ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.
மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Thursday, October 15, 2009
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!
Posted by நிலவு பாட்டு at 8:29:00 AM 0 comments
Labels: ஈழம்
Wednesday, October 14, 2009
ராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழின துரோகியாக திருமா
இன்று தமிழினம் எப்படிப்பட்ட ஒரு அழிவினில் இருந்தாலும் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாது தனது ஆட்சி ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதிக்கு கண்டிப்பாக இந்த தமிழின வரலாறில் ஒரு துரோகியாகவே பார்க்கப்படுவார் எத்தனை தலைமுறைகளுக்கும்.
இன்னும் தேவையானால் இன்னுமொரு குழுவினை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் சொல்லச்சொன்னால் அதையும் ரொம்ப நல்லாகவே செய்வார்கள்.
பல் பிடிங்கப்பட்ட பாம்பாக திருமாவளவன், இவரு அறிக்கையை கருணாநிதிட்ட தனிப்பட்ட முறையில் கொடுப்பாராம், அவரு அதை அப்படியே குப்பை தொட்டியில தூக்கி போடுவாராம். பச்சை தமிழின துரோகியாக தன்னை காட்டி கொள்கிறார். நாமல்லாம் இவரு இன்னமும் தமிழினத்துக்கு குரல் கொடுப்பாருன்னு நினைச்சிட்டு இருக்கனுமாம். என்ன ஒரு பித்தலாட்டம்.
இது மாதிரி துரோகிகளும், முட்டாள்களும் இருக்கும் வரை நம்மை மலையாளி, கர்நாடகா, தெலுங்கன், சிங்களன் எங்கேயும் மதிப்பு மரியாதை கிடைக்கப் போவதில்லை.
Posted by நிலவு பாட்டு at 8:26:00 PM 5 comments
Labels: ஈழம்
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு இந்தியத் துரோகம்!
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர். கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.
மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது. இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது.
இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது. மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமிழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது. சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி: ஈழநாடு (பாரிஸ்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 6:18:00 PM 0 comments
Labels: ஈழம்
Tuesday, October 13, 2009
கள்ள சிரிப்பழகி, மனசு தாங்கமுடியலையே
என்ன ஒரு ஆனந்தம் இவர்களின் முகத்தில், வாயெல்லாம் பல். இப்படி இவர்கள் வாழ்க்கையில் என்றாவது சிரித்திருப்பார்களா என்றால் ஆச்சரியம்தான். தமிழனை அழித்த கயவனிடன் கொஞ்சி, சிரித்து பேசி விளையாடும் இவர்களும் மனிதர்கள்தானா. அட மானங்கெட்ட தமிழினமே நீ அழிந்து போ இது போன்ற துரோகிகளை நீ இன்னும் பதவியில் அமர்த்து வரை.
Posted by நிலவு பாட்டு at 9:33:00 PM 7 comments
Labels: ஈழம்
இலங்கை நட்பு நாடாம் ?! டி.ஆர்.பாலு
தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று தமிழனின் சுடுகாட்டில் நின்று கொண்டு சொல்கிறீர்கள் கொஞ்சம் கூட நாகூசாமல்...முகாம்களை பார்த்தோம், எந்த வித கட்டுப்பாடுகளும் எங்களுக்கு விதிக்கப்படவில்லை, முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே என்று புகழாரம் சூட்டுகிறீர்கள்..! ஈழதேசம்.கொம் நினைத்தது நடந்து விட்டது..வதை முகாம்களை பற்றி மேற்கத்திய நாடுகள் தினசரி சொலிக்கொண்டு வரும் நிலையில், நீங்கள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்..!
ஒரு லட்சம் பேரை கொன்ற உலகின் மிகப் பெறும் போர்க் குற்றவாளி உங்களுக்கு நண்பன், அதுவும் தமிழ்நாட்டு எம்பி, திராவிடம்,தமிழர் என்று பேசக்கூடிய கட்சியை சேர்ந்தவர், உலகத் தமிழ் மாநாடு வேறு நடத்தப் போகிறீர்கள் !
மூன்று லட்சம் மக்களை தினசரி கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கொடிய மனித மிருகம் மகிந்த ராஜபக்சே...முழு சுதந்திரம் கொடுத்துள்ளார், நட்பு நாடு, நண்பர் என்றெல்லாம் முகாம்களை பார்த்து விட்டு வெளியில் வந்து சொல்கிறீர்கள் என்றால் உங்களின் கொடிய மூர்க்கத்தனமும், திமிரும்,ஆணவமும் அல்லவா வெளிப்படுகிறது...வதை முகாம்களை பார்வையிட்டோர்கள் மூன்று நான்கு நாட்கள் உணவு உண்ண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் நிலையில், நீங்கள் முகாம்களை பார்த்து விட்டு கொஞ்சம் கூட மனிததன்மையற்ற நிலையில் சொல்கிறீர்கள் ..! இலங்கை அதிபர் நண்பர் என்று..!
உங்கள் கூட்டத்தினர் விரைவில் இந்த செயல்களுக்கான பயன்களைப் பெறுவீர்கள்...! நீண்ட நாட்கள் செல்லாது உங்களின் இந்த செயல்களும், மகிந்த ராஜபக்சேவின் அரசும்..தலைவர் வருவார் வென்றெடுப்பார் ஈழத்தை...!
விண்ணகன்,ஈழதேசம்.கொம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 6:10:00 PM 3 comments
Labels: ஈழம்
Sunday, October 11, 2009
உரையாடல் :ராஜா பக்சே and திமுக MP குழு
| திமுக MP குழுவிற்கும் ராஜா பக்செவிற்கும் நடக்கும் உரையாடல் . திமுக MP குழு : ராஜா பக்சே வணக்கம்!. இங்கே முகாமில் உள்ள தமிழர்களை பாத்துட்டு போகலன்னு வந்தோம் . ராஜா பக்சே : ஆமாம் . நான் தான் கலைஞர் கிட்ட சொல்லி ஒரு 4 or 5 பேரை வர சொன்னேன் . கலைஞர் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டார் . அங்கே தமிழ்நாட்டில் எதிர் கட்சிகளை சமாளிக்க முடியலயாமே?. திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் . கலைஞர் உங்கள் நலம் பற்றி மிக கேட்டதாக சொல்ல சொன்னார் . ராஜா பக்சே : நான் கலைஞர்க்கு ரொம்ப கடமை பட்டு இருக்கேன் . சிங்கள மக்கள் , சிங்கள தலைமுறை ரொம்ப கடமை பட்டு இருக்கு . சீன போரில் weapons கொடுத்து உதவுச்சு . பாகிஸ்தான் கொடுத்து உதவுச்சு . ரஷ்ய உதவுச்சு . இவர்கள் உதவி எல்லாம் உங்கள் தமிழர்களை கொல்ல நல்லா உதவிச்சு . ஆனா இந்தியா உதவி செய்யலைனா நாங்க கண்டிப்பா ஜெயிச்சிருக்க முடியாது . இந்தியா உதவ முடிச்சந்துக்கு காரணம் உங்கள் தமிழ் தலைவர் கலைஞர் தான் . எனவே எங்கள் சிங்கள army தமிழ் மக்களை கொல்வதற்கு உதவிய கலைஞர்க்கு ரொம்ப நன்றி. திமுக MP குழு : என்னங்க ரொம்ப சின்ன உதவிய பெருசு படித்திகிட்டு . ராஜா பக்சே : போரில் சாகாதவர்களை ஒரு 4 or 5 முகாமில் அடைத்து வைத்திருக்கிறேன் . அவர்களை பார்த்திவிட்டு எல்லாம் நல்லா இருக்குன்னு போய கலைஞர் கிட்ட சொல்லுங்க. Army truck வந்தாச்சு . நீங்க எல்லாரும் பின்னாடி ஏறிகுங்கங்க. driver menik முகாமுக்கு உங்களை ஒட்டிடுண்டு போவாரு . திமுக MP குழு : ரொம்ப நன்றி சார் . All DMK MPs board the Army truck now and reach Menik farm. Army Truck Driver: Menik முகாம் வந்தாச்சு . இங்கேதான் நெறையா பேர் இருக்கங்கக . Gate இல என்ட்ரி பண்ணிட்டு உள்ள போங்க . Army men உங்களை கூட்டிட்டு போவார்கள் . திமுக MP குழு : சரிங்க சார் . Army men: வாங்க எல்லாரும் sign பண்ணுங்க . Everybody signs திமுக MP குழு : இங்க நாங்க போட்டோ எடுக்கலாமா ?. Army men: போட்டோ எல்லாம் எடுக்க கூடாது . எல்லா பாத்து முடிச்ச பிறகு நாங்க சில photos தர்றோம் . உங்களையும் போட எடுத்து தர்றோம் . எடுத்து போங்க. உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு . நீங்க கலைஞர் அனுப்பிச்ச ஆளுங்க . so no problem. திமுக MP குழு : முதல்ல சாப்பட்டு வசதி பாக்கலாமா ?. Army men: ரைஸ், bread எல்லாம் கொடுக்க பணமில்ல . சத்துமாவுதான் மூணு நேரமும் கொடுக்கிறோம் . சில நேரம் water கொடுப்போம் . பால் எப்போதாவது கொடுப்போம் . Army men: சரிங்க சார் . திமுக MP குழு : Toilet வசதி பண்ணி இருக்கா?. Army men: மொத்தம் 10 toilet இருக்கு . திமுக MP குழு : 3 lakhs மக்களுக்கு 10 toilet தானா?. Army men: இதுவே போதும்னு enga president சொல்லிடாரு . toilet வசதி கிடைக்காதவங்க அவங்க கூடாரம் முன்னாடி உள்ள ditch -ல தான் போய்க்கனும் . திமுக MP குழு: Hospital , schools எதாவது?. Army men: அதெல்லாம் கட்டிக்கிட்டு இருக்கோம் . திமுக MP குழு: சரிங்க sir. Army men: உங்கா time ஓவர் ஆயிடுச்சு . வந்ததுக்கு நன்றி . நம்ம கலைஞர் -ஐ கேட்ட தாக சொல்லுங்கள் . Army truck comes back to colombo. DMK MPs meet again Raja Pakse திமுக MP குழு : நல்லா சுத்தி பார்த்தோம் . ரொம்ப நல்லா இருந்தது . மக்கள் எந்த problem இல்லாம இருக்காங்க . இதை நாங்க கலைஞர் கிட்ட சொல்ல்றோம் . ராஜா பக்சே: நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்வதற்கு நன்றி . மறுபடியும் கலைஞர்க்கு என் நன்றியை சொல்லுங்கள் . Written by Senthil |
Posted by நிலவு பாட்டு at 6:53:00 PM 1 comments
Labels: ஈழம்
Saturday, October 10, 2009
போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள்: ஆனந்த விகடன் தெரிவிப்பு
இலங்கையை ஆள்வோர் 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்திரவதைகளைத் தொடர்கிறார்கள்! இவ்வாறு இந்திய தமிழ் சஞ்சிகையான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
இந்தவாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் சஞ்சிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது்-
பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!
தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!
ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்திரவதைகளைத் தொடர்கிறார்கள்!
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?
அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?
இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால், உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள், உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள்.
ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
Posted by நிலவு பாட்டு at 9:21:00 AM 0 comments
Labels: ஈழம்