Tuesday, October 6, 2009

தேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் வரை

"நாடு தேசமெல்லாம் எதிர்பார்த்து ஏங்கிகிட்டு இருக்கற பிரபாகரன் விஷயம் தெரியுமா? ரொம்ப பாதுகாப்பா இருக்காரு. நம்பகமான தகவல் இருக்கு. சூசை எல்லாம்கூட நீர்மூழ்கி கப்பல் மூலமா தப்பியிருக்காருன்னு தகவல் இருக்கு.அதனால உலக தமிழர்கள் யாரும் சோர்ந்துட வேண்டாம். தொடர்ந்து போராட்டத்தை நடத்துங்க. பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்கு, கோரிக்கைகளுக்கு உலகம் ஆதரவு தரமாட்டோம்னுதான சொன்னாங்க. விலகி நின்னு வேடிக்கை பார்த்தாங்க. இப்போ அரசியல் வழியில அதே கோரிக்கைய இன்னும் வேகமா முன்னெடுங்க. ராஜபக்சே இப்போ என்ன சொல்லப் போறார்னு உலக நாடுகள் தெரிஞ்சுகிடட்டும். கால அவகாசத்துக்கப் பிறகு வெளிய வந்து கச்சேரிய வச்சிக்கிடறோம்னு தகவல் சொல்லியிருக்காங்க" என்றார்.

ஏம்பா. என்னாப்பா இது. குவாட்டர் அடிக்குற எனக்கே தலைய சுத்துது. நீ இப்படி சொல்ற. ஆனா ராஜபக்சேதான் பிரபாகரன் இறந்துட்டதை வீடியோ எல்லாம் எடுத்து காமிச்சாரே. இப்போ புதுசாவேற பொட்டம்மான்தான் பின்னாடி நின்னு, கிட்டக்க இருந்து தலையில சுட்டு கொன்னாருன்னு வேற சொல்றாங்களே- கோட்டை கோபாலு.

" பொய்க்குதான் ஆயிரம் காரணத்தை அடுக்கடுக்கா சொல்லனும். உண்மைக்கு அது அவசியமே இல்லேங்கிறத மறந்துடாதே. ஏற்கனவே வீடியோ படம் காமிச்சதுலேயே ஆயிரத்தெட்டு கோல்மால். அயோக்கியத்தனம்னு தமிழார்வளர்கள் தரப்பு கொதிச்சுபோய் இருக்கு. இலங்கை அரசு பாணியில சொல்றதுன்னா உலகமே கவனிச்சுட்டு இருக்குற பயங்கரவாதி பிரபாகரனை அவர்கள் கொன்றால் அதை ஏன் கொழும்பு வரைக்கும் கொண்டுவந்து, மீடியாவை எல்லாம் கூப்பிட்டு பாருங்கோ. இவர்தான் அவர்னு காட்டாம விட்டது ஏன்- அதுக்கு தைரியமில்ல. காரணம் ஏன்ங்கிறது அவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படி அவர்கள் சொன்ன கதைய எல்லாம் யாருமே ஏன், கூட இருந்தே சங்கூதுற வேலைய செய்த இந்தியாவும் நம்பலைங்கிறதாலதான் இப்போ புதுசா பொட்டம்மானே தலைவர் தலையில சுட்டுட்டார்னு கதைய விடுறாங்க. அதே நேரத்துல தலைவர் கூடவே எப்பவும் முன்னூறு கரும்புலிங்க இருப்பாங்கிறதையும் ராஜபக்சே வட்டாரம் மறுக்கலை. அப்படி பார்த்தா, பொட்டம்மான் சுட்டப்போ கரும்புலிங்க என்ன வேடிக்கையா பார்த்துகிட்டு இருந்துச்சு. கரும்புலி பொட்டம்மான் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு உடம்பு உறுக்குலைஞ்சு போயிடுச்சுன்னு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. அப்டீன்னா பக்கத்துல இருந்து சுட்ட பொட்டம்மான், தலைவரை சுத்தியிருந்த கரும்புலியெல்லாம் கருகி அடையாளம் தெரியாத அளவுக்கு பிணமா இருந்தப்போ, தலைவர் பிரபாகரன் உடம்பு மட்டும் எப்படி முழதுமா கிடைச்சது. அதுவும் உடம்புல வேற எந்த காயமும் இல்லாம? கருகாம! இதுதான் பொய் எப்பவும் ஆயிரம் காரண கதைய சொல்லிகிட்டு திரியும்னு சொல்றது." என்றார் சித்தன்.

என்னவேனா பேசிக்கிடட்டும். அதைவிடுங்க. இப்போ ராஜபக்சே வட்டாரம், அதான் அவரோட தம்பிங்க பசில், கோத்தபாய எல்லாம் இந்தியா வந்திருக்காங்களாமே. இன்னும் யாரையாவது கொலைபன்னப் போறாங்களாம்- அன்வர்பாய்.

"அடப்பாவிங்களா, அவிங்களை என்ன கொலைகாரக் கூட்டம்னு நினைச்சுட்டீங்களா. ஒரு ஜீவராசியையும் கொல்லக்கூடாதுன்னு சொல்ற புத்த தேசத்தின் புதல்வர்கள்பா அவிங்க. அந்தாளுங்களை போய் அப்படி சொல்லலாமா. அகிம்சைவாதி காந்திக்கெல்லாம் முன்னோடிப்பா ராஜபக்சே வட்டாரம். புழு பூச்சியை எல்லாம் கொல்ல மாட்டாங்க. ஆனா தமிழினத்தை மட்டும் கொத்துக்கொத்தா கொன்னுப் போடுவாங்க. புத்தர் அதுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருப்பார் போல. நம்ப ஊரு மரத்தடி நாட்டாமைகூட நியாயத்தை, தீர்ப்பை சரியா சொல்லுவாங்க. அந்தளவு யோக்கியதைகூட கோட்டு சூட்டு போட்ட ஐக்கிய நாடு, யோக்கிய நாட்டு சபைக்கு கிடையாது. ராஜபக்சேவின் கொலைதாண்டவ கச்சேரிக்கு நல்ல பக்கவாத்தியம் போட்டாங்க" என்று போதையில் கலாய்த்த சுவருமுட்டியை நிதானப் படுத்தினார் சித்தன்.

நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லியேப்பா- அன்வர்பாய்.
"யோவ் நீ கேட்டா... அதுக்கு பதில் சொல்லனுமா? ஆளானப்பட்ட ஐக்கிய நாட்டு சபை கேள்விக்கே, சுண்டக்காய் நாடு ராஜபக்சே பதில் சொல்றதில்லே. உங்க வேலைய பாருங்கலேங்கிறாரு. கேட்கிறவங்களுக்கும் சூடு சொரனை இல்லே. என்ன மாதிரி தண்ணி கேசு ஆளுங்களா இருப்பாங்க போல" என்று போட்டுத் தாக்கிய சுவருமுட்டி சுந்தரத்துக்கு ஒரு டம்ளர் மோர் கொடுத்து படுக்க வைத்த சித்தன் இவன் இப்படித்தான் ஓவராயிட்டா ஏடாகூடமா போட்டுத் தாக்குவான். ஆனா உண்மையத்தான் பேசுவான். என்ன பன்றது, என்று நொந்தபடியே அன்வர்பாய் கேட்ட கேள்விக்கு வந்தார்.

"அந்த புத்த தேசத்து புதல்வர்கள் இந்தியா வந்ததே நிதிஉதவி, தமிழர்களின் மறுவாழ்வு பற்றி பேசுறதுதான்னு சொல்றாங்க. ஆனா அதுல உண்மை இல்லே. அவன் நிதியுதவி கேக்குறதுக்கு முன்னதான் நம்பாளு ஓடிப்போய் அவன் காலுகிட்ட நின்னு நான் தாரன்சாமி நிதியுதவின்னு சொல்றாங்களே பிறவு எதுக்கு அவன் இங்க வந்து நிதியுதவி கேட்கப்போறான். விஷயமே வேற. அதாவது ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு சம்பவம். நெடுங்கேணி காட்டுப்பகுதியில புலிகளை தேடி போயிருக்கு ராணுவம். பதுங்கியிருந்த புலிகள் கடுமையா தாக்கியிருக்காங்க. நூற்றைம்பது ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே காலி. அதே மாதிரி திரிகோணமலை காட்டுப் பகுதியிலேயும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. பலத்த அடி. வாங்கினவங்களும் சொல்லலை. கொடுத்தவங்களும் சொல்லிக்க முடியல. அதுக்கு முன்னாடி இரண்டு ராணுவ ஆயுத கிடங்கும் மர்மமா வெடிச்சு சிதறியிருக்கு. அதுவும் காட்டுக்குள்ள பதுங்கியிருந்த புலிகளோட வேலைன்னு ராஜபக்சே வட்டாரம் உறுதியா நினைக்குது. ஆனா என்ன பன்றது. சொன்னா வெட்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடுன்னு இப்போ இந்தியாகிட்ட வந்து நிக்கிகுறாங்க. அதாவது இந்தியாகிட்ட தொழில்நுட்பத்தை கேட்குறாங்க. ஜார்கண்ட், அசாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில போலீஸெல்லலாம் அந்த மாதிரி தொழிநுட்பத்தை பயன்படுத்தியிருக்கு. ஜார்கண்ட், அஸாம் மாநிலத்தில் காடுகளில் பதுங்கியிருக்குற நக்ஸல்பாரி இயக்கத்துக்கு எதிரா அந்தவித உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்காங்க. அங்க வேலைக்காகலை. ஆனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வனப்பகுதியல் சாம்ராஜ்யம் நடத்திகிட்டிருந்த சந்தனக்காடு வீரப்பனுக்கு எதிரா பயன்படுத்தின போலீஸ் ஜெயிச்சிருக்கு. அந்தமாதிரி டெக்னிக் யுத்திகள்தான் இப்போ எங்களுக்கு அவசியம் தேவைப்படுது. அப்பதான் காடுகளுக்குள்ள இருக்குற புலிகளை சுத்தமா அழிக்க முடியும்னு ஒத்த காலுல நின்னு கேட்டுகிட்டிருக்காங்க. அதையும் இந்தியா தூக்கி கொடுக்கப்போவுதா, இல்லையான்னு தெரியல.

இந்த நேரத்துலதான் அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தமிழ்நாடு கெவர்மெண்ட் கேக்குறத நாங்க ஓரளவாவது செய்யனும். வணங்காமண் கப்பலில் வந்திருக்கிற நிவாரண பொருட்களை தமிழ்நாட்டிலேயே இறக்கிடறோம். அதை செஞ்சிலுவை சங்கம் மூலமா உங்க நாட்டுக்கு அனுப்பறோம். அதை முகாம்களில் இருக்குற தமிழர்களுக்கு கொடுக்க நீங்க அனுமதிக்கனும் முதலில் இதை ஒத்துக்கிடனும். அப்பதான் மத்ததெல்லாம் சுமூகமா போகும்னு கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருக்கு. "ஆகட்டும்சாமி. நிங்க சொல்லித்தான இம்புட்டும் நடத்திட்டு வந்தோம். நீங்க சொல்லித்தான அம்புட்டு கொலைகளையும் செய்தோம். இப்போ நீங்க சொல்றமாதிரியே நிவாரண பொருட்களை அனுமதிக்கறோம்னு தலையாட்டியிருக்காங்க பக்சே சகோதரர்கள்.

ஏதோ வயசுல பெரிய மனுஷன். தமிழ்நாட்டு முதல்வர். இம்புட்டு நாளா வச்ச கோரிக்கையதான் நாம கண்டுக்கிடலை. இதையாவது சும்மாங்காட்டியும் நாம செய்துக்கொடுப்போம். அவருக்கும் ஒரு மரியாதை. நமக்கும் ஒரு குடைச்சல் குறைந்த மாதிரின்னு பேசி முடிச்சிருக்காங்க. அதன் பிறவுதான் இந்திய வெளியுறவுத்துறை நிவாரண கப்பல் வணங்காமண் சென்னை துறைமுகத்துகுள்ள அனுமதிக்கறதா அறிக்கை விட்டிருக்கு இந்தியா. இதுதான் அந்த சந்திப்பின் பின்னணி" என்றார் சித்தன்.

எப்படியோ..கலைஞர் இதை சொல்லியே காலத்தை ஒட்டிடுவாரு. நாங்க சொல்லித்தான் வணங்காமண் நிவாரணம் இலங்கை தமிழருக்கு போகுதுன்னு ஊர் முழுக்க கூட்டம் போடுவாறு- கோட்டை கோபாலு.

அவுரு போடுறாரோ இல்லையோ. நம்ப திருமா, வீரமணி, சுபவீ தரப்பு கட்டாயம் போடும். திருச்சியில ஒரு கூட்டம். இந்த மூனுபேரும் பேசினாங்க. எங்க தமிழினத்தின் தலைவர் சொல்லியும் கண்டுக்காம இருக்கிற மத்திய அரசே அப்டீன்னு நல்லா சவுண்ட் விட்டாங்க. வணங்காமண் நிவாரணப் பொருள் அங்கபோய் சேர நடவடிக்கை எடுக்கனும். இல்லாட்டி பெரிய போராட்டமே வெடிக்கும்னு சவுண்ட் கூட்டினாங்க. இப்போ அது மாதிரியே நடந்துடுச்சு. இனிமே கலைஞர் சொல்லித்தான் நிவாரணம் போய் சேருதுன்னு ரவுண்ட் கட்டி சவுண்ட் விடுவாங்க. "ஏன்யா. இதே மாதிரிதான முன்ன போர் நிறுத்தம்னு சவுண்ட் விட்டீங்க. அதை கொஞ்சம்கூட சென்ட்ரல் கவர்மெண்ட் கேட்கலியே. ஒரே நாளுல 25,000 தமிழர்களை நசுக்கி, எரிச்சு கொன்னுபோட்டாங்களேன்னு எல்லாம் யாரும் கேட்டுடக்கூடாது" - போதை தெளிந்த சுவருமுட்டி.

ஆமாம், உடனே எங்க தமிழின தலைவரைத்தான் குறை சொல்வீங்க. அம்மா என்ன செய்தாங்க. எலக்ஷன் அப்போ ஈழத் தமிழர்களுக்காக சவுண்ட் விட்டாங்க. அதோட சரி. இப்போ கொடைநாடு குளுகுளு எஸ்டேட் பங்களாவுள படுத்துகிட்டு தனிஈழம் மேப் வச்சிகிட்டு யோசிக்குறாங்க போல. பிறவு ஒரு சத்தத்தையும் காணல. நம்ப வைகோ, தா.பாண்டியன், ராமதாஸ் எல்லாம் அதை ஏன்னு முதலில் கேட்கட்டுமே என பதிலடி கொடுத்தார் கோட்டை கோபாலு. அலப்பறை டீமுக்குள்ளாகவே கோஷ்டி சண்டை வந்துடுமே என பயந்த சித்தன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக சொல்லி எழுந்தபடியே கடைசியா ஒரு செய்திபா...

"பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த முக்கிய கதர் சட்டைக்காரர் திருச்சி வேலுசாமி இருக்காரே, அவரோட மகனுக்கு வருகிற ஜீலை ஒன்னாம் தேதி கல்யாணம். மண்டபம் பார்த்து பெரிய அளவில் செய்வதாகத்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்பாடு. இப்போ தீடீர்னு அதை மாத்திகிட்டாரு. பத்திரிக்கை ஏதும் அடிக்கலை. கல்யாண மண்டபமும் பார்க்கலை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைத்து மிக எளிமையா நடத்த ஏற்பாடு. உறவினர்கள் எல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி பார்த்தும் வேலுசாமி கேட்கலை. நான் இதுவரை எந்த ஈழ ஆதரவை ஆதரித்து பேசி வந்தேனோ, அதுவே பெரும் சோகத்தில் இருக்கிறது. போராளி புலிகள் எல்லாம் பெரிய இழப்பை சந்தித்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழலில் நானே கல்யாண மண்ணபம் பிடித்து படோடமாக கல்யாணத்தை நடத்துவதென்பது சரியல்ல. வேறு யார் வேண்டுமானாலும் அந்த காரியத்தை செய்யலாம். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டாராம். முக்கியப் பிரமுகர்கர்களை, சக ஈழ ஆதரவு இயக்கத்தவர்களைகூட அழைக்காமலேயே மகன் திருமணத்தை நடத்தப் போகிறார். இப்படியும் ஒரு காங்கிரஸ்காரர்" என்றபடியே நடந்தார்

சித்தன்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

1 Comment:

நிலவு பாட்டு said...

மன்னிக்கவும் தலைப்பு மாறிவிட்டது,

சரியான தலைப்பு இதோ

தேசியத் தலைவர் இருப்பு முதல், 'வணங்காமண்' அரசியல் வரை