரபாகரன் ஒரு பகுத்தறிவாளரின் கேள்விகள்

கேள்வி: சில தொலைக்காட்சிகளில் பிரபாகரன் உடல் என்று காட்டப்படுகிறதே அது உண்மையாக இருக்கும் என்று ஏன் நம்ப மறுக்கவேண்டும்?

பகுத்தறிவாளர் பதில்: இது மின்னணு யுகம்; தொலைக்காட்சியில் எத்தனையோ முறைகளைக் கையாள வாய்ப்புண்டு. முதன் முதலில் இது பற்றி இலங்கையில் உள்ள தொலைக் காட்சி மூலம்தான் இப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது (பிரபாகரன் தப்பிச் செல்லுகையில் சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியது)

என்ற தகவல் உண்மை என்றால், உடனே உடலைக் காட்டுவதில் அதற்கென்ன தயக்கம்? மற்றவர்கள் சொன்ன போதும், இராணுவம் மவுனம் காத்ததே - துவக்கத்தில் - ஏன்?

சில ஆங்கில தொலைக் காட்சிகள் கூறுகிறபடி விடையளிக்கப்படாத வினாக்கள் (Unanswered
questions) பல எழுந்துள்ளன.

1. சம்பவம் நடந்தது என்றைக்கு என்பதில் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்
ஞாயிறு (17) திங்கள் (18) செவ்வாய் (19) தான் உடல் கிடைத்ததா?

2. மரபு அணு DNA சோதனை மூலம் உடனடியாக உறுதிப்படுத்த இயலுமா? எப்படி உடனே DNA Test மரபு அணு சோதனை முடிந்து உறுதி செய்யப்பட்டு விட்டது என்று செய்தி வந்தது?

3. தப்பிச் செல்லும் எவராவது முழு இராணுவ உடையோடு, அது அவரது அடையாள அட்டையையும் தொங்கவிட்டுக் கொண்டு தப்பிக்க முயலுவார்களா?

4. முதலில் வந்த செய்தி, ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து அவர் தப்பிச் செல்லுகையில் சிங்கள இராணுவம் அவரைக் குறிபார்த்துச் சுட்டது என்பதாகும்.
பிறகு டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் கூறுவது பிரபாகரனே தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்பது இன்னொரு செய்தி. இரண்டில் எது சரி?
யார் பொய்யர்கள்? முன்னே சொன்னவர்களா? பின்னே சொன்னவர்களா?

5. இவ்வளவு பெரிய தேடப்பட்ட ஒருவரை நாங்கள் உயிருடன் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இராஜபக்சே சில மாதங்களுக்கு முன்பு கூறினாரே; அப்படி நடக்கவில்லை என்றால், பிரபாகரன் பற்றி அவர் நாடாளுமன்ற முக்கிய உரையில் - உலகமே பார்க்கும் கேட்கும் அவ்வுரையில் - ஏன் எதுவுமே சொல்ல வில்லை?

6. சிங்கள இராணுவத் தளபதி பொன்சேகா என்ன சொல்லுகிறார்? பிரபாகரன் சுடப்பட்டு, அவர் உடல் யுத்தப் பகுதியில்(War Zone) கண்டெடுக்கப்பட்டது என்கிறார்.
ஆம்புலன்ஸ் வண்டி, ஆற்றோரம் என்றெல்லாம் இதற்கு முன் சொன்னவை எல்லாம் என்னவாயிற்று?

கெட்டிக்காரன்கள் புளுகு எத்தனை நாளோ!

நன்றி விடுதலை

6 Comments:

Thennavan said...

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே !
இப்போது வெகு அவசரமாக ஒரு காரியம் செய்ய வேண்டும் எனக் கருதுகிறேன் . சிங்கள அரசாங்கம் பிரபாகரனின் உடலை ( ? ) உரிமை கோரினால் தருவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது . இதை பயன்படுத்தி சிங்கள அரசின் முகத்திரையை நாமே கிழித்து எறியலாம் . நமது தமிழ் இன தலைவர்கள் பிரபாகரனின் இரத்த வழி உறவுகளை முன்னிறுத்தி பிரபாகரனின் உடல் என்று கூறப்படும் சடலத்தை உரிமைகோரி , நடுநிலையான மரபணு சோதனையை நடத்தி உண்மையை வெளிக்கொணரலாம் . தேவைப்பட்டால் இநதிய அரசைக்கூட இந்த பணியை செய்ய சொல்லி வற்புறுத்தலாம் . ஏனெனில் அவர்களுக்கும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரபணு ஆய்வு அறிக்கை தேவைபடுகிறதே . இந்த வாதத்தை உரத்த குரலில் முன் வைத்தால் போதும் சிங்கள அரசு பின் வாங்கும் . உடனடியாக இந்த கோரிக்கையை உரத்த குரலில் எழுப்புவோம் . உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் இந்த கோணத்தில் சிந்திக்க சொல்லுங்கள் ............. செயலாற்றுவோம் .........

Anonymous said...

ஒரு கேள்வி பிரபாகரன் செத்தாரா இல்லையா? ?

//1. சம்பவம் நடந்தது என்றைக்கு என்பதில் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்
ஞாயிறு (17) திங்கள் (18) செவ்வாய் (19) தான் உடல் கிடைத்ததா?//

தமிழக தேர்தலுக்கு முன்பே இறப்பு. உடல் எப்போ கிடச்சா என்ன?

Anonymous said...

இழவு பாட்டு, மனச தேத்திக்க. Everything was over before TN election.

நிலவு பாட்டு said...

/*இழவு பாட்டு, மனச தேத்திக்க. Everything was over before TN election.
*/

சிங்கள சொறி நாயே மறுபடியும் வந்திட்டயா. மானம் கெட்ட ஜென்மம்டா.

த‌வ‌ளை said...

தமிழின தலைவர் இறந்துவிட்டதாக இவர்கள் செய்தி பரப்புவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொருமுறையும் புலிகள் மறுத்திருக்கிறார்கள் அனால் நிரூபிக்க முற்படவில்லை. தலைவரே சந்தர்ப்பம் வரும்போது மக்கள் முன் தொன்றிஇருகிறார்.

சுதந்திர போராட்டத்தின் அவசியத்தையும் புலிகளின் தியாக,அர்ப்பணிப்பு பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறுவோம்.

தலைவர் தக்க தருணத்தில் மக்கள் முன் தோன்றி வழிநடத்துவார்

த‌வ‌ளை said...

தமிழின தலைவரை வன் விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து எதாவது காரணத்தோடு கூறுங்கள்.

உங்களுக்கு LTTE அமைப்பின் மீது என்ன விரோதம் ? ஏன் இப்படி வன் வார்த்தைப் பிரயோகம் செய்து கொண்டிருக்கிறிர்கள் ?

ஒருவேளை உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அதை நியாயமாக நாகரிகமாக கூறலாமே ?
ஏன் இப்படி மனநோயாளி போல எழுதிக்கொண்டிருக்கிரிர்கள்?

ஏன் இப்படி அனானியாக வந்து வன் விமர்சனம் செய்கிறிர்கள் ?