தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று தமிழனின் சுடுகாட்டில் நின்று கொண்டு சொல்கிறீர்கள் கொஞ்சம் கூட நாகூசாமல்...முகாம்களை பார்த்தோம், எந்த வித கட்டுப்பாடுகளும் எங்களுக்கு விதிக்கப்படவில்லை, முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே என்று புகழாரம் சூட்டுகிறீர்கள்..! ஈழதேசம்.கொம் நினைத்தது நடந்து விட்டது..வதை முகாம்களை பற்றி மேற்கத்திய நாடுகள் தினசரி சொலிக்கொண்டு வரும் நிலையில், நீங்கள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்..!

ஒரு லட்சம் பேரை கொன்ற உலகின் மிகப் பெறும் போர்க் குற்றவாளி உங்களுக்கு நண்பன், அதுவும் தமிழ்நாட்டு எம்பி, திராவிடம்,தமிழர் என்று பேசக்கூடிய கட்சியை சேர்ந்தவர், உலகத் தமிழ் மாநாடு வேறு நடத்தப் போகிறீர்கள் !

மூன்று லட்சம் மக்களை தினசரி கொடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கொடிய மனித மிருகம் மகிந்த ராஜபக்சே...முழு சுதந்திரம் கொடுத்துள்ளார், நட்பு நாடு, நண்பர் என்றெல்லாம் முகாம்களை பார்த்து விட்டு வெளியில் வந்து சொல்கிறீர்கள் என்றால் உங்களின் கொடிய மூர்க்கத்தனமும், திமிரும்,ஆணவமும் அல்லவா வெளிப்படுகிறது...வதை முகாம்களை பார்வையிட்டோர்கள் மூன்று நான்கு நாட்கள் உணவு உண்ண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் நிலையில், நீங்கள் முகாம்களை பார்த்து விட்டு கொஞ்சம் கூட மனிததன்மையற்ற நிலையில் சொல்கிறீர்கள் ..! இலங்கை அதிபர் நண்பர் என்று..!

உங்கள் கூட்டத்தினர் விரைவில் இந்த செயல்களுக்கான பயன்களைப் பெறுவீர்கள்...! நீண்ட நாட்கள் செல்லாது உங்களின் இந்த செயல்களும், மகிந்த ராஜபக்சேவின் அரசும்..தலைவர் வருவார் வென்றெடுப்பார் ஈழத்தை...!

விண்ணகன்,ஈழதேசம்.கொம்