Tuesday, October 6, 2009

சீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி: குமுதம்

சுவருமுட்டி சுந்தரம் வேற எதாவது தகவல் இருக்கா என்றார்.
"நிறைய இருக்கு .....18-ம் தேதி மதுரையில இயக்குனர் சீமான் தலைமையில நாம் தமிழர் இயக்கம் பட்டைய கிளப்புது. மதுரையில ஆரம்பிச்சு அப்படியே ஒவ்வொரு மாவட்டமா நடத்திகிட்டு வரப்போறாராம். மதுரையில் நடக்குற கூட்டத்துக்கு இளைஞர்களின் வரவேற்பு வெகு ஜோராம். கட்டுக்கடங்காம திரண்டிருக்காங்க. அவர்களின் ஒரே உற்சாகம் தலைவர் பிரபாகரன் எப்போ வருவார். மீண்டும் எப்போ போராட்டத்தை முன்னெடுப்பாருங்கிறதுதான். அதுக்கு ஒரே பதில் இப்போதைக்கு ஒரு வருடம் அது பற்றி ஏதும் கேட்காதீங்க, பேசாதீங்க. ஒரு வருஷம் வரைக்கு நாம் நமது இயக்கத்தை பட்டிதொட்டி எல்லாம் வளக்கனும். பல லட்சக்கணக்கில் இளைஞர்களை திரட்டனும். வலுவான ஒரு அமைப்பை உறுவாக்கனும். இது நடந்து முடியுறதுக்கும் தலைவர் பிரபாகரன் வெளிய வர்றதுக்கும் சரியா இருக்கும். அதுக்கு பிறகு உங்களுக்கான பதிலை அவரே பேசுவாருன்னு சொல்லியிருக்கார். இளைஞர் பட்டாளம் உற்சாகத்தோட இருக்கு." என்ற சித்தன் இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. திமுக தரப்பு இதை அவ்வளவா ஏத்துக்க முடியாம இருக்கு. ஈழ மக்களுக்கான குரல் என்றால் அது கனிமொழி செய்யுறதா மட்டும் இருக்கனும்னு கலைஞர் விரும்புறார். கனியோட வளர்ச்சிக்கு சீமான் முட்டுக்கட்டையா இருப்பாருன்னு நினைக்குறாய்ங்க. அதனால இப்பவே அதுக்கு முட்டுக்கட்டைய போடுற வேலையும் தொடங்கியிருக்காராம். அதாவது சீமான் கூட்டத்துக்கு பக்கபலமா இருக்குற ஆளுங்கள ஓரு கட்டத்துல பிரிச்சு வெளியே கொண்டு வந்துடறது. இல்லே சீமான் மேல படிப்படியா வழக்கு போட்டு முடக்குறது. இதுக்கு எதிர்ப்பு இருந்தா, கைது படலத்தப்பவே மறு பக்கம் ஈழத் தமிழர்களுக்காக உண்மையான ஆதரவு போராட்டம்னு கனிமோழி மூலமாகவோ, இல்ல சீறும் சிறுத்தை மூலமாகவோ நடத்திடறது. அப்படி செய்தா உண்மையான போராட்டம் காலியாயிடும் இல்லையா.. இப்படி நிறைய உள்ளடி வேலையும் திட்டமா வச்சிருக்காங்கன்னு சேதி கசிஞ்சிருக்கு. பொருத்திருந்து பார்ப்போம்" என்றார்.
அடப்பாவிங்களா, இப்பத்தான் உறுப்படியா மரக்கன்னு நடற வேலையே தொடங்குது. அதுக்குள்ள சுடுத்தண்ணி ஊத்துற திட்டத்தை வச்சிருந்தா நாடு உறுப்படுமா?
நாடு உறுப்படுறதா முக்கியம், தன் குடும்பம் உறுப்படறதுதான முக்கியம். மத்திய அரசு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி வச்சாதான நல்லா இருக்க முடியும். எப்படியோ தன் மகள் கனி மூலமா நல்லத செய்யுறதா காய் நகர்த்தி கடைசியில அங்க அதிகாரமே இல்லாத ஒரு பொம்மை முதல்வர் ஆட்சியை கொண்டுவந்துட வச்சிடறதுதான் முக்கியம். தமிழர்களுக்கு நல்லத செய்ததா ஒரு பேரு. அப்படியே எங்க சகுனி வேலைக்கெல்லாம் துணையா இருந்தீங்கன்னு சென்ட்ரல் அரசுகிட்டேயும் ஒரு நல்ல பெயர வாங்கிடுவாரு. அரசியல்ல சனுனிகளுக்குதான முக்கியத்துவம்.

--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

3 Comments:

Unknown said...

ithil entha alavukku unmai irukum endru theriyavillaiye ayya . aanal prabakaran uyirudan varum naalai nan aavaludan ethir paarkiren
eezha tamilar kanneer thudaikka avara mutium endra pala tamil nenjankalil avar paal varppaar nallathu ,.

சிறுத்தை said...

தோழர் நிலவு பாட்டு! என்னுடைய இந்த புது இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்தால் நன்றியுடையவன் ஆவேன்!

இறப்பில் கூட இல்லாத திராவிடம!!

http://siruthai.wordpress.com/2009/10/06/இறப்பில்-கூட-இல்லாத-திரா/

நன்றி!

தோழர் சிறுத்தை..

நிலவு பாட்டு said...

நன்றி நண்பரே, இந்த செய்தி ஏற்கனவே ஒரு முறை பதிவு செய்யப்பட்டு விட்டது. மீண்டும் உங்களுக்காக பதிவிடுகிறேன்.