Wednesday, October 7, 2009

முள்வேலிக்குள் இருப்போர் கன்னடர்களாக இருந்தால் எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு சொல்லி இருப்பாரா

இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மானாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக அல்லது தமிழ் பிரதேசங்கள் தொடர்பாக எந்த அறிவோ தெளிவோ இன்றிய இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை அரசாங்கம் எடுக்கும் வாந்தியினை திரும்ப உள்வாங்கி தானும் எடுக்கின்றார் போல தெரிகின்றது. அல்லது இலங்கை அரசாங்கம் தாம் சொன்னால் நிதி கிடைக்காது என்பதற்காக இந்திய அரசாங்கத்தினை கொண்டு சொல்லப்படுகின்றனவா எனவும் ஐயம் எழுகின்றது.

இந்தியா போரின்போது தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவியது மட்டுமன்றி அழிப்பு நடவடிக்கையினை செய்யும், சிங்கள அரசினை உலக அரங்கில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையினையும் மேற்கொண்டது.

அதனையே தற்போதும் செய்து வருகின்றது. தற்போது முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்ற மக்களை மீழ் குடியமர செய்வதற்கான கொடையாளர் நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியன அழுத்தம் கொடுக்கும் வேளையில் சிங்கள அரசுக்கு முட்டு கொடுக்குமாற்போன்று மீண்டும் தனது சுயரூபத்தினை வெளிக்காட்டி இருக்கின்றது. இந்தியா தாமும் ஒன்றும் தமிழ் மக்களுக்கு செய்ய போவதில்லை அதே நேரம் தமிழ் மக்களுக்கு யாராவது ஏதும் செய்ய புகுந்தால் அதனை விடாமல் தடுத்து நிறுத்தும் வேலைதான் செய்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு செய்யும் இந்தியாவை எம்மவர் இன்னமும் ”அவர்கள் இன்றி நாம் இல்லை” என முன்மொழிவது ஏன்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு துணிந்து இந்தியா தொடர்பாக தமிழர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் சிங்கள அரசின் தைரியத்தினை போற்றதான் வேண்டும். இலங்கை அரசு பேரம் பேசுதலில்தான் தனது அரசியலை கொண்டு செல்கின்றது.

தமிழர்களும் அந்த நிலைக்கு வரவேண்டும் புதிய நண்பர்களை தேடி புறப்படுங்கள், புதிய வழங்களை தேடி புறப்படுங்கள், புதிய உறவுகளை கண்டு பிடியுங்கள் நிச்சயமாக எங்கோ ஒருவர் எமக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

இந்தியா இந்தியா என வாழ் கிழிய சொல்லிக்கொண்டு கிழட்டு தந்திரோபாயங்களை அதற்கே உரித்தானவர்களிடம் விட்டு விட்டு இன்னொரு பக்கம் புதிய அத்தியாயத்தினை ஆரம்பியுங்கள். எங்களுக்கு எல்லாமே வேண்டும்.

இனி எம்மை தவிர இவர்கள் யாரிடமும் போகமுடியாது என்ற இந்தியாவின் இறுமாப்பினை உடைக்க வேண்டும். இந்திய உறவு என்ற சாக்கடைக்குள் புழுக்களாக நெளியும் தமிழர்களாக நாம் இருக்க முடியாது இருந்தும் பிரஜோசனம் இல்லை நண்பர்களே.

எனவே அதற்கென யாரையாவது ஒதுக்கி விட்டிட்டு நாம் புதிய பயணத்தினை தொடரவேண்டும்.

http://www.eelanatham.net/news/important

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments: